கவண் விமர்சனம்
சமமற்ற இருவருக்குள் நடக்கும் சண்டைக்கு, பைபிளில் வரும் கோலியத், டேவிட் கதையை உதாரணம் காட்டுவார்கள். சிறுவனான டேவிட் உண்டிவில் கொண்டு ஆஜானபாகு கோலியத்தை வீழ்த்திவிடுவான். அப்படி, வில்லன் ஆகாஷ்தீப்பின் கார்பொரேட் டி.வி. நிறுவனமான ஜென் 1-ஐத் தகர்க்கிறார் முத்தமிழ் டி.வி. நிருபரான விஜய்சேதுபதி.
படத்தின் சர்ப்ரைஸ் விஷயமென்றால், அது பவர் ஸ்டார் வரும் காட்சிதான். முதல் முறையாக, அவர் தோன்றும் காட்சியொன்று ரசிக்கும்படியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அவர் பேசும் வசனமும் துணை புரிந்துள்ளது. எழுத்தாளர்கள் சுபா மற்றும் கபிலன் வைரமுத்துவின் வசனங்கள் படத்திற்கு உதவி செய்துள்ளன. ஆனால், டி.ராஜேந்தர் தான் வழக்கம் போல் இடம் பொருள் ஏவல் பிரக்ஞையின்றி அடுக்கு மொழியில் கடுப்பேற்றுகிறார். எனினும் க்ளைமேக்ஸில், 'வாடா என் மச்சி, வாழைக்காய் பஜ்ஜி' என டேபிளைத் தட்டிக் கொண்டே பாடும் பொழுது திரையரங்கில...