
டியூட் விமர்சனம் | Dude review
"தாலி முக்கியமில்லையா?""இல்ல. அதுக்குப் பின்னாடி இருக்கிற பொண்ணோட மனசுதான் முக்கியம்."
Z தலைமுறையினருக்கான ஒரு கொண்டாட்டமான படத்தில், புனிதமென சினிமா அடைகாத்து வந்த தாலி சென்ட்டிமென்ட்டைச் சுக்குநூறாக அறுத்தெறிந்து விட்டுள்ளார் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன். படத்தின் முதல் காட்சியே, நாயகன் தனது முன்னாள் காதலியின் திருமணத்திற்குப் சென்று கோபாவேசத்தில் யதேச்சையாக அவளது தாலியை அறுத்துவிடுகிறான். அவனை அடி வெளுத்து விடுகின்றனர். படம் இப்படி நகைச்சுவையாகத் தொடங்கினாலும், படம் மிக அழுத்தமாகத் தமிழ் சினிமா வியந்தோதி வந்த தாலி சென்ட்டிமென்ட்டை அடி வெளுத்துள்ளது. அந்த 7 நாட்கள் அம்பிகா, சின்ன தம்பி குஷ்பு, புதுப்பேட்டை சோனியா அகர்வால் என இந்த தாலி பல பெண்களைக் காவு வாங்கியுள்ளது. நாயகன் அணிவிக்கும் ஐடி கார்டைப் தாலியாகப் பாவித்துக் கண்ணில் ஒத்திக் கொள்ளும் முன்னாள் காதலி, கல்யாணத்திற்குப் பின...




