Shadow

Tag: மேட் டேமன்

சீனப் பெருஞ்சுவரைத் தாக்கும் வினோத மிருகங்கள்

சீனப் பெருஞ்சுவரைத் தாக்கும் வினோத மிருகங்கள்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
வில்லியம் கெரினும், பெரோ டோவாரும் வெடிமருந்தினைத் தேடி சீனா வருகிறார்கள். வழியில் வினோத மிருகத்தினால் அவர்கள் குழு தாக்கப்பட வில்லியமும் பெரோவும் மட்டும் உயிர் தப்புகின்றனர். 5500 மைல்கள் நீளம் கொண்ட சீனப் பெருஞ்சுவரைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஜெனரல் ஷாவ், உயிர் தப்பிய ஐரோப்பியர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கிறார். தொடரும் சம்பவங்கள், வினோத மிருகங்களிற்கு எதிரான போரில் வில்லியமைத் தலைமை தாங்கச் செய்கிறது. வில்லியமாக ஹாலிவுட் நாயகன் மேட் டேமன் நடித்துள்ளார். ஆனால், ‘தி கிரேட் வால்’ ஹாலிவுட் படமன்று. படத்தை இயக்கியுள்ளவர் சீன இயக்குநரான ஷாங் யிமோ (Zhang Yimou). சீனப் படங்களை இயக்கி பல விருதுகளைப் பெற்றுள்ள ஷாங் இயக்கும் முதல் நேரடி ஆங்கிலப்படமிது. படத்தின் பட்ஜெட் 150 மில்லியன் டாலர் என்பதன் மூலமே படத்தின் பிரம்மாண்டத்தை யூகிக்கலாம். சீனப் பெருஞ்சுவரில் படப்பிடிப...
ஜேசன் பார்ன் விமர்சனம்

ஜேசன் பார்ன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
குண்டடிப்பட்டு தன் நினைவுகளை இழந்து அல்லலுற்ற ஜேசன் பார்ன், மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஒரு கதாபாத்திரம். தன் கடந்த காலத்தை மறந்து தன்னைத் தானே தேடி வந்த ஜேசன் பார்ன், அனைத்து நினைவுகளும் மீண்ட நிலையில், தன் பழைய வாழ்க்கையில் இருந்து துண்டித்துக் கொண்டு தலைமறைவாக வாழ்கிறான். ஜேசனின் கடந்த காலம் பற்றியும், அவனது தந்தையைப் பற்றியும் ஒரு முக்கியமான தகவல், அவனை ஒரு தலையாகக் காதலித்த நிக்கி பார்சன்ஸ்க்குக் கிடைக்கிறது. கண் கொத்திப் பாம்பாகத் தொடரும் சி.ஐ.ஏ.வின் தலையீட்டை மீறி, தன் உயிர் போகும் முன் ஜேசனிடம் அந்தத் தகவலைக் கொடுத்து விடுகிறாள். தன் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு மர்மத்தை, மீண்டும் தேடிச் செல்கிறான் ஜேசன் பார்ன். தொடக்கம் முதலே படம் பயங்கர விறுவிறுப்பாகப் போகிறது. பேரி அக்ராய்டின் ஒளிப்பதிவை தனது கச்சிதமான படத்தொகுப்பின் மூலமாக க்றிஸ்டோஃபர் ரெளஸ், ஹாலிவுட்டின் வழக்கமானதொரு நாயகன் அறிமு...