Shadow

சீனப் பெருஞ்சுவரைத் தாக்கும் வினோத மிருகங்கள்

Matt Damon in The Great Wall

வில்லியம் கெரினும், பெரோ டோவாரும் வெடிமருந்தினைத் தேடி சீனா வருகிறார்கள். வழியில் வினோத மிருகத்தினால் அவர்கள் குழு தாக்கப்பட வில்லியமும் பெரோவும் மட்டும் உயிர் தப்புகின்றனர். 5500 மைல்கள் நீளம் கொண்ட சீனப் பெருஞ்சுவரைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஜெனரல் ஷாவ், உயிர் தப்பிய ஐரோப்பியர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கிறார். தொடரும் சம்பவங்கள், வினோத மிருகங்களிற்கு எதிரான போரில் வில்லியமைத் தலைமை தாங்கச் செய்கிறது.

வில்லியமாக ஹாலிவுட் நாயகன் மேட் டேமன் நடித்துள்ளார். ஆனால், ‘தி கிரேட் வால்’ ஹாலிவுட் படமன்று. படத்தை இயக்கியுள்ளவர் சீன இயக்குநரான ஷாங் யிமோ (Zhang Yimou). சீனப் படங்களை இயக்கி பல விருதுகளைப் பெற்றுள்ள ஷாங் இயக்கும் முதல் நேரடி ஆங்கிலப்படமிது. படத்தின் பட்ஜெட் 150 மில்லியன் டாலர் என்பதன் மூலமே படத்தின் பிரம்மாண்டத்தை யூகிக்கலாம். சீனப் பெருஞ்சுவரில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காத நிலையில், சிங்தாவோ (Qingdao) மாகாணத்தில் பெருஞ்சுவருக்கான ‘செட்’ போடப்பட்டுப் படமாக்கப்பட்டுள்ளது.

ஃபிப்ரவரி 3 ஆம் தேதி அன்று, 104 நிமிடங்கள் கால அளவைக் கொண்ட இப்படத்தை ஹன்சா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.