Shadow

Tag: யுவராஜ்

My Lord – உள்ளுக்குள் உலுக்கிய படம்

My Lord – உள்ளுக்குள் உலுக்கிய படம்

சினிமா, திரைச் செய்தி
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' மை லார்ட் (My Lord)' எனும் திரைப்படம், பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மாரிசெல்வராஜ், "நேற்று நான் தொடர்ந்து இரண்டு படங்கள் பார்த்தேன். அதில் ஒன்று இந்த ‘மை லார்ட்’. இந்தப் படம் முடிந்த பிறகு, என்னோட அசிஸ்டன்ட்ஸோட சேர்ந்து அதிக நேரம் விவாதம் பண்ண வைத்த படம் இது. இந்தப் படம் ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கேட்கிறது. எளிய மனிதன் எல்லாத்தையும் இழந்த பிறகு, அவனிடம் மீதமிருக்கும் கடைசி ஆயுதம் என்ன? அந்த கேள்வியையே இந்தப் படம் ரொம்ப ஆழமாக முன்வைக்கிறது. சசிகுமார் சார் கேரக்டர், ஒரு எறும்பு, ஒரு எலி, ஒரு பூனை வரை காப்பாற்றுற மனிதன். ஆனா,...
My Lord – மனிதநேயத்தோடு படம் எடுப்பவர் ராஜுமுருகன்

My Lord – மனிதநேயத்தோடு படம் எடுப்பவர் ராஜுமுருகன்

சினிமா, திரைச் செய்தி
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' மை லார்ட் (My Lord)' எனும் திரைப்படம், பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் த.செ.ஞானவேல், "எந்த நெருக்கடியிலும், யாருடைய மனசையும் காயப்படுத்தாமல், ஒரு பொறுப்புணர்வோடு பேசுவதும் எழுதுவதும் ரொம்ப முக்கியம். அந்த வகையில் நான் மனசார பாராட்ட விரும்புவது ராஜுமுருகன். ஒவ்வொரு எழுத்தையும் ஒரு பொறுப்பாக நினைத்து, கருத்தோடு, மனிதநேயத்தோடு படம் எடுக்கிறவர். அவருடைய சிந்தனைக்குத் துணை நின்றதே தான் இந்தப் படம் இவ்வளவு அழகாக உருவாகக் காரணம். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் சசிகுமார் சாரிடம் நான் சொன்ன முதல் வார்த்தை 'நன்றி சார்'...
மை லார்ட் – மக்களுக்கான சினிமா

மை லார்ட் – மக்களுக்கான சினிமா

சினிமா, திரைச் செய்தி
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' மை லார்ட் (My Lord)' எனும் திரைப்படம், பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய குரு சோமசுந்தரம், "இயக்குநர் ராஜு முருகன் அவர்களை நான் முதலில் குக்கூ படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்காகத் தான் சந்தித்தேன். அவர் எழுத்துக்களை முன்பே படித்திருக்கிறேன்.அவர் எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் கொண்ட அனுபவம், சமூகத்தின் மீது கொண்ட அக்கறை, அதெல்லாம் அவரது படைப்புகளில் தெளிவாக தெரிகிறது. ஜோக்கர் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்குப் பெருமை. இந்தப் படத்திலும் ஒரு நல்ல கதாபாத்திரம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சி. சசி சார் உடன் நடித்தது ரொம்ப சந்தோஷம...
Peddi – ஆக்‌ஷன் ஸ்போர்ட்ஸ் டிராமா

Peddi – ஆக்‌ஷன் ஸ்போர்ட்ஸ் டிராமா

Movie Posters, அயல் சினிமா, கேலரி, சினிமா, திரைத் துளி
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்டமான பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. கிராமத்துப் பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா வகைமையைச் சேர்ந்த படம். முன்னதாக மார்ச் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஏப்ரல் 30 என்ற முக்கியமான கோடை வெளியீட்டுத் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறை காலத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனுடன், படக்குழு தீவிரமான ப்ரோமோசன் பணிகளுக்கும் தயாராகி வருகிறது. வெளியீட்டு தேதி போஸ்டரில், ராம் சரண் நீளமாக அலங்கோலமாக இருக்கும் முடி, கனமான தாடி, மூக்கில் அணிந்த வளையம் ஆகியவற்றுடன் தனித்துவமாகத் தெரிகிறார். புகை சூழ்ந்த பரபரப்பான சூழலில், சோர்வுறும் கடுமையான முகபாவனையுடன் நிற்கும் மக்கள் கூட்டத்தி...
கயாடு லோஹரின் பள்ளிச்சட்டம்பி

கயாடு லோஹரின் பள்ளிச்சட்டம்பி

இது புதிது
இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி (Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' எனும் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது நடிகையின் கதாபாத்திரத்தைச் சித்தரிக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.படத்தில் அவரது கேரக்டரின் பெயரைப் படக்குழுவினர் போஸ்டரில் வெளியிடவில்லை. கன்னடத் திரைப்படமான 'முகில்பேட் (Mugilpete)' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கயாடு, 'பத்தொன்பதாம் நூற்றாண்டு' படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். அப்படத்தில் அவரது நடிப்பு பலரது கவனத்தைக் கவர்ந்தது. பின்னர் கடந்த ஆண்டு வெளியான டிராகன் எனும் தமிழ்த் திரைப்படம், அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பள்ளிச்சட்டம்பி - கயாடு லோஹரின் மூன்றாவது மலையான திரைப்படமாகும். துல்கர் சல்மான் நடிக்கும் 'ஐ எம் கேம்' படத்தில...
வித் லவ் விமர்சனம் | With Love review

வித் லவ் விமர்சனம் | With Love review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மனதை வருடும் ஒரு ஃபீல் குட் படைப்பாகக் கவர்கிறது 'வித் லவ்' திரைப்படம். ஒரு கவித்துவமான தமிழ்த் தலைப்பையே படத்திற்குச் சூட்டியிருக்கலாம். பள்ளிப் பருவத்தில் பூக்கும் பதின்மத்துக் காதலைச் சொல்லாமலே விட்டுவிடும் சத்யசீலனும் மோனிஷாவும், தங்கள் முதல் காதலரைத் தேடித் தங்கள் காதலித்ததைத் தெரியப்படுத்த நினைக்கின்றனர். அந்த அழகான பயணத்தை நேர்த்தியாகவும் நகைச்சுவையாகவும் சொல்லியுள்ளார் அறிமுக இயக்குநர் மதன். நாயகனின் நண்பன் தினேஷாக ஹரிஷ் குமார் நடித்துள்ளார். ஹரிஷ்க்கு, முதலும் நீ முடிவும் நீ, டாடா, லவ்வர் என பலமுறை அசத்திய கதாபாத்திரத்தையே வழங்கியுள்ளனர். அவரது முழுத் திறமைக்குத் தீனி இல்லாத சிறு பாத்திரம் என்றாலும், க்ளைமேக்ஸில் மீண்டும் தோன்றி கலகலக்க வைக்கிறார். "அவளோட முடிவு எதுவா இருந்தாலும் ரெஸ்பெக்ட் பண்ணு" - நாயகியின் அக்காவாக நடித்துள்ள RJ ஆனந்தி பேசும் வசனம். "நீ அவர்ட்ட ஏன்ன்னு எப்ப...
With Love – கடற்கரையில் ட்ரோன் ஜாலம்

With Love – கடற்கரையில் ட்ரோன் ஜாலம்

சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான ஒரு தருணமாக, ‘வித் லவ் (With Love)’ திரைப்படக் குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான ட்ரோன் ஷோ ஒன்றைப் பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 டிரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன், அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர். Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவ...
“நீ நடி கண்ணா!” – With Love ரஜினிகாந்த் | அபிஷன் ஜீவிந்த்

“நீ நடி கண்ணா!” – With Love ரஜினிகாந்த் | அபிஷன் ஜீவிந்த்

சினிமா, திரைச் செய்தி
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் (With Love)” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், “அபிஷன் ஒரு தூய மனம் கொண்டவர். அவர் மாறாமல் அப்படியே இருக்க வேண்டும். சௌந்தர்யா அக்காவின் பெயருக்கு பக்கத்தில் என் பெயர் வருவதையே நான் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் நினைக்கிறேன். வித் லவ் படத்திற்கு முன் நீங்கள் பார்த்த சௌந்தர்யா அக்கா, இந்தப் படத்திற்கு பிறகு நீங்கள் பார்க்கும் சௌந்தர்யா அக்காவிலிருந்து வேறுபட்டவராக இருப்பார். அபிஷந்திற்குள் இருந்த ஒரு insecurity-யை மாற...
“With Love: அனஸ்வராவின் நடிப்பிற்கு விசில் அடித்தேன்” – ஷான் ரோல்டன்

“With Love: அனஸ்வராவின் நடிப்பிற்கு விசில் அடித்தேன்” – ஷான் ரோல்டன்

சினிமா, திரைச் செய்தி
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் (With Love)” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் மணிகண்டன், “நான் இரண்டு நாள் முன்னால் இந்தப் படத்தை பார்த்தேன். உண்மையிலேயே படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம், இதோட சிம்பிளிஸிட்டி. சின்னச் சின்ன எமோஷன்ஸை எவ்வளவு அழகா, பிரமாண்டமா படமாக்கியிருக்காங்கன்னு பார்க்கும்போது ஆச்சர்யமா இருந்தது. பெர்ஃபார்மன்ஸ், ரைட்டிங், சினிமேட்டோகிராஃபி, எடிட்டிங் என எல்லாமே ஸ்கிரிப்ட்டுக்காக வேலை செய்திருக்கிறார்கள். எதுவுமே ஸ்கிரிப்ட்டைக் கெடுக்காமல் மிக அழகாக...
அபிஷன் – அனஸ்வரா மிக க்யூட்டான ஜோடி | With Love

அபிஷன் – அனஸ்வரா மிக க்யூட்டான ஜோடி | With Love

சினிமா, திரைச் செய்தி
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் (With Love)” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, “இப்படத்தின் கதையை மிக அழகாக சொன்ன மதனுக்கு நன்றி. கதை சொன்னபோது மறுக்கவே தோணவில்லை. திரையிலும் மிக அழகாக வந்துள்ளது. தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம், மகேஷ் இருவருக்கும் நன்றிகள். அபிஷன், அனஸ்வரா, மற்றும் நடிகர் குழுவிற்கு நன்றி. படத்தை எடுக்கும் போது ஸ்கூல் நினைவுகள் எல்லாம் வந்தது. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார். நடிகர் ஹரீஷ், “எனக்கு மதன் ரொம்ப நாள...
மை லார்ட் – எளிய மக்கள் மீதான அதிகார அத்துமீறல்

மை லார்ட் – எளிய மக்கள் மீதான அதிகார அத்துமீறல்

சினிமா, திரைத் துளி
சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மை லார்ட் (My Lord)’ எனும் திரைப்படம், பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்குப் பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்புப் பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி.ஆர்.பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்ற, நடனத்தை எம்.ஷெரீப்பும், சண்டைக் காட்சிகளை பி.சி. ஸ்டன்ட்டும் அமைக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சுரண்டலை சட்டயர் (Satire) பாணியில் விவரிப்பதுடன் ஃபேமிலி என்டர்டெய்னராகவும் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார். இதனைத் தமிழகம் முழுவதும் ஸ்ரீ குமரன் ஃபில...
சிறைக்குப் பின் ராவடி | L.K. அக்‌ஷய் குமார்

சிறைக்குப் பின் ராவடி | L.K. அக்‌ஷய் குமார்

சினிமா, திரைத் துளி
பஸில் ஜோசப், L.K. அக்‌ஷய் குமார் ஆகிய இருவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் 'ராவடி' எனும் திரைப்படம், மலையாளத்திலும் அதே பெயரில் தயாராகி வருவதுடன், இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் 'ராவடி' எனும் திரைப்படத்தில், சிறை நாயகன் L.K . அக்‌ஷய் குமார், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பஸில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்தத் திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்...
மம்மூட்டி, மோகன்லால் நடிக்கும் ‘பேட்ரியாட்’

மம்மூட்டி, மோகன்லால் நடிக்கும் ‘பேட்ரியாட்’

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கத் தயாராக இருக்கும் "பேட்ரியாட்" படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அட்டகாசமான போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பிரம்மாண்டமான படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கும் போஸ்டரை, 40-க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த மல்டி-ஸ்டாரர் திரைப்படம், 2026 ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் தமிழ்ப் போஸ்டரை அட்லீயும், தெலுங்குப் போஸ்டரை விஜய் தேவரகொண்டாவும், ஹிந்திப் போஸ்டரை கரண் ஜோர்ரும் வெளியிட்டனர். மலையாளத்தில், துல்கர் சல்மான், பிரித்விராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, உன்னி முகுந்தன், பாசில் ஜோசப், ஜெயசூர்யா, சன்னி வேய்ன், நஸ்லென், நஸ்ரியா நசீம், கீர்த்தி சுரேஷ்...
சிறை விமர்சனம் | Sirai review

சிறை விமர்சனம் | Sirai review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்த வருடத்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது சிறை திரைப்படம். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரியின் முதற்படத்திலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளார். வேலூர் சிறையில் இருக்கும் அப்துல் ரெளஃப் எனும் கைதியை சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார் கதிரவன் எனும் போலீஸ் ஏட்டு. அந்தப் பயணத்தின் வாயிலாக, நீதித்துறையின் போதாமைகள், அழுத்தமான காதல் கதை, போலீஸார்க்கு நேரும் சங்கடம், கொம்பு முளைத்தது போல் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் போலீஸாரின் ஆணவப்போக்கு என அழுத்தமான கதை சொல்லியுள்ளார் இயக்குநர். அப்துல் ரெளஃபாக L.K.அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமாரின் மகனாவார். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட படமிது. அதற்காக லலித் குமார், டாணாக்காரன் தமிழிடம், விசாரணை போலொரு கதை கேட்டுள்ளார். தமிழ் சொன்ன உண்மைக...
சிறை | வெளியீட்டுக்கு முன்பே காரைப் பரிசாக வாங்கிய இயக்குநர்

சிறை | வெளியீட்டுக்கு முன்பே காரைப் பரிசாக வாங்கிய இயக்குநர்

சினிமா, திரைச் செய்தி
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” ஆகும். வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், பட வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் SS லலித் குமார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றைப் பரிசாக வழங்கினார். டாணாக்காரன் இயக்குநர் தமிழ், “லலித் சார் என்னிடம் விசாரணை மாதிரி ஒரு படம் செய்ய வேண்டும் என்றார். அவர் நினைத்திருந்தால் அவர் மகனை எப்படி வேண்டுமானாலும் ஒரு படத்தில் நடிக்...