
“இது தான் சக்சஸ்” – செளந்தர்யா ரஜினிகாந்த் | With Love
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, வித் லவ் (With Love) திரைப்படம் கடந்த 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழு, பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பேசிய நடிகை அனஸ்வரா, "இரண்டு நாட்களுக்கு முன் ரஜினி சாரைச் சந்தித்த தருணம் வாழ்வில் மறக்க முடியாதது. அவர் படம் பார்த்து சொன்ன ரெஸ்பான்ஸ் எங்களுக்கெல்லாம் ரொம்ப அர்த்தமுள்ளதா இருந்தது" என்றார்.
தயாரிப்பாளர் மகேஷ், "மதன் எனக்கு ரொம்ப நாளா தெரிஞ்ச பையன். லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களில் அவன் வேலை பற்றி எனக்குத் தெ...
















