Shadow

Tag: யெஸ்.பாலபாரதி

மரப்பாச்சி பொம்மையின் சாகசம்

மரப்பாச்சி பொம்மையின் சாகசம்

புத்தகம்
செம்மரக்கட்டையால் செய்யப்பட்ட மரப்பாச்சிப் பொம்மை ஒன்று, ஷாலினி எனும் சிறுமிக்குக் கிடைக்கிறது. அப்பொம்மை திடீரெனப் பேசத் தொடங்குகிறது. ஷாலினிக்குக் கிடைக்கும் சுவாரசியமான அனுபவங்கள் தான் இந்நூல். சுற்றுச் சூழல் பற்றிய புரிதலை மிக எளிமையாகச் சொன்ன பாலபாரதியின் சிறுவர் நூலான 'ஆமை காட்டிய அற்புத உலகம்' போல், மரப்பாச்சியும் மிக மிக முக்கியமான சமூக விஷயமொன்றைத் தொடுகிறது. பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பாற்ற தொடுதல் (Good touch, Bad touch) பற்றி மிக எளிமையானதொரு புரிதலை ஒரு கதையின் மூலம் உருவாக்குகிறது. நல்ல, கெட்ட என்ற சொல்லுக்கு மாற்றாக பாதுகாப்பான, பாதுகாப்பாற்ற எனும் சொற்களைப் பாலபாரதி பயன்படுத்தியுள்ளது சிறப்பாய் உள்ளது. தனக்கு நேருவதைப் பெற்றோர்களிடம் சொல்லவே பூஜா தயங்கும் பொழுது, மரப்பாச்சிப் பொம்மை அவளுக்கு க்யூட்டாய் உதவுகிறது. உதவுவதோடு அல்லாமல், மரப்பாச்சியான செஞ்சந்தன இளவரசி பூஜாவ...
ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர்

ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர்

சமூகம்
“எதிர்காலத்தில் என் குழந்தை தன் பணிகளை தானே செய்து கொள்ளும்படி வளர்வானா?” எல்லா ஆட்டிச நிலைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இக்கேள்வி இருக்கும். உண்மையில் எல்லோருக்கும் அது சாத்தியமா என்பதை நான் அறியேன். ஆனால் பலருக்கும் அது சாத்தியம் என்பதை நம்புகிறேன். நம் குழந்தை அந்த இடத்தை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். புராணங்களில் சொல்லப்பட்ட பூமா தேவியை விட, அதிகம் பொறுமை மிக்கவர்களாகp பெற்றோர் மாறவேண்டும். ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்வதிலோ, கேட்பதிலோ எப்படி நம் குழந்தைகள் சலிப்படைவதில்லையோ, அதைப்போல பல மடங்கு நாமும் கற்றுக் கொடுப்பதில் மாறவேண்டும். திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். இன்னும் கூடுதலாக அவர்களின் ஆர்வம் எதில் இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்கவேண்டும். அதில் ஆட்டிச நிலைக்குழந்தைகளை ஈடுபடுத்தவேண்டும். அவர்கள் அதைப் பற்றிக்கொள்ள, சில ...
கதைகள் சொல்லும் சுண்டைக்காய்

கதைகள் சொல்லும் சுண்டைக்காய்

கட்டுரை, புத்தகம்
ஏழு கடல், ஏழு மலை தாண்டியிருக்கும் வியாசபுரியை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும். அந்நாட்டில், கற்றல் என்பது கதைகளைப் படிப்பது மூலமாக மட்டுந்தானாம். அதாவது பள்ளிகளில் கதைகளை மட்டுமே சிலபஸாக உடைய நாடு அது. வாவ்! அந்நாட்டின் இளவரசன் ஒரு சாபம் காரணமாக சுண்டைக்காயாக மாறி, ஐந்தாம் வகுப்பு படிக்கும் தமிழகத்துச் சிறுவன் சூர்யா கையில் சிக்குகிறான். ‘சுண்டைக்காய் இளவரசன்’ எனும் சிறுவர் நாவலின் கதைக்கரு இதுதான். கதைக்குள் கதையென, சூர்யாவிற்கு இளவரசன் மூன்று மாயாஜாலக் கதைகளைச் சொல்கிறான்.இந்தப் புத்தகத்தை சிறுவர்களுக்கு வாங்கித் தருவதில் ஒரு சின்ன சிக்கலுள்ளது. இளவரசன் அறிமுகமாகித் தன்னைப் பற்றிச் சூர்யாவிடம் சொல்லி முடித்ததும், அவனது நண்பர்கள் “வெடி தேங்காய்” பற்றிச் சொல்லி, அதன் செய்முறையையும் சுவையையும் பற்றிச் சிலாகித்துச் சொல்கிறார்கள். படிக்கும் எவருக்கும் எச்சில் ஊறச் செய்யும். சிறுவர...
அங்கீகரிக்கப்பட்ட பால்ய கனவு

அங்கீகரிக்கப்பட்ட பால்ய கனவு

கட்டுரை, புத்தகம்
'ஆமை காட்டிய அற்புத உலகம்' எனும் நல்லதொரு சிறுவர் நூலை எழுதியுள்ளார் எஸ்.பாலபாரதி. கதைக்குள் நுழையும் முன்பே ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அது, 7 வயதான சமர்சேந்தனின் நூல் பற்றிய மதிப்புரை ஆகும். சிறுவர் நூலொன்றை ஒரு சிறுவன் எப்படி உள்வாங்கிக் கொண்டான் என்று அறிந்து கொள்ள முடிந்தது. அதுவும் அச்சிறுவன் பொறாமைப்பட வைக்குமளவு மிகச் சிறந்த வாசகன். கடையில் வாங்கிய புத்தகத்தை, வீட்டுக்குப் போகும் வழியிலேயே படித்து முடிக்குமளவு அதி தீவிர புத்தகக் காதலன். அவனது மதிப்புரையில் இருந்த ஓர் அட்டகாசமான கேள்வி மிகவும் யோசிக்க வைத்தது. “சுறா மட்டும் ஃப்ரெண்ட்லியா இல்லாமல் ஏன் வயலன்ஸா இருக்குது?” ‘கதையில் ஏன் வில்லன் வேண்டும்?’ என்பதாக அந்தக் கேள்வியைப் புரிந்து கொண்டேன். வில்லன்களைச் சிருஷ்டிப்பது பெரியவர்கள் தானோ? சிறுவர்கள் உலகில் அனைவருமே நண்பர்கள் தான் போலும். ஆக, எழுத்தாளரினுடைய ஜம்பம், பிரயத்தனம்...
சந்துருவுக்கு என்னாச்சு?

சந்துருவுக்கு என்னாச்சு?

புத்தகம்
சுமார் 7 வயது மதிக்கத்தக்க தருண் எனும் சிறுவனின் மனதில் எழும் கேள்வியான "சந்துருவுக்கு என்னாச்சு?" என்பதுதான் புத்தகத்தின் தலைப்பு. குழந்தைகள் உலகம் கேள்விகளால் நிரம்பியது. அவர்களின் கேள்விகளை எதிர்கொள்வது போல் பெரியவர்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கும் விஷயம் வேறில்லை. அப்படித்தான், தருணின் கேள்வி அவனது அம்மா சரஸ்வதியை அதிர்ச்சியடைய வைக்கிறது. கொஞ்சம் அதட்டலுடன், அக்கேள்வியை எரிச்சலுடன் கடந்து விடுகிறார் சரஸ்வதி. இதற்கே தருண் தன் தந்தைக்குப் பயந்து, அவர் கொஞ்சம் தள்ளிச் செல்லும்வரை காத்திருந்தே தன் தாயிடம் கேட்கிறான். தந்தை முன் கேள்விகள் கேட்க தருண் ஏன் தயங்க வேண்டும்? "எங்கம்மா போறோம்?" "தொரைக்கு எங்கன்னு சொன்னாத்தான் வருவீங்களோ?" 'உனக்கு கேள்வி கேட்கும் அதிகாரமில்லை' என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் விதைப்பதுதான் அவர்கள் மீது செலுத்தப்படும் உச்சபட்ச உளவியல் வன்முறையாக இருக்கும். இத்த...
‘துலக்கம்’ – தெளிவிற்கான தொடக்கம்

‘துலக்கம்’ – தெளிவிற்கான தொடக்கம்

கட்டுரை, புத்தகம்
ஆட்டிசம் பற்றிய புரிதலைப் பரவலாக்கும் முயற்சியில், ‘ஆட்டிசம் – சில புரிதல்கள்’ என்ற புத்தகத்தை 2013 இல் எழுதினார் பாலபாரதி. ஆனால் இத்தகைய துறை சார்ந்த புத்தகங்கள் எவரையும் சுலபமாகக் கவர்ந்து விடுவதில்லை. ‘ஆட்டிசம் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, நாங்க என்ன பண்ணப் போறோம்?’ என்ற மெத்தனம் காரணமாக இருக்கலாம். அவர்களுக்கு பாலபாரதி சொல்லும் இரண்டு விஷயங்கள் என்னவென்றால்,உங்கள் சுற்றுவட்டத்தில் இருக்கும் குழந்தைகளை அடையாளம் காணவும், அக்குழந்தைகளுக்கு முன்கூட்டிய பயிற்சிகளைத் தொடங்குவதற்கும் நீங்கள் உதவக்கூடும். அதற்கு ஆட்டிசம் பற்றிய புரிதல் உங்களுக்கும் அவசியம்.குறைவான ஆட்டிசப்பாதிப்பு உள்ள குழந்தைகளை சாதாரணப் பள்ளிகளுக்கு அனுப்புங்கள் என்று மருத்துவர்களும் தெரபிஸ்ட்களும் பரிந்துரைக்கின்றனர். ஆனால், இக்குழந்தைகளை பெரும்பாலான பள்ளிகள் சேர்த்துக் கொள்ள மறுத்துவிடுகின்றன. அதற்கு பள்ளி ச...