Shadow

Tag: ரசூல் பூக்குட்டி

ஐந்து வருடங்களை  நஜீப் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணித்துள்ளேன். – ப்ருதிவிராஜ்

ஐந்து வருடங்களை நஜீப் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணித்துள்ளேன். – ப்ருதிவிராஜ்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
பிராந்தியத்தை தாண்டி, மாநில எல்லையை தாண்டி இந்திய நடிகர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் படத்திற்கு விளம்பரம் செய்து உதவுவது மிகவும் ஆரோக்கியமான விஷயம். அந்த வகையில், ரசிகர்கள் நீண்ட நாட்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் தேசிய விருது பெற்ற பிளெஸி இயக்கத்தில், பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள ‘தி கோட் லைஃப்’ படத்தின் முதல் பார்வையை ’பாகுபலி’ மூலம் இந்திய ரசிகர்கள் எல்லோர் மனதையும் கவர்ந்த நடிகர் பிரபாஸ் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஏப்ரல்10, 2024 அன்று வெளியாகிறது. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை மிகப்பெரிய சர்வைவல் அட்வென்சர் என்கிறது படக்குழு. இதுபோன்ற சர்வைவல் அட்வென்சர் கதைகள் இந்திய சினிமாவில் அரிதாகவே வருகிறது. அதுவும் இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்பது இந்தப் படத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. இந்தப் படத்தின் முதல் பார்வையை...
ஒத்த செருப்பு சைஸ் – 7 விமர்சனம்

ஒத்த செருப்பு சைஸ் – 7 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கொலை வழக்கு விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறான் மாசிலாமணி. அவ்விசாரணையும், அது சம்பந்தமான முழு நீள உரையாடலும் தான் படம். ஒருவரைச் சுற்றி மட்டுமே நடக்கும் கதையில்லை இது. ஒரு சுவாரசியமான த்ரில்லரில், மற்ற கதாபாத்திரங்களை வெறும் குரல்களாக்கி, மாசிலாமணியாக நடித்திருக்கும் பார்த்திபனை மட்டுமே கேமரா காட்டுகிறது. முழுப் படத்திலும், ஒரு முகம் மட்டுமே திரையில் காட்டப்பட்டாலும், படத்தின் சுவாரசியம் எள்ளளவும் குறையாமல் பார்த்துக் கொள்கிறார் பார்த்திபன். படத்தின் கால அளவு 105 நிமிடங்கள் மட்டுமே! படத்தின் ஓட்டத்திலிருந்து விலகக் கூடாது என்பதற்காக, 120 நிமிடப் படத்தில் இருந்து, சந்தோஷ் நாராயணனின் பாடலையும், சில காட்சிகளையும் நீக்கி மேலும் க்றிஸ்பாகப் படைத்துள்ளார். சிறுவன் மகேஷ், மகேஷின் அம்மா, ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் ஒரு காவலர், பெண் காவலர் ரோசி, முன் கோபியான ஏ.சி., ...
பார்த்திபனின் ஒத்த செருப்புக்குக் குவியும் நட்சத்திரப் பாராட்டுகள்

பார்த்திபனின் ஒத்த செருப்புக்குக் குவியும் நட்சத்திரப் பாராட்டுகள்

சினிமா, திரைத் துளி
உலகத் திரைப்பட சாதனை முயற்சியாக ராதாகிருஷ்ணன் பார்த்திபனால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒத்த செருப்பு படத்துக்கு சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு குவிந்து வருகிறது. ரசிகர்களுக்கு நெருக்கமான ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மட்டுமின்றி ஆமீர்கான், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால் மற்றும் கே.ஜி.எஃப். யாஷ் ஆகியோரும், இப்படத்தைத் தயாரித்து இயக்கியதுடன், தனியொரு மனிதனாகத் தோன்றி, முழுப் படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கும் பார்த்திபனின் வானளாவிய சாதனையை வாயார வாழ்த்திப் புகழ்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘பார்த்திபனின் அபாரமான இந்த முயற்சி, உலக அளவில் அங்கீகாரம் பெற வேண்டும். எனவே சப்-டைட்டிலுடன் படத்தை ஆஸ்கார் விருது தேர்வுக்கு அனுப்ப வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். உலக நாயகன் கமல்ஹாசன் தன் வாழ்த்துச் செய்தியில், ‘ஏற்கெனவே ஒற்றைப் பாத்திரமாகப் ப...
ஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்

ஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆஸ்கர் விருது வாங்கிய செளண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி நடிகராக அறிமுகமாகும் முதற்படமிது என்பது குறிப்பிட்டத்தக்கது. ரசூல் பூக்குட்டிக்கு, திருச்சூர் பூரம் திருவிழாவின் முழு இசையையும் ஒலிப்பதிவு செய்யவேண்டுமென ஆசை. அது அவருக்கு சாத்தியமானாதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. படம் டாக்குமென்ட்ரி வகைமையைச் சேர்ந்தது. பத்துக்கும் மேற்பட்ட யானைகள் அணிவகுக்க, முன்னூறுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்க, ஐந்து லட்சம் மக்கள் கலந்து கொள்ளும் இந்தியாவின் மிகப் பெரும் திருவிழா. அவ்விழாவின் இசையை முழுவதுமாக ஒலிப்பதிவு செய்வது என்பது சாதாரண காரியம் இல்லை. முடியால் மலையைக் கட்டியிழுக்கும் மிகப் பெரிய சமாச்சாரம். 80க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்களை ஒருங்கிணைத்து, 'The Sound Story' என்ற பிராஜெக்ட்டை முடிக்கிறார் ரசூல். 'தி செளண்ட் ஸ்டோரி' என்ற தலைப்பிலேயே மலையாளத்திலும் ஹிந்தியிலும் வெளியாகிறத...
2.0 எனும் அதி பிரம்மாண்டம்

2.0 எனும் அதி பிரம்மாண்டம்

சினிமா, திரைச் செய்தி
300 கோடி பட்ஜெட்டில் தொடங்கிய படம், 550 கோடிக்கு நீண்டுவிட்டது என்கிறார் ரஜினி. ஆனாலும், படம் அதனை வசூலித்துவிடும் என்கிறார் ரஜினி மிக நம்பிக்கையுடன். படத்தொகுப்பாளர் ஆண்டனி, மூன்று முறை எடிட்டிங் செய்துள்ளார். ஒன்று, அனிமேஷன் வடிவிலான ப்ரீ-விஷுவலைசேஷன்; இரண்டு, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல்; மூன்றாவது, விஷுவல் எஃபெக்ட்ஸ்களுடன் என மொத்தம் மூன்று முறை முழுப் படத்தையும் தொகுத்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அப்படியே! படம் தொடங்கும் முன் ஒருமுறை, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல் மற்றொரு முறை, தற்போது, அட்டகாசமான விஷுவல் எஃபெக்ட்ஸ்களுக்கு ஈடு செய்யும் வகையில் இசையமைத்து வருகிறார். உலகத்திலேயே முதல் முறையாக, செளண்ட் டிசைனிங்கில் 4டி (4D - SRL) தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தியுள்ளார் ரசூல் பூக்குட்டி. உபயோகப்படுத்தியுள்ளார் என்பதை விட, உருவாக்கியுள்ளார் என்பதே சரி. தங்களது புதிய பரிமாணத்திற்கு...
கதை பறையும் ரசூல் பூக்குட்டி

கதை பறையும் ரசூல் பூக்குட்டி

சினிமா, திரைத் துளி
கலைத் துறையில், இந்தியாவிலிருந்து உலக அளவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்கள் மிகச் சிலரே! அந்த மிகச் சிலரில் முக்கியமானவர், ஆஸ்கர் விருது பெற்ற செளண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. இவரது செளண்ட் டிசைன்கள் உலக பிரசித்திப் பெற்றவை. தற்பொழுது, ரசூல் பூக்குட்டி நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார். பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்தப் படத்தில் திருச்சூரில் வருடா வருடம் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் ஒரு செளண்ட் டிசைனராகவே ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார். இந்தப் படத்தை 'பாம் ஸ்டோன் மல்ட்டிமீடியா (Palm Stone Multimedia)' ராஜிவ் பனகல் தயாரித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பிரம்மாண்ட படங்களோடு தொடர்புள்ள தயாரிப்பு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இயக்குநர் பிரசாத் பிரபாகரன் பேசுகையில், ''இந்தப் படம் இதுவரை யாரு...