Shadow

Tag: ராதாரவி

இடி மின்னல் காதல் விமர்சனம்

இடி மின்னல் காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஹரனும் ஜனனியும் காதலிக்கின்றனர்; காரில் செல்லும் பொழுது, ரித்தீஷ் ஜெயினை மோதிவிடுகின்றனர். ரித்தீஷ் ஜெயினின் மகன் அபிஷேக் ஜெயினிற்கு ஆதரவாக அப்பகுதியில் வசிக்கும் விபச்சாரி துணை நிற்கிறாள். ரித்தீஷ் வாங்கிய கடனிற்காக அபிஷேக்கைக் கவர நினைக்கிறான் வல்லநாட்டு அருள்பாண்டியன். இவர்தான் இடி; அபிஷேக்தான் மின்னல்; ஹரனும் ஜனனியும்தான் காதல். இடைவேளையில், மூன்று திரைச்சட்டகங்களாகப் பிரித்துப் படத்தின் தலைப்பைப் போடுகிறார்கள். மனநலத்தைப் பேணுவதன் அவசியம் குறித்த படம் என்று படக்குழு சொல்லியிருந்தனர். அபிஷேக்கிற்கு, 'இருமன ஒழுங்கின்மை (Bipolar Disorder)' இருப்பதாக நாயகன் கண்டுபிடிக்கிறார். நாயகன் சைக்காலஜி படித்தவர் எனச் சொல்லப்படுகிறது. அவ்வுழுங்கின்மை வாய்க்கப்பெற்றால் மனம் இரண்டு வெவ்வேறு உணர்ச்சிகளின் எல்லைக்கு ஊஞ்சல் போல் (swing) போய் வந்து கொண்டிருக்கும். ஆனால், சில காட்சிகளில் அபிஷேக்கின் கண்...
பிரைம்  வீடியோ டைரக்ட்டில்  புராண இதிகாச த்ரில்லரான  சிபிராஜின்  ‘மாயோன்’

பிரைம்  வீடியோ டைரக்ட்டில்  புராண இதிகாச த்ரில்லரான  சிபிராஜின்  ‘மாயோன்’

சினிமா, திரைச் செய்தி
சென்ற ஆண்டு சிபிராஜ் நடிப்பில்,  டபுள் மீனிங் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளியான “மாயோன்” திரைப்படம் திரைப் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது.  நல்ல கதையம்சத்துடன் பொழுதுபோக்கிற்கான விசயங்களை உள்ளடக்கி இருந்த காரணத்தால் குடும்பம் குடும்பமாக  இப்படத்தைப் பார்க்க பொதுமக்கள் வந்தனர். மேலும் 47-வது கனடா டொரண்டோ திரைப்பட விழாவில் புராண இதிகாசப் பிரிவில் “மாயோன்” திரைப்படம் விருதினையும் வென்றது. படத்திற்கு இசையானி இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் பெரும் பலமாக அமைந்திருந்தன.விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும்  கதை, அதைக் காட்சிப்படுத்திய அழகியல் போன்ற காரணங்களுக்காகவும் அதன் உள்ளடக்கத்திற்காகவும் ,  புராண இதிகாச த்ரில்லர் வகைத் திரைப்படம் என்கின்ற புதுமையான வகைமைக்காகவும் இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் தனித்து...
மயில்சாமியின் மகன் அன்பு நடிக்கும் ‘அல்டி’

மயில்சாமியின் மகன் அன்பு நடிக்கும் ‘அல்டி’

சினிமா, திரைச் செய்தி
அல்டி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய ராதா ரவி, "சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம் தான். அப்படிப் பரபரப்பாக இருக்கக்கூடிய காலத்திலும் படம் துவங்கியது முதல் இன்று வரை ஆதரவு அளித்திருக்கிறார். இன்று நேரில் வந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் கொண்ட விஜய்சேதுபதியைப் பாராட்டுகிறேன். சினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது. பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். கைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். திரையரங்கில் கூட்டம் வந்தாலும் மறுநாளே எடுக்கச் சொல்லிவிட்டார்கள். அதனை நினைத்து பார்த்திபன் மிகுந்த வேதனையடைந்தார். பார்க்க பார்க்க தான் மக்களுக்கு படம் பிடிக்கும். உடனே, தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று இன்னும் நீடிக்கச் செய்ய வேண்டுமென்று கூறி வந்தேன். சிறு படங்களுக்கு குறைந்தது 5 நாட்களாக திரையரங்கி...
கொரில்லா – சேட்டைகளின் நாயகன்

கொரில்லா – சேட்டைகளின் நாயகன்

சினிமா, திரைச் செய்தி
கொரில்லா எனத் தலைப்பு வைத்திருந்தாலும், படத்தில் சேட்டை செய்வதோ ஒரு தாய்லாந்து சிம்பன்சி. உடையணியப் பிடிக்காத அந்த சிம்பன்சி, கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் உடையைக் களைந்து மொட்டை மாடிக்கு ஓடி விடுவோம். உடன் நடிக்கும் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகியோரைக் கடித்தும், தலைமுடியைப் பிடுங்கியும் படாதபாடுப்படுத்தியுள்ளது. இவ்வளவு சேட்டை செய்த சிம்பன்சியை நாங்கள் துன்புறத்தவில்லை என நடையாய் நடந்து, விலங்கு நல வாரியத்தைச் சமாதானப்படுத்தி சான்றிதழ் பெற்றுள்ளார் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா. ஒரு நாளைக்கு 2 லட்ச ரூபாய் செலவு செய்ய்யப்பட்டுள்ளது - சிம்பன்சியின் உணவுக்கும், சிம்பன்சியைப் பராமரிப்பவர்களுக்குச் சம்பளமாகவும். 'எங்களை விட சிம்பன்சியைத்தான் செளகரியமாகப் பார்த்துக் கொண்டார்கள்' என ஜீவாவும் விளையாட்டாகச் சொன்னார். படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பது நிச்சயம். இ...
சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம்

சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாளிகை போன்ற வீட்டுக்குள் இருக்கும் பாசக்கார ஆவி, 'இது என்னோட வீடு' என அவ்வீட்டினை விலைக்கு வாங்கும் ஜீவாவையும் அவரது குடும்பத்தினரையும் உள்ளே விட மாட்டேங்கிறது. எப்படி ஆவியை ஜீவா விரட்டுகிறார் என்பதுதான் படத்தின் கதை. வழக்கமான பேய்க் கதை என்ற பொழுதிலும், இயக்குநர் ஐக் அழகாகச் சுவாரசியப்படுத்தியுள்ளார். உதாரணத்திற்கு, படம் தொடங்குவதற்கு முன், குடிப்பழக்கும் புகை பழக்கமும் உடம்பிற்குத் தீங்கு விளைவிக்கும் என்ற வாசகத்தை 'நான் கடவுள்' ராஜேந்திரன் குரலில் கேட்கும் பொழுதே, படத்திற்கான மூடை செட் செய்து விடுகிறார். வாடகை வீட்டில் குடியிருப்போரின் வலியை அழகாகப் பதிவு செய்துள்ளனர். "வாடகை வீட்டில் இருப்பது ஜெயில் போல" என ராதிகா வலியுடன் சொல்வதில் இருந்து தான் படமே தொடங்குகிறது. நாயகனான ஜீவாவின் பெயர் போடுவதர்கு முன்பே 'டத்தோ' ராதாரவியின் பெயர் திரையில் தோன்றுகிறது. குடும்பம் என்றால் ஒற்றுமையாக...
இன்னும் உருப்படாமல்தான் இருக்கோம் – ராதாரவி

இன்னும் உருப்படாமல்தான் இருக்கோம் – ராதாரவி

சினிமா, திரைச் செய்தி
“சிவலிங்கா அபடத்தில் அழகா வர்றார் லாரன்ஸ். எப்பவும் அமைதியா தான் பேசுவார். ஆனா புரட்சி உள்ளம் படைச்சவர். இல்லைன்னா, ஒரு மனுஷன் ஜல்லிக்கட்டில் வந்து உட்காருவானா? நிறைய பேர் சொன்னாங்க, விளம்பரத்துக்காக வந்து உட்கார்ந்தார்னு. அவருக்கு விளம்பரம்லாம் தேவையில்ல! ‘கூட்டிக் கழிச்சுப் பாரு கணக்கு சரியா வரும். எங்கண்ணன் படத்தில் வரும் வசனம்’ என மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ராகவா வசனம் பேசியிருப்பார். படம் ஃபுல்லா நான் சொல்லியிருப்பேன். அவர் ரஜினி ரசிகர்னு எனக்குத் தெரியும். என் ரசிகர்கள் என்னிடம், ‘பாருங்க சார். உங்க மேல லாரன்ஸ்க்கு எவ்ளோ பிரியம் பாருங்க சார்’ எனச் சொன்னாங்க. ‘டேய், அவர் ரஜினிய சொன்னார்டா. நீ வேற ஒரு புரியாத பயல்டா’ எனச் சொன்னேன். ஏன் சொல்றேன்னா நம்ம மக்கள் புரியாத பயலுக. எதை நினைக்கிறது, எதை யோசிக்கிறது, எதை பண்றதுன்னு நம்ம மக்களுக்கு எதுவும் தெரியாது. ‘நல்லவன் வாழ்வான்’ படத்...
ரித்திகா சிங் – முதல் ஹீரோ

ரித்திகா சிங் – முதல் ஹீரோ

சினிமா, திரைச் செய்தி
“பாக்ஸராக இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமான ரித்திகா சிங்கைப் பார்த்தால் எனக்குக் கொஞ்சம் பயம். கையில் வித்தை வச்சிருக்காங்க எனச் சொன்னாங்க. நான் நேர்ல ரிங்லயே அதைப் பார்த்திருக்கேன். சிவலிங்கா படத்தில் தான் தைரியமாக அவங்க கூட நடிக்கிறேன். அவங்க நேச்சுரல் ஆர்டிஸ்ட். நதி போல். படத்தில் பிரமாதமா பண்ணியிருக்காங்க” என்றார் ராதாரவி. “எனக்குத் தெலுங்கில் ரவி தேஜா ரொம்ப பிடிக்கும். ரொம்ப எனர்ஜிட்டிக்கான நடிகர். அதே போல், ஹீரோயின்ஸ்ல ரித்திகா சிங் ரொம்ப பிடிக்கும். அவங்க ரொம்ப எனர்ஜிட்டிக்கா நடிக்கிறாங்க. தெலுங்கில் இப்போ ‘குரு’ படம் ஹிட் ஆகியிருக்கு. இந்தப் படமும் அதே போல் கண்டிப்பாக வெற்றி பெறும்” என்கிறார் ரித்திகா சிங். “சிவலிங்கா படத்தில் முதல் ஹீரோ ரித்திகா சிங் தான்; இரண்டாவது ஹீரோ வடிவேலு; மூன்றாவது ஹீரோ சக்தி வாசு; நான்காவது ஹீரோ தான் நான்” என்றார் ராகவா லாரன்ஸ்....
ஜில் ஜங் ஜக் விமர்சனம்

ஜில் ஜங் ஜக் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'இது மெஸ்சேஜ் சொல்ற படமில்லைங்க. இரண்டு மணி நேரம் ஜாலியா தியேட்டர்ல போய் சிரிச்சுட்டு வர படம்' என்கிறார் படத் தயாரிப்பாளராகியுள்ள சித்தார்த். அவரது நிறுவனத்தின் பெயர் 'ஏடாகி எண்டர்டைன்மெண்ட்'. ஒரு சரக்கினை சீனர்களிடம் ஒப்படைக்கும்படி, ஜில் - ஜங் - ஜக் ஆகிய மூவருக்கும் வேலையொன்று தரப்படுகிறது. அம்மூவரும் அந்த வேலையைச் சொதப்பாமல் செய்தார்களா என்பதுதான் படத்தின் கதை. ஜக் - ஜாகுவார் ஜகனாக சனந்த். டீசல் என்ஜின் போல் மெதுவாகக் கவனத்தை ஈர்க்கத் தொடங்கி, படத்தின் முடிவில் தன் நடிப்பால் ஜில்லையும் ஜங்கையும் ஓரங்கட்டி விடுகிறார் சனந்த். 'டிமான்ட்டி காலனி' படத்தில் நான்கு நண்பர்களில் ஒருவராக நடித்திருப்பார். ஒரு பொருளைக் காட்டி, இதென்ன நிறமெனக் கேட்டால், அவர் கவிதையாக பதில் சொல்லும் விதம் கலக்கல். ஜங் - ஜங்குலிங்கமாக அவினாஷ் ரகுதேவன். படத்தில் இவரது வேலை "வாட்ச்" சு. சரக்கைக் குறித்த நேரத்தில் டெ...