‘சந்திரமுகி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் இடம்பெற்ற 'ஸ்வகதாஞ்சலி...' எனத் தொடங்கும் முதல் பாடல் இன்று வெளியானதோடு பாடல் வரிகளுடன் கூடிய வீடியோவாகவும் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2' . இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத், 'வைகைப்புயல்' வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீ...