கூகுள் குட்டப்பா | ஆஹா டிஜிட்டலுடன் கைகோர்த்த பூர்விகா மொபைல்ஸ்
தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் வெளியான ‘கூகுள் குட்டப்பா’, ஜூன் 3 ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இதற்காக பிரத்தியேக முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
‘பிக்பாஸ்’ புகழ் தர்ஷன், நடிகை லாஸ்லியா, கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இந்தத் திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதியன்று வெளியாகிறது.
தமிழகத்தின் முன்னணி செல்ஃபோன் விற்பனை நிறுவனமான ‘பூர்விகா’ ஆஹா டிஜிட்டல் தளத்துடன் கரம் கோர்த்து, தனது கோடம்பாக்கம் கிளை அலுவலகத்தில் வாடிக்கையாளர்களின் முன்னிலையில் ‘கூகுள் குட்டப்பா’ படக்குழுவினருடன் பிரத்தியேக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் பூர்விகாவின் வணிக பொது செயலாளர் திரு. சிவக்குமார், ஆஹா டிஜிட்டல் ...