Shadow

Tag: லோஸ்லியா

பிக் பாஸ் 3: நாள் 57 | சேரன் லாஸ் கவின் – மீண்டுமொரு முக்கோண பிரச்சனை

பிக் பாஸ் 3: நாள் 57 | சேரன் லாஸ் கவின் – மீண்டுமொரு முக்கோண பிரச்சனை

பிக் பாஸ்
நேற்றிரவு கவின் லாஸ் பேசினதை மறுபடியும் போட்டுக் காண்பித்தது, எங்களை வெறியேற்ற தானே பிக்பாஸ்? அதுல இருந்து தான் ஆரம்பித்தது. ஊர்வசி ஊர்வசி பாடலுடன் தொடங்கியது நாள். ஷெரின் நன்றாக நடனமாடினார். கேப்டன் ஆன குதூகலமாக இருக்கும் போல. காலை உணவைத் தட்டில் வைத்துவிட்டு, லாஸ் வரவேண்டுமென காத்துக் கொண்டிருந்தார் சேரன். வெளியே கவின், சாண்டியிடம் பேசிக் கொண்டிருந்தவரிடம், 'அவர் வெயிட் பண்றாரு போய்ச் சாப்பிடு' எனச் சொல்லியும் போகவில்லை லாஸ். கடைசியில் லாஸ் வந்ததுக்குப் பின் தான் சாப்பிட்டார். கவினும் லாஸும் பேசிக் கொள்வதைப் பார்த்து, இது நட்பு மட்டும் தானென யாராலாவது சொல்ல முடியுமா? சாக்‌ஷி சொன்னது போல் Los is blushing. அதாவது பழைய படத்தில் வர மாதிரி கன்னம் சிவந்து, கண்கள் படபடவென அடித்துக் கொண்டு பேசுவாங்களே, அந்த மாதிரி காட்சி எல்லாம் வந்து போகிறது. உங்களுக்கும் இஷ்க் இஷ்க்னு என்று தான் கேட்...
பிக் பாஸ் 3: நாள் 53 – ‘வத்திக்குச்சி வனிதா. இதெப்படி இருக்கு!’ – தர்ஷன்

பிக் பாஸ் 3: நாள் 53 – ‘வத்திக்குச்சி வனிதா. இதெப்படி இருக்கு!’ – தர்ஷன்

பிக் பாஸ்
  ஜனகனமன பாடலுடன் ஆரம்பித்தது நாள். சுதந்திர தினம் கொண்டாடுகிறார்களாம். கிச்சனில் சேரனுக்கும், மதுவுக்கும் விபூதி அடித்துக் கொண்டிருந்தார் வனிதா. அதைக் கேட்டுவிட்டுப் போன லாஸ் வெளியில் உட்கார்ந்து கொண்டிருந்த பாய்ஸ் அணியிடம் சொல்கிறார். 'இது தெரிந்த விஷயம் தானே!' என பாய்ஸ் டீம் சொல்ல, 'என்னையும் இப்படி மாத்திட்டாங்களே!' என லாஸ் சொன்னது ஆச்சரியம் தான். லாஸ் யாரைப் பற்றியும் பின்னாடி பேசுவது இல்லை. இப்ப அதையும் செய்ய ஆரம்பித்து விட்டார்களாம். இந்தக் கூட்டணி கிடைத்ததற்குப் பிறகு, லாஸ் நல்ல கான்ஃபிடென்ட்டாக இருக்கார். அநேகமாக தர்ஷன் தான் லாஸை உள்ள கூட்டிக் கொண்டு வந்திருப்பார் என நினைக்கிறேன். சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கிறதாலல், இப்ப தான் மற்றவர்கள் பிரச்சினைக்கு லாஸோட குரல் வெளியே வருகிறது. 'எத்தனை நாளைக்கு?' எனப் பார்க்கலாம். வெளியே நடக்கிறதைப் பற்றி ஹவுஸ்மேட்ஸ்க்கு சொல்லிக் கொண்டிருந...
பிக் பாஸ் 3: நாள் 39 – தினம் இதே பஞ்சாயத்தா?

பிக் பாஸ் 3: நாள் 39 – தினம் இதே பஞ்சாயத்தா?

பிக் பாஸ்
முந்தைய நாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பத்தது. சாக்‌ஷி ஒரு பக்கம் அழ, கவின் ஒரு பக்கம் உட்கார்ந்திருக்க, லோஸ்லியா இன்னொரு பக்கம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அபிராமியும் அந்தப் பக்கம் ஹெவியாக பெர்ஃபாமன்ஸ் பண்ணிட்டு இருந்தார். ஆளாளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். சாக்‌ஷிக்கு ஷெரினும் ரேஷ்மாவும் சொன்னது பெஸ்ட். 'இதை இத்தோட விட்டுத் தொலைச்சிரு. இன்னையோட இதை முடிச்சிரு, நாளைக்குப் புது நாள்' எனச் சொல்ல, அப்படியே கட் பண்ணினால்.. நாள் 39 "இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்" பாட்டைப் போட்டு எழுப்பி விட்டனர். குசும்புக்காகவே இந்தப் பாட்டைப் போட்ருக்கின்றனர். அதுவும் "இரு மணம் கொண்ட" வரி வரும் போது கவினையும், சாக்‌ஷியையும் கட் பண்ணி காட்டியவர்கள், "இடையினில் நீ ஏன்?" வரி வரும் போது லோஸ்லியாவைக் காண்பித்ததெல்லாம் வேற லெவல். எவனோ ஒருத்தர் எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து கற்றுக் கொண்ட மொத்...
பிக் பாஸ் 3: நாள் 38 – சாக்ஷி, கவின், லோஸ்லியா முக்கோண பிரச்சினை

பிக் பாஸ் 3: நாள் 38 – சாக்ஷி, கவின், லோஸ்லியா முக்கோண பிரச்சினை

பிக் பாஸ்
கிராமத்தில் ஒரு கேரக்டர் இருக்கும். யாரையாவது பார்த்தால் போதும், ‘அக்காவ், என் மாமன் செய்யற வேலையைப் பார்த்தியா?’ என ஒரு பாட்டம் மூக்கைச் சிந்தி அழுது வைக்கும். அதற்கப்புறம் சகஜமாகி காப்பி தண்ணி குடித்துவிட்டுச் சிரித்துக் கொண்டே தான் கிளம்பும். அடுத்த தெருவிற்குப் போனால், ‘அயித்த என் மாமியா என்ன பண்றா தெரியுமா?’ என மறுபடியும் அழுவதற்குத் தயாராகிவிடும். நிறைய சினிமாவில் கூட அந்த மாதிரி கேரக்டர் வரும். அந்த கேரக்டரோட டவுசர் போட்ட அப்டேட்டட் மாடர்ன் வெர்ஷன் தான் சாக்ஷி. நேத்து முதல் ஷாட்டே சாக்ஷி அழுது கொண்டிருப்பது தான். கேமராவைப் பார்த்து, ‘நான் வீட்டுக்குப் போறேன்’ என அழுது கொண்டிருந்தார். எப்பேர்ப்பட்ட அறிவாளியும் காதல் உணர்வு வரும் போது எப்படி அடி முட்டாளாக மாறிடுவாங்க என்பதற்கு, சாக்ஷி ஒரு சிறந்த உதாரணம். அண்ணா யுனிவர்சிட்டியில் கோல்டு மெடல் வாங்கிய பெண் அவர். நன்றாகப் படிப்பவர் எல்...
பிக் பாஸ் 3: நாள் 33 – வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ்

பிக் பாஸ் 3: நாள் 33 – வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ்

பிக் பாஸ்
'வண்டியிலே நெல்லு வரும்' பாட்டோட ஆரம்பித்தது நாள். இந்த வார டாஸ்க்கில் சிறப்பாக பெர்ஃபாமன்ஸ் செய்தவர்கள், செய்யாதவர்களைச் சொல்லும்படி பிக் பாஸ் அறிவித்தார். பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ்க்கு தர்ஷன் பேரும், மீரா பேரும் வந்தது. யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் அவர்களே செலக்ட் ஆனார்கள். வாரம் முழுவதும் பெஸ்ட் பெர்ஃபாமர் பிரிவுக்கு முகினும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொடுத்த வேலையைச் சுவாரசியமாகச் செய்யாதவர்கள் பெயர் தேர்வு வரும்போது தான் பிரச்சினை ஆரம்பித்தது. அபிராமியும், லோஸ்லியாவும் இரண்டு நாட்களாக அனைவரையும் தங்கள் பெயரைச் சொல்வதற்கு கேன்வாஸ் செய்திருக்கிறார்கள். லியா கவினிடம் கேட்ட போது கண்டிப்பாக முடியாது எனச் சொல்லிவிட்டார். லியா, அபி இரண்டு பேரும் அவங்க என்னென்ன தப்பு செய்தார்கள் என லிஸ்ட் போட்டுக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டாலும், கவின் அதை ஒத்துக் கொள்ளவ...