நேற்றிரவு கவின் லாஸ் பேசினதை மறுபடியும் போட்டுக் காண்பித்தது, எங்களை வெறியேற்ற தானே பிக்பாஸ்? அதுல இருந்து தான் ஆரம்பித்தது.
ஊர்வசி ஊர்வசி பாடலுடன் தொடங்கியது நாள். ஷெரின் நன்றாக நடனமாடினார். கேப்டன் ஆன குதூகலமாக இருக்கும் போல.
காலை உணவைத் தட்டில் வைத்துவிட்டு, லாஸ் வரவேண்டுமென காத்துக் கொண்டிருந்தார் சேரன். வெளியே கவின், சாண்டியிடம் பேசிக் கொண்டிருந்தவரிடம், ‘அவர் வெயிட் பண்றாரு போய்ச் சாப்பிடு’ எனச் சொல்லியும் போகவில்லை லாஸ். கடைசியில் லாஸ் வந்ததுக்குப் பின் தான் சாப்பிட்டார்.
கவினும் லாஸும் பேசிக் கொள்வதைப் பார்த்து, இது நட்பு மட்டும் தானென யாராலாவது சொல்ல முடியுமா? சாக்ஷி சொன்னது போல் Los is blushing. அதாவது பழைய படத்தில் வர மாதிரி கன்னம் சிவந்து, கண்கள் படபடவென அடித்துக் கொண்டு பேசுவாங்களே, அந்த மாதிரி காட்சி எல்லாம் வந்து போகிறது. உங்களுக்கும் இஷ்க் இஷ்க்னு என்று தான் கேட்கின்றதா?
நாமினேஷன் ஆரம்பித்தது. எதிர்பார்த்த மாதிரியே சேரனும், கஸ்தூரியும் தான் மெயின் டார்கெட். இப்ப வீட்டில் இருக்கிறது 9 பேர். அதில் ஷெரின் கேப்டன். வனிதா வைல்ட் கார்ட் என்ட்ரியாம் (சொல்லவே இல்லை). நாமினெட் செய்ததில் சேரன் 6 ஓட்டு, கஸ்தூரிக்கு 6 ஓட்டு. நாமினேஷன் பத்தி பேசக்கூடாதென ரூல்ஸ் இருந்தாலும், 5 பேர் சேர்ந்து மீதி இரண்டு பேரை டார்கெட் செய்வதை பிக் பாஸ் எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கார் எந்து தான் தெரியவில்லை. அட காரணமாவது வேற ஏதாவது சொல்லுவாங்க என்று பார்த்தால், 5 பேரும் ஒரே காரணம் சொல்கிறார்கள். கண்டிப்பா இதைப் பற்றி விவாதித்துக் இருக்கவேண்டும். பின்னாடி கவினும் இதைப் பற்றிப் பேசுகிறார். எல்லோரும் உட்கார்ந்து பேசியிருக்காங்களாம். அவரவருக்குத் தோன்றுதைச் செய்ங்க எனச் சொல்லி விட்டார்களாம். சொன்னது யாரென்றால் கவினும் சாண்டியும். இதுவே இன்ஃப்ளூயன்ஸ் பண்ற மாதிரி தானே. சாண்டி, கவினைக் காட்டிலும் மீதி மூன்று பேரும் வயதில் இளையவர்கள். 3 பேரையுமே கன்வின்ஸ் பண்ணுவது சுலபம். 5 பேர் உட்கார்ந்து பேசுகின்றனர். யாரைப் பற்றிப் பேசிருப்பாங்க எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முதலில் காரணங்களைச் சொல்லிவிட்டு, பின் ‘நீங்களே முடிவெடுத்துக்கோங்க’ எனச் சொல்லியிருப்பார்கள் போல. நாளைக்குக் கேள்வி வந்தாலும், நாங்கள் யாரையும் ஃபோர்ஸ் பண்ணவில்லை என்று தான் பதில் வரும்.
மதுவுக்கும் ஆண்களுக்கும் சண்டை நடந்து கொண்டு இருக்கும் போது, சேரன் வெண்டைக்காய் நறுக்கிக் கொண்டு இருந்தாராம். இந்த விஷயத்தைக் கமலும் வேற கேட்டுவிட்டாரா? அது போதுமே இவங்களுக்கு. சேரன் பேசிருந்தாலும் இதையே தான் செய்யப்போகின்றனர். இந்த க்ரூப்பிசம் பறரி இந்த வாரம் கமல் ஏதாவது பேசுவாரென எதிர்பார்த்தேன். அவர் இந்த விஷயத்தைத் தொடாமல் போனது வருத்தம் தான்.
லாஸ் கன்ஃபெஷன் ரூமில் இருக்கும் போது, ‘என் பேரைச் சொல்லமாட்டா’ என கஸ்தூரியிடம் உறுதியாகச் சொல்லிக் கொண்டிருந்தார் சேரன். ஆனால் உள்ளே சேரன் பேரை நாமினேட் செய்து கொண்டிருந்தார் லாஸ். வாட்டே எ சீன்!!
எப்பவும் போல ஷெரின் மட்டும் தான் தெளிவான காரணம் சொன்னார். சாண்டியும், தர்ஷனும் முதல் தடவையாக எலிமினேஷனுக்கு வருகிறார்கள்.
வெளியே வந்த லாஸ், தான் சேரனை நாமினேட் செய்ததைச் சொல்லி அழுகின்றார். அவர் இரண்டு காரணம் சொல்கிறார். ‘ஒன்று, மது சண்டை நடக்கும் போது தனக்குச் சம்பந்தமில்லாமல் உட்காந்துட்டு கொண்டிருந்தது, தன்னை ஜெயிலுக்கு அனுப்புவதைப் பற்றிக் கேட்ட போது, நியாயம் எதுவோ அதை அவர் செய்த மாதிரி, எனக்கு இது நியாயம் எனத் தோன்றியது. ரெண்டு வேற யார் பேரைச் சொல்றது? ரீசனே இல்லையே, அதனால நாமினேட் செஞ்சேன்’ எனச் சொல்லி அழுதார். “என்னது?? நீ சேரப்பாவை நாமினேட் செஞ்சுட்டியா??” என கவின் கொடுத்த ரியாக்சனை எந்த வகையில சேர்க்கிறது எனத் தெரியவில்லை. ஏய்ய்ய் நடிக்காத!
தன் நெருங்கிய தோழி அபிராமி ஹர்ட் ஆனதில் முகினுக்கு எந்தப் பங்கும் இல்லையென நினைக்கிறார் போல லாஸ். ஆனால் ஷெரின் அப்படி நினைக்கவில்லை. அபிக்காக முகின் பேரைத்தான் சொன்னார்.
சேரன் – லாஸ் உறவு போலியானது. இர்ந்ண்டு பேருமே நடிக்கின்றனர். ஒரு கேம் விளையாட வந்த இடத்தில் இது தேவையில்லையென நிறைய கருத்துக்கள். முதலில் ஒரு கேம் ஷோவுக்குள் அப்பா – மகள் உறவு ஏற்றுக்கொள்ளக்கூடியதா? அந்த பாசம் உண்மையா இருக்குமா?
நட்பு எப்படி ஒரு உணர்வோ, அதே மாதிரி தான் காதல், பாசம் உணர்வுகளும். வந்த ஒரு வாரத்தில், ‘இவன் என்னோட க்ளோஸ் ப்ரெண்ட்’ என ஒருவரைச் சொல்ல முடியுமெனில், அதே மாதிரி உறவுமுறை வைத்து ஒருவரைக் கூப்பிட முடியாதா? நட்பு உண்மை என்றால் ஏன் இதை மட்டும் போலி எனச் சொல்லவேண்டும்? இந்த வீட்டுக்குள் இரண்டாவது வாரம் ஒரு காதல் வந்து, 5 வது வாரம் ப்ரேக் அப் ஆகிவிட்டது. சாக்ஷியோட பீலிங்க்ஸ் பொய் என யாரும் சொல்ல முடியாது. அதெப்படி இவ்வளவு சீக்கிரம் காதல் வரும்? அதெப்படி ஒரு பிரச்சினை வந்த உடனே ப்ரேக் அப் எனச் சொல்லிவிட்டு, எதுவுமே நடக்காத மாதிரி இருக்க முடியும்? இந்தக் கேள்விகளுக்குப் பதில், இந்தத் தலைமுறையால் தான் சொல்ல முடியும். 80’ஸ் கிட்ஸ், 90’ஸ் கிட்ஸ் ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்க்கலாம்.
லாஸ் இந்த வீட்டுக்குள் வந்த போது, யார் அறிமுகமும் கிடைக்கிறதுக்கு முன்னாடியே, ஒரு பெரிய குடும்பத்தில் இருக்கிற கடைக்குட்டி பொண்ணு மாதிரி, ஜாலியாக ஆடிப் பாடிச் சுற்றிக் கொண்டிருந்தார். ஆனால் அப்படிச் சுற்றினதுக்கே தன்னை நாமினேட் செய்த போது தான் அவருக்கு நிதர்சனம் புரிகிறது. இதற்கு இடையில் சேரனைப் பார்க்கும் போது தன் அப்பா ஞாபகம் வருது எனச் சொல்லவும், ‘என்னை அப்பான்னே கூப்பிடும்மா’ எனச் சொல்லிவிடுகிறார் சேரன். லாஸை ரொம்ப ஸ்பெஷலா நடத்தியிருக்கார் சேரன்.சாப்பிட வெயிட் பண்றது, எல்லா நேரத்திலும் கேர் எடுத்துக்கறது என இருந்த டைம்ல தான் லாஸ் – கவின் நட்பு உருவாகிறது. மணிக்கணக்காக இரண்டு பேரும் பேசுகின்றனர். அதனால பிரச்சினைகள் வருகிறது.
அப்பக்கூட இந்த விஷயத்துல சேரன் தலையிட்டதாக நமக்கு எங்கேயும் காட்டப்படவில்லை. சாக்ஷியிடம் ஒரு தடவை பேசும் போதும், ‘அது அவளோட முடிவு, அவ ஒன்னும் சின்ன குழந்தை இல்லை’ எனச் சொல்லி ஒதுங்கி நிற்கிறார் சேரன். கவின் – சாக்ஷி – லாஸ் பிரச்சினையின் போதும் சேரன் யார் பக்கமும் பேசவிலை (நோட் திஸ் பாயின்ட்). அவரோட தேவை, இந்த வீட்டில் இருக்கிறவன் என்ற முறையில் என்ன நடக்குதென எல்லோருக்கும் சொல்லுங்க என்று தான் அப்பவும், இப்பவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஓப்பன் நாமினேஷனில் கவின் பெயரைச் சொன்னதுக்குப் பின் தான் சேரனிடம் இருந்து விலக ஆரம்பிக்கிறார் லாஸ். சாக்ஷ்யின் வெளியேற்றத்துக்குப் பிறகு, கவினுடனான அந்த நெருக்கம் இன்னும் அதிகமாகுது. எப்பவுமே பாய்ஸ் டீம் கூட இருக்க ஆரம்பிக்கிறார்.
சில சமயம் சேரன் பேசுவது நாடகத்தனமாக இருக்கலாம். காரணம் அவர் பேசிக்கலாக ஒரு சினிமாக்காரர். அதுவும் போன தலைமுறையைச் சேர்ந்தவர். இந்த விஷயம்னு இல்லாமல், அவர் பேசுகின்ற பெரும்பாலான இடத்தில் இந்த சினிமாத்தனம் எட்டிப் பார்க்கும். அதற்காக அவரைப் போலி எனச் சொல்ல முடியாது. அவரெல்லாம் சினிமா மாதிரியே யோசித்து, அப்படியே பேசிப் பழகினவர்.
லாஸ் நடிக்கறாங்க எனச் சொல்றதையும் என்னால முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சேரனே சொல்கின்ற மாதிரி, நண்பர்களுடன் லாஸ் காட்டுகின்ற நெருக்கம் புரிந்து கொள்ளப்படக்கூடியதே. அந்த வயதில் எல்லோருக்குமே தன் பெற்றோரை விட நண்பர்கள் தான் முக்கியம் என இருப்போம். நேரம் போவதே தெரியாமல் நண்பர்கள் கூடவே சுற்றிக் கொண்டிருக்கிறது சகஜம் தான். அதை தான் லாஸும் செய்கின்றார். அதைச் சேரனும் புரிந்து கொள்கிறார். ஆனால் பாய்ஸ் டீமில் இருந்து கொண்டு, திரும்பவும் சேரனிடம் போய் பேசிக் கொண்டிருந்தால் என்ன நினைப்பாங்க ர்ன யோசிக்கறார். இங்கே இருக்கிற இன்னொரு பிரச்சினை லாஸின் நண்பர்களுக்கும், அப்பாவுக்கு ஆகாது. அப்ப யார் பக்கம் நிற்கிறதெனக் கேள்வி வரும்போது, சேரனை விட கவினே பெட்டர் என முடிவெடுக்கிறார் லாஸ். இப்போதைக்குச் சேரனைக் காயப்படுத்தாமல் இதிலிருந்து எப்படி வெளியே வருவதென யோசனையில் இருக்கின்றார்.
லாஸ் விஷயத்தில் சேரன் தலையிட்டுப் புத்திமதி சொன்னதாகவோ, லாஸை இன்ஃப்ளூயன்ஸ் செய்ததாகவோ நாம் பார்க்கவில்லை. லாஸ்க்குத் தேவையான ஸ்பேஸ் கொடுத்து ஒதுங்கி தான் நிற்கிறார். ஆனால் கவின் தொடர்ந்து லாஸை இன்ஃப்ளூயன்ஸ் செய்து கொண்டிருக்கார்.
அதற்கு நேற்றிரவு நடந்த சம்பவத்தையே உதாரணமாகச் சொல்லலாம். நாள் முழுவதும் லாஸிடம் மூஞ்சியைக் காண்பித்துக் கொண்டே இருக்கார். ‘ஏன்? என்னாச்சு?’ எனக் கேட்டுக் கொண்டே இருக்கிறார் லாஸ்.
சேரனிடம் இருந்து ஏன் ஒதுங்கினேன் என கமலிடம் லாஸ் சொன்ன விஷயம் பொய். அதை விட முக்கியமான ஒரு காரணம் இருக்கு. ஆனால் அதைப் பற்றி சேரனிடம் பேசவே இல்லை. அதைக் கவின் கேட்கிறார். ‘தான் ஒரு டைரக்டர் எனச் சொன்னதுக்கு, மரியாதையை எதிர்பார்த்ததுக்கு, கமலிடம் மன்னிப்பு கேட்டது பத்தாது, இங்க வீட்டுக்குள் அவர் கேட்கவேண்டும்’ எனச் சொல்கிறார் கவின்.
நமக்கு ரொம்பப் பிடித்தவர் தப்பே செய்தாலும், அதைப் பற்றிப் பேசாமல், கண்டிக்காம நகர்ந்து போய்விடவேண்டும். ஆனால் அதுவே நமக்குப் பிடிக்காதவங்க ஒரு சின்ன தப்பு செய்யும் போது, அதைப் பற்றிப் பூதாகரமாகப் பேசவேண்டும். இதை தான் கவின் செய்கிறார். சரவணன் தவறாகப் பேசினதோ, முகின் சேரைத் தூக்கினதோ கவினுக்குத் தவறாகவே தோன்றவில்லை. ஆனால் சேரன் செய்த ஒரு விஷயம் அவர் மன்னிப்பு கேட்டதுக்குப் பின்னும் உறுத்திக் கொண்டிருக்கு.
ஆனால் அந்த விஷயத்தைச் சொல்லி, லாஸை இன்ஃப்ளூயன்ஸ் செய்வது தான் தவறான விஷயம். இவர்களது நட்பில், தலையிடாமல் சேரன் ஒதுங்கி நின்ற மாதிரி, கவின் செய்வதில்லை. சேரனிடம் லாஸ் பேசுவதே கவினுக்குப் பிடிக்கவில்லை. அது லாஸுக்கும் தெரிகிறது. இதில் யார் காயப்படப்போறாங்க எனத் தான் தெரியவில்லை.
நாமினேஷன் முடிந்ததுக்கு அப்புறம், ஒவ்வொருவரையாகக் கன்ஃபெஷன் அறைக்குக் கூப்பிட்ட பிக் பாஸ், எல்லோரையும் அழ வைத்தார். கொஞ்சம் போரிங்காக இருந்தாலும் ஹவுஸ்மேட்ஸ் அழவது ஒரு வகையில அவங்களுக்கு நல்லது தான். ஏதாவது ஒரு வகையில் எமோஷனலை வெளியே காட்டிவிடுவது நல்லது தான்.
சாண்டி, கவின், தர்ஷன் தங்களோட குடும்பத்தை நினைத்துக் கண் கலங்கினர். என்ன தான் ஜாலியாக இருந்தாலும் சாண்டி தன் குழந்தையை நினைத்து அழுதது டச்சிங்காக இருந்தது.
வழக்கம் போல ஷெரின் ஒரு அட்டகாசமான மெசேஜ் சொன்னார். ஒரு வருசத்துக்கு எவ்வளவு அழுவேனோ அதை விட அதிகமா இந்த 50 நாளில் அழுதுட்டேன் எனச் சொன்னவர், டிப்ரஷனில் இருக்கிறவங்க தயங்காமல் யாரிடமாவது உதவி கேளுங்க எனச் சொன்னார். இந்த டாபிக் பேசப்படும் என நினைக்கிறேன்.
இரவு, கவின் – லாஸ் பேசிக் கொண்டிருந்ததை மேலே சொல்லியிருந்தேன். எனக்கு இருந்தது ஒரே ஒரு கேள்வி தான். கவினுக்கும் சேரனுக்கும் நேரடியாக விவாதம் வந்ததாகக் கூட தெரியவில்லை. அப்படி இருக்கும் போது, அவர் சொன்ன குற்றச்சாட்டையெல்லாம் எடுத்துக் கொண்டு போய் சேரனிடம் பேசுவதில் என்ன பிரச்சினை அவருக்கு? தர்ஷன் உடன் இருக்கார். அவரைக் கூட வைத்துக் கொள்ளலாம். சேரனும் அப்படி ஒன்றும் அணுக முடியாதவர் கிடையாது. தன் மேல தப்பு எனச் சொன்ன பொழுதெல்லாம், மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவர் இந்த தவறுகளைச் செய்கிறார் என லாஸை ப்ரெயின் வாஷ் செய்வதற்குப் பதிலாக, சேரனிடமே பேசலாம். முகின், தர்ஷனையும் இன்ஃப்ளூயன்ஸ் செய்தது கவினாகத்தான் இருக்கவேண்டும்.
பிறகு கவினும் லாஸும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, லாஸை உள்ளே போக சொல்கிறார் சாண்டி. மறுபடியும் இரவு உட்கார்ந்து பேசிப் பிரச்சினையை வளர்க்காதீங்க என சாண்டி அட்வைஸ் செய்வதோடு முடிந்தது நாள்.
வனிதாவைத் தேடி போலீஸ் வந்தது ஞாபகம் இருக்கும். ஆக அதனால அப்ப வெளியே அனுப்பி பிரச்சினை எல்லாம் முடிந்த உடனே உள்ளே வரச் சொல்லிட்டாங்க போல. ஏனோ வனிதா எலிமினேட் நேரத்தில் அவருக்கு பயங்கர சப்போர்ட் இருந்ததும் உண்மை.
கவின் – லாஸ் உறவு மீண்டும் ஒரு பேசு பொருளாகும்.