Shadow

Tag: விஜய்

”மிஷன் – சாப்டர்- 1 என்னை வேறுமாதிரி இப்படத்தில் பார்ப்பீர்கள்” – அருண் விஜய்

”மிஷன் – சாப்டர்- 1 என்னை வேறுமாதிரி இப்படத்தில் பார்ப்பீர்கள்” – அருண் விஜய்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஷன் சாப்டர்1' ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.எடிட்டர் ஆண்டனி பேசியதாவது, "படம் சூப்பராக வந்திருக்கிறது. அருண் விஜய் சாரும் சூப்பராக செய்திருக்கிறார். இண்டர்நேஷனல் தரத்தில் படம் வந்திருக்கிறது".நடிகர் ருத்ரன், "தமிழில் இது என்னுடைய முதல் படம். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. அருண் விஜய், ஏமி ஜாக்சன் இருவரும் ஆக்‌ஷனில் பின்னியுள்ளார்கள். ஆதரவு கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி".நடிகர் விராஜ், "இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. படத்தில் வேலைப் பார்த்த நடிகர்கள் தொழில்நுட்பக் குழுவினருக்கு நன்றி".நடிகர் பரத் கோபன்னா பேசியதாவது, "இந்தப் படம் வெளியாகும் நாளுக்காகதான்...
வாரிசு விமர்சனம்

வாரிசு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தொழிலதிபர் ராஜேந்திரன் பழனிச்சாமிக்கு, ஜெய், அஜய், விஜய் என மூன்று மகன்கள். தனது தொழில் வாரிசாக அவர் எந்த மகனை நியமிக்கப் போகிறார் என முடிவெடுக்கக் கதையில் எழு வருடமும், படத்தில் ஒரு மணி நேரம் பத்து நிமிடங்களும் எடுத்துக் கொள்கிறார் ராஜேந்திரன். ராஜேந்திரனின் மகுடம் அவரது இளைய மகன் விஜய் ராஜேந்திரனிடம் போகிறது. பிளவுப்படும் குடும்பத்தையும், ராஜேந்திரன் எழுப்பிய தொழில் சாம்ராஜ்ஜியத்தையும், விஜய் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. ஒரு நாயகன் மாஸாகவோ, பாஸாகவோ பரிணாமம் அடைய, வலுவானதொரு வில்லன் தேவை. படத்தில், சொல்லிக் கொள்ளும்படியான வில்லத்தனத்தை ஜெய், அஜயாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்தும் ஷாமுமே செய்து விட, தொழிலதிபர் ஜெயபிரகாஷாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜின் பாத்திரம் டம்மி வில்லனாகக் காற்று போன பலூனாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்கு முன் விஜயே கடுப்பாகி...
பிகில் விமர்சனம்

பிகில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'ப்யூகல் (Bugle)' என்பதொரு ஊது கருவி. பொதுவாக இராணுவத்திலும், ஸ்கெளட்டிலும் ப்யூகலை உபயோகிப்பார்கள். அதன் மழூஉவே 'பிகில்'. தற்போது அது விசிலுக்கான மாற்று சொல் என்பது போல் திரிபடைந்துவிட்டது. இப்படத்தில், பிகில் என்பது சிறந்த கால்பந்தாட்ட வீரரான மைக்கேலின் ஜெர்சியில் இடம்பெற்றிருக்கும் செல்லப்பெயர். மேலும், டீமின் கோச் விசில் ஊதி வீரர்களை ஒருங்கிணைத்துப் பயிற்சியளிக்கிறார் என்பதாகத் தலைப்பினைக் காரணப் பெயராகவும் கொள்ளலாம். மைக்கேல் தலைமை வகிக்கும் அணி 'கப்' அடிக்க வேண்டுமென்பது அவரது தந்தை ராயப்பனின் ஆசை. ராயப்பனின் கண் முன்பே அந்தக் கனவைச் சரிக்கும் மைக்கேல், பின்பு மைக்கேல் ராயப்பனாக தனது தந்தையின் கனவை எப்படி நனவாக்குகிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் ஒரே ஒரு காட்சி கூடப் புதிதாக அமைக்கப்படவில்லை. பலமுறை பல படங்களில் பார்த்துப் பழகிய, அடுத்து என்னவென்று சுலபமாய் யூகிக்கக் கூடிய...
மெர்சல் விமர்சனம்

மெர்சல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மெர்சலாயிட்டேன் என்றால் மிரண்டு விட்டேன் எனப் பொதுவாக பொருள் கொள்ளலாம். இந்தத் தலைப்பை அட்லி, இயக்குநர் ஷங்கரின் ஐ படத்தின் மெர்சலாயிட்டேன் பாடலின் வரிகளில் இருந்து 'இன்ஸ்பையர்' ஆகி எடுத்திருக்கச் சாத்தியங்கள் உள்ளன. கபிலனின் அந்தப் பாடல் வரிகளைப் பார்த்தால், பயத்தால் மிரள்வது மெர்சல் அல்ல என்று புரியும். ஒரு திகைப்பில், ஆச்சரியத்தில் எழும் பரவச உணர்வு என்பதாக மெர்சலுக்குப் பொருள் வருகிறது. படத்தில் அத்தகைய மெர்சல் உணர்வு மூன்று நபர்களுக்கு எழுகிறது. முதலாவதாக, ஃபிரான்ஸ் கேஃபே-வில் காஜல் அகர்வாலுக்கு. கையிலிருக்கும் ஒரு பணத் தாளில் இருந்து, விஜய் நிறைய பணம் வர வைக்கும் பொழுது. இரண்டாவதாக, நியூஸ் சேனல் வாசலில் நிற்கும் சமந்தாவிற்கு. பந்து பொறுக்கிப் போடும் தம்பி தான் ஐந்து ரூபாய் டாக்டர் மாறன் எனத் தெரிய வரும் பொழுது. மூன்றாவதாக, கிராமத்தில் பெரிய மருத்துவமனைக் கட்டடத்தை டீன் எஸ்.ஜே.சூர்...
பைரவா விமர்சனம்

பைரவா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பொங்கலுக்கு ஒரு படம், நாயகன் விஜயின் கணக்கில் வரவு வைக்கவேண்டுமென்ற ஆவலில் உருவாகியுள்ள படம். தீமையை எதிர்த்து ஒற்றை ஆளாய்ப் போராடி, பைரவா வாகை சூடுவதுதான் படத்தின் கதை. வில்லனாகப்பட்டவர் கல்வித் தந்தை, நாயகி மருத்துவம் படிக்கும் மாணவி, விஜய் மாஸ் ஹீரோ என்பதை முதல் பாதியில் நீட்டி முழக்கியும், வில்லனை நாயகன் எப்படி வீழ்த்துகிறார் என்பதை இரண்டாம் பாதியிலும் சொல்லியுள்ளனர். சுவாரசியமோ, புதுமையோ, திருப்பமோ அற்ற திரைக்கதையின் நீளம் சற்றே அதிகம். விஜய் அழகாக, அசத்தலாக, இளமையாகத் துள்ளலோடு படம் நெடுகே வருகிறார். நாயகனின் அறிமுகம் தான் மாஸ் ஹீரோ படத்தின் டோனை செட் செய்ய உதவுவது. மிகப் பரிதாபகரமாக அதில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர் பரதன். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்குத் தகுந்தபடி 'மாஸ்' எனும் விஷயம் முழுப் படத்திலுமேயே மிஸ்ஸிங். சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் சோபிக்கவில்லை. ...
தெறி விமர்சனம்

தெறி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘சிதறி விசையுடன் விழுதல்’ என தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். விஜய்குமார் நேர்மையான நல்ல காவல்துறை அதிகாரி. அவர் நீதியை நிலை நாட்ட கொடூரமாக ஒரு கொலை செய்து விடுகிறார். நல்லவனே கொலை செய்யும் போது, கெட்டவன் சும்மா இருப்பானா? ஒரு கொலைக்குப் பதிலாக நான்கு கொலைகள் என இலக்கு நிர்ணயித்து பழி வாங்குகிறார் வானமாமலை. நாயகன் கதியென்ன? வானமாமலை வதம் நடந்து தர்மம் வென்றதா? எதார்த்தத்தில் நிகழ்வது போல் அதர்மம் வென்றதா? முதலிய கேள்விகள் தான் படத்தின் கதை. படத்தின் ஆச்சரியமும் அழகுமாக நிவி எனும் பாத்திரத்தில் நடித்துள்ள நைனிகாதான். நைனிகா என்றால் அழகிய கண்களுடையவர் எனப் பொருளாம். சில ஃப்ரேம்களில் மீனாவை ஞாபகப்படுத்துகிறது அவரது முகம். நைனிகா ஆளும் ஃப்ளாஷ்-பேக்கிற்கு முன்னான ஆரம்ப காட்சிகள் சாரலில் நனைந்தது போல் இருக்கிறது. பின் தொடங்கும் வழக்கமான கதை சொல்லலில் இருந்து அயர்ச்சி ஏற்படுகிறது. இடைவேளைக்குப் ...
புலி விமர்சனம்

புலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருதீரனின் காதலியைக் கடத்தி விடுகின்றனர் வேதாளபுரத்தின் வீரர்கள். பலம் பொருந்திய வேதாளர்களிடமிருந்து மருதீரன் தன் காதலியை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. மருதீரன், புலிவேந்தனும் என இரண்டு வேடங்களில் விஜய். விஜய்யின் வழக்கமான நடிப்பில் மருதீரனும், ‘மக்களுக்காக சந்தோஷமா சாவேன்’ என அடித் தொண்டையில் கோவத்தை அடக்கிப் பேசும் விஜய்யின் வித்தியாசமான (!?) நடிப்பில் புலிவேந்தனும் திரையில் தோன்றுகின்றனர். ஸ்ருதிஹாசன் மழலையில் கொஞ்சிப் பேசி ஆடவும், ஹன்சிகா ஆட மட்டுமென நேர்ந்து விடப்பட்டுள்ளனர். ஜலதரங்கனாக வரும் சுதீப் மட்டும் கிடைத்த சின்னஞ்சிறு வாய்ப்பைத் தவற விடாமல் தன் நடிப்பால் ஈர்க்கிறார். ஸ்ரீதேவியோ ஒப்புக்கு வில்லியாக்கப்பட்டுள்ளார். ஒரு நீள ஃபேன்டஸி படத்துக்கு முயற்சி செய்துள்ளார் சிம்புதேவன். வைரநல்லூர் கிராமம், வேதாளபுரக் கோட்டை, குள்ள மனிதர்கள், ஒற்றைக் கண் மனிதன் எனப் பார்த்...