Shadow

Tag: வித்யா பிரதீப்

எக்கோ விமர்சனம்

எக்கோ விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நம்மிலிருந்து புறப்படும் ஒலிகள் சில நேரம் சென்று தேங்கவோ, பதுங்கவோ, கரைந்து போகவோ வழியின்றி வெற்றிடத்தில் பட்டு மீண்டும் நம்மிடமே திரும்பி வரும். அந்த எதிரொலியை ஆங்கிலத்தில் எக்கோ என்கிறோம். முதல் வாக்கியத்தில் இருக்கும் ஒலிகள் என்கின்ற வார்த்தையை எடுத்துவிட்டு வினைகள் என்று வார்த்தையை நிரப்பி அதே வாக்கியத்தை மீண்டும் ஒரு முறை படித்தால் அது தான் இந்த எக்கோ படத்தின் ஒன்லைன். புதுமணத் தம்பதியாக தங்கள் மணவாழ்க்கையைத் துவங்கவிருக்கும் ஸ்ரீகாந்த், பூஜா ஜாவேரி இணைக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஸ்ரீகாந்திற்கு விசித்திரமான சத்தங்கள் காதைக் கிழிப்பது போல் கேட்கத் துவங்குகிறது. அது போல் துணி தொங்கும் இடத்தில் நகக்கீறல்கள், கால் பாதத்தில் படிந்து அடுத்த நொடி காணாமல் போன இரத்தம், திரைச்சீலை அவரின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயல்வது போன்ற பல அசம்பாவிதங்கள் நடக்க, அவரின் வேலைத் திறன் பாதிக்கப்படுகிறத...
எண்ணித்துணிக விமர்சனம்

எண்ணித்துணிக விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு நகைக்கடைக் கொள்ளையில் மூன்று பேர் கொல்லப்பட, நாயகன் கொள்ளைக்காரர்களைத் தேடி அவர்கள் முன் நிற்கத் துணிகிறான். குற்றவாளிகளைத் தப்ப விடாமல் தண்டனை வாங்கித் தரவேண்டும் என்பதை மீறி நாயகனிடம் ஒரு சாகச உணர்வு தொற்றிக் கொள்கிறது. ‘அவங்க முன்னாடி போய் நிற்கணும்’ என்ற தீர்மானத்துடன் உள்ளார். அப்பொழுது போலீஸ்? ஐடியில் வேலை செய்யும் நாயகன் அளவிற்குக் கூட விசாரணையை மேற்கொள்ளாமல் சுதாரிப்பின்றி உள்ளனர். அதிலும் அமைச்சர் ஒருவர், போலீஸுக்குப் பயங்கர குடைச்சல் தருகிறார். அமைச்சராக வைபவின் அண்ணன் சுனில் நடித்துள்ளார். முதல் பாதியில், காலில் வெந்நீர் ஊற்றியது போல் ஓர் அவஸ்தையோடு வருபவர், இரண்டாம் பாதியில் ரசிக்க வைக்கிறார். அவரது ஜோடியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தும், தனது ஸ்க்ரீன் பிரசென்ஸால் மற்ற இருவரை விடத் தனித்துத் தெரிகிறார். கொள்ளைச் சம்பவத்தில் தன் கணவனை இழ...