Shadow

Tag: வெண்முரசு

வியாசன் பறந்த வானில்

வியாசன் பறந்த வானில்

கட்டுரை, புத்தகம்
தினம் ஓர் அத்தியாயமென, தொடர்ந்து பத்தாண்டுகள் மகாபாரதம் எழுதும் கற்பனைக்கெட்டாத மகத்தான இலக்கை வகுத்துக் கொண்டு இந்தாண்டின் முதல் நாளிலிருந்து எழுதி வருகிறார் ஜெயமோகன். "வெண்முரசு" என பெயரிடப்பட்டிருக்கும் அத்தொகுப்பு, சுமார் 35000 பக்கங்களுடன் 40 நாவல்களாக வருமெனத் தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தொடங்கிய 10 மாதங்களுக்குள், முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் என 4000 பக்கங்கள் கொண்ட 4 நாவல்களை எழுதிவிட்டார். கமல் பாணியில் சொல்வதெனில், மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித உழைப்பே அல்ல; அதையும் தாண்டி அசுரத்தனமானது. அதே பிரமிப்புத்தான் பி.ஏ.கிருஷ்ணனுக்கும். "என் புருஷனும் கோர்ட்க்குப் போறார்னு சொல்றதுபோல, என் மனைவி என்னை எழுத்தாளர்னு நினைச்சிட்டிருக்கா. ஆனா ஒருநாளைக்கு 500 வார்த்தைகள் எழுதுவதற்குள்ளாகவே மூச்சு முட்டித் திணற வேண்டியிருக்கு. ஆனா ஜெயமோகனோ தினம் மகாபாரதம் எழுதுறார், கட்டுரைகள் ...