
கஜானா விமர்சனம் | Ghajaana review
நாகமலையில் புதையுண்டிருக்கும் பொக்கிஷத்தை யாளி எனும் மிருகம் காவல் காக்கிறது. அப்பொக்கிஷத்தை அடைய நினைக்கும் மனிதர்கள் அனைவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர்.
காசியப முனிவர்க்கு ஆரி, சூரி என இரண்டு மனைவிகள் என ஒரு கிளைக்கதை பிரிகிறது. ஹிந்துப் புராணத்தின்படி, காசியப முனிவர், தக்ஷனின் எட்டு மகள்களை மணம் புரிந்தவர். அதில், கத்ரு எனும் மனைவியின் மூலமாக 1000 நாகர்களும், கத்ருவின் இளைய சகோதரி வினதா மூலமாக அருணன், கருடன் என இரண்டு மகன்களும் பிறந்தனர். இந்தப் புராணக் கதையை மையமாக எடுத்து, நாகர்களும் கருடர்களும் ஆரி சூரிக்குப் பிறந்ததாகப் படத்தில் காண்பிக்கின்றனர். கருடர்கள் அசுரர்கள் ஆகின்றனர், நாகர்களில் ஒருவரான வாசுகி சிவனின் கழுத்தில் அணியாக மாறுகின்றனர். பஞ்சபூதங்களை அடக்கவல்ல நாகரத்தினக் கற்களை நாகர்களுக்கு வரமாக அளிக்கின்றார் சிவன். கருடர்கள் அதைத் திருட நினைப்பதால், பூமியில் நாகமலையில் ந...








