Shadow

Tag: வைரமுத்து

தெலுங்கில் கொடியை நாட்டித் தமிழுக்கு வரும் தமிழ் இசையமைப்பாளர்

தெலுங்கில் கொடியை நாட்டித் தமிழுக்கு வரும் தமிழ் இசையமைப்பாளர்

சினிமா, திரைச் செய்தி
திறமையானவர்கள் எங்கிருந்தாலும், அவர்களுக்கான வாய்ப்பு தேடி வரும் என்பதை பிற மொழித் திரைப்படங்களில் பணியாற்றும் தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் நிரூபித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் இருந்து புறப்பட்டு தற்போது தெலுங்கு சினிமாவை கலக்கிக் கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் நவ்பல் ராஜா (NAWFAL RAJA). திருநெல்வேலியை பூர்விகமாக கொண்ட இசையமைப்பாளர் நவ்பல் ராஜா, சிறுவயது முதலே இசை மீது தீரா காதல் கொண்டதால், தனது பள்ளி பருவத்திலேயே பல இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டார். மேலும், பள்ளிப்படிப்பை முடித்தவுடன் இசைத்துறை தான் தனது வாழ்க்கை என்று முடிவு செய்து அதில் பயணித்தவர் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக பயணித்து வருகிறார். நவீன் சந்திரா, சாய்குமார் ஆகியோரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அர்த சதாப்தம்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவி...
“என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமான் ஆதங்கம்

“என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமான் ஆதங்கம்

திரைச் செய்தி, திரைத் துளி
ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், சிவா கிலாரி, இயக்குநர்கள் வ....
“கட்டில் – நினைவுகளின் வலியைப் பதிந்துள்ள திரைப்படம்” – கவிப்பேரரசு வைரமுத்து

“கட்டில் – நினைவுகளின் வலியைப் பதிந்துள்ள திரைப்படம்” – கவிப்பேரரசு வைரமுத்து

சினிமா, திரைச் செய்தி
Maple Leafs Productions தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்” ஆகும். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத் திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இவ்விழாவினில் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “தம்பி கணேஷ்பாபு என் பாசத்துக்குரியவர், நேசத்துக்குரியவர். ஒரு நேசத்தை எப்படி எடை போடுவது? அதை காலம் காட்டிக் கொடுத்து விடும். நேரம், தோல்வி, வெற்றி எல்லாம் தாண்டி என்னோடு கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகப் பயணித்து வருகிறார். அவர் என் அன்புக்குரியவர். கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. இது மாதிரி படங்களில் தான் புதிய கலை...
திரைப்பாடல் வானின் ஒரே நிலா | வைரமுத்து

திரைப்பாடல் வானின் ஒரே நிலா | வைரமுத்து

சினிமா
தமிழ்த் திரைப்படப் பாடல்கள் வரலாற்றில் வைரமுத்து நிகழ்த்தியிருப்பது யாரும் எட்டியிராத சாதனை. இனியும் யாரும் எட்டமுடியாத சாதனை. வைகறை மேகங்களில் வெளிப்பட்ட சொல்லாட்சி புதுப்புது பிரவாகமெடுத்து பாடல்கள் வழியே இன்று வரையிலும் நின்று ஆட்சி செய்கின்றன. 'இதுவொரு பொன்மாலைப் பொழுது'-இல் அடியெடுத்து வைத்த வைரமுத்துவின் சந்தப்பயணம் எப்படிப் பார்க்கினும் மலைக்கவே வைக்கிறது. சங்க இலக்கியங்களின் உள்ளடக்கங்களைப் பாடல்களில் புகுத்திய வல்லமையை எப்படித்தான் மனிதர் வகுத்தாரோ! ‘ஆயிரம் நிலவே வா’ படத்தில், ‘அந்தரங்கம் யாவுமே’ எனத் துவங்கும் பாடலில், ”பாவை உடலில் கோடி மலரில் ஆடை அணிந்தேன், ஆடை அறியும் சேதி முழுதும் நானும் அறிந்தேன்” என ஒரு குறுங்கவிதையின் குறும்பு அவ்வரிகளில் கொப்பளிக்கும். தத்துவப் பாடல்களில் வைரமுத்து கொடி நாட்டவில்லை என்ற விமர்சனத்தை வைரமுத்து காலத்திய சினிமாக்களின் வணிகத்தேவை. மற்றும் ர...
“இது சீமானின் பாட்டு!” – வைரமுத்து

“இது சீமானின் பாட்டு!” – வைரமுத்து

சினிமா, திரைத் துளி
சீமானின் தம்பி திரைக்களமும், ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 உம் இணைந்து தயாரிக்க, இரா.சுப்ரமணியன் இயக்கும் படம் அமீரா. ஒரு திருடனின் வாழ்க்கையில் ஓர் அழகான பெண் குறுக்கிடுகிறாள். அவள் அழகு அவனைத் திக்குமுக்காட வைக்கிறது. அந்த அழகின் வழியே வந்த அன்பு அவனது திருட்டுத் தொழிலையே மாற்றுகிறது; அவன் திருந்துகிறான். அவள் எப்படிப்பட்ட அழகி, அந்த அழகு அவனை என்னவெல்லாம் செய்தது என்பதுதான் பாட்டு. 15 நிமிடங்களில் பாடல் எழுதி முடித்தாராம் கவிஞர் வைரமுத்து. அந்த நேரத்தில் தொலைபேசியில் வந்த இயக்குநர் சீனுராமசாமியிடம் பேச்சோடு பேச்சாக அந்தப் பாடலைப் படித்துக் காட்டியிருக்கிறார். உணர்ச்சிவசப்பட்டு, ‘ஆஹா.!’ என்ற சீனுராமசாமி, “இது என் கதைக்குத்தான் பொருந்தும். என் கதாநாயகிக்குத்தான் பொருந்தும். இதை எனக்குத்தான் கொடுக்க வேண்டும்” என உறுதியாகக் கேட்டுள்ளார். “இது சீமானுக்கு என்று எழுதப்பட்ட பாட்டு; கொடுத்த வாக...
செக்கச்சிவந்த வானம் விமர்சனம்

செக்கச்சிவந்த வானம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொழிலதிபர், கல்வித் தந்தை, ரியல் எஸ்டேட் கிங், மணல் மாஃபியா எனப் பன்முகம் கொண்ட சேனாபதியின் குற்றவியல் சாம்ராஜ்ஜியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க, அவரது மூன்று மகன்களுக்குள் வாரிசுப் போட்டி நடக்கிறது. அதனால் சிந்தப்படும் ரத்தத்தால், சேனாபதி சாம்ராஜ்ஜியத்தின் பரந்து விரிந்த வானம் சிவக்கத் தொடங்குகிறது. போட்டிப் போட்டுக் கொண்டு சிவக்க வைத்துள்ளனர் அரவிந்த் சுவாமி, அருண் விஜய் சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோர். கதாபாத்திரங்கள் தேர்வு கனகச்சிதம் என்றால், அவர்களை அறிமுகப்படுத்திய விதத்திலும், மெல்ல கதைக்குள் இழுத்த யுக்தியிலும் மணிரத்னம் அசத்தியுள்ளார். படத்தின் முதல் பாதி செம கிளாஸாக, மணிரத்னத்திற்கே உரித்த ஸ்டைலிஷான ஃப்ரேமிங்கால் கவர்கிறார். கேங்ஸ்டர் படத்திற்கான அமர்க்களமான அஸ்திவாரத்தைப் போட்டு விடுகிறார். தலைக்கட்டு சாய்வதோடு முதல் பாதி முடிய, 'மணிரத்னம் இஸ் பேக்டா (backda)' என்ற பரவச குரல்களை...
கிழிந்த வேட்டியைப் பறிக்கும் மத்திய அரசு – கவிஞர் வைரமுத்து கண்டனம்

கிழிந்த வேட்டியைப் பறிக்கும் மத்திய அரசு – கவிஞர் வைரமுத்து கண்டனம்

சமூகம், சினிமா
வரலாற்றுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நெற்களஞ்சியம் என்று கொண்டாடப்படும் தஞ்சைப் பாசனப்பரப்பு பாலைவனமாகிவிடுமோ என்ற அச்சம் தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிறது. “விளைந்தால் விலையில்லை; விலையிருந்தால் விளைச்சலில்லை” என்ற சந்தைக் கலாசாரத்தால் விவசாயி ஏற்கெனவே வீழ்ந்து கிடக்கிறான். இப்போது காவிரியில் தண்ணீரும் கண்களில் கண்ணீரும் வற்றிப்போன பிறகு என்ன செய்வான் பாவம் ஏழைத் தமிழ் உழவன்? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கான உரிமைத் தண்ணீரைக் குறைத்துக்கொடுத்தது. அந்தக் குறைந்த தண்ணீரையாவது காவிரி மேலாண்மை வாரியம் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையின்மீது இப்போது நம்பிக்கை இல்லாமல் செய்வது நியாயமா? உச்சநீதிமன்றத் தீர்ப்பு ‘ஸ்கீம்’என்ற சொல்லைச் சுட்டியிருக்கிறது. கிளி என்றாலும் கிள்ளை என்றாலும் ஒன்றுதான். ‘ஸ்கீம்’ என்றாலும் காவிரி மேலாண்மை வாரியம் என்றாலும் ஒன்றுதான் என்று உச்ச நீதிமன்றத...
வைரமுத்துவின் சத்தியமும் சாதியமும்

வைரமுத்துவின் சத்தியமும் சாதியமும்

கட்டுரை, சமூகம், சினிமா
கவிப்பேரரசு அவர்களுக்கு வணக்கம், நான் பாடலாசிரியன் ஆனதன் பின்னணியில் வெறெந்தப் பாடலாசிரியைரை விடவும் உங்கள் பங்கு தான் அதிகம். ஏனெனில் வாழ்க்கை முழுவதும் இளையராஜா பாடல்களையே அதிகமாகக் கேட்கும் பாக்கியம் பெற்ற எத்தனையோ கோடி தமிழர்களில் நானும் ஒருவன். இளையராஜா பாடல்கள் என்றால் நீங்கள் இல்லாமல் எப்படி? உங்கள் பாடல்கள் என்றால் இளையராஜா இல்லாமல் எப்படி? ஆகையால், இளையராஜாவின் மெட்டுகளோடு உங்கள் வார்த்தைகளை, வரிகளை ரசிக்கத் தொடங்கிய அந்த ரசனை, உங்களின் அனைத்துப் படைப்புகளுக்கும் பாடல்களுக்குமாய் விரிந்தது. அப்படியாக நான் பாடலாசிரியனாக மாறியதன் பின்னணியில் நீங்கள் இருப்பதை நான் எப்போதும் பெருமைக்குரியதாகவே கருதுகிறேன். கருதுவேன். சமீபத்தில் ஓர் இலக்கிய இதழில் உங்களின் ஒரு பேட்டியை வாசிக்க நேர்ந்தது. அதில் இரண்டு கேள்விகளுக்கான உங்கள் பதில்கள் என்னை இப்படி பின்வருமாறு எழுத வைத்தது. ~~ கேள்வி 1:...
அசோகமித்திரன்: ஆரவாரமில்லா எழுத்து – வைரமுத்து

அசோகமித்திரன்: ஆரவாரமில்லா எழுத்து – வைரமுத்து

சமூகம்
எழுத்துலகில் நல்லெழுத்து, வணிக எழுத்து என்று இரண்டு உண்டு. வணிகச் சந்தையிலும்கூட நல்லெழுத்தே எழுதியவர் அசோகமித்திரன். அவரெழுத்தில் ஆரவாரமில்லை. அலங்காரங்களின் அணிவரிசையில்லை. சத்தியம் மட்டும் அவர் எழுத்தில் தகித்துக் கிடந்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு மரணம் நேர்கிறது. உடலுக்கு நேரும் மரணத்தால் ஒரு மனிதன் முதல்முறை மரிக்கிறான். அவனுக்குப் பிறகும் அவனை நினைத்துக்கொண்டேயிருக்கும் சமூகத்தின் கடைசி மனிதன் மரிக்கும்போது இரண்டாம் மரணம் எய்துகிறான். அசோகமித்திரனை நினைக்கும் மனிதர்கள் இன்னொரு நூற்றாண்டிலும் இருப்பார்கள். அதனால் இப்போதைக்கு அவருக்கு இரண்டாம் மரணம் இல்லை. நடுத்தர வர்க்கத்தின் வாழ்வின் வலியை அவரைப்போல் எதார்த்தமாக எழுதியவர்கள் குறைவு. ‘கரைந்த நிழல்கள்’ என்ற நாவலில் ஒரு தயாரிப்பாளரையும் ஒரு நடிகையையும் படைத்திருக்கிறார். “படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என்று ஓர் இளம் நடிகை அடம்பிடி...
ஒரு நல்லபாட்டு முடிந்தது – வைரமுத்து

ஒரு நல்லபாட்டு முடிந்தது – வைரமுத்து

சினிமா, திரைத் துளி
இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவு கொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். “மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு” என்று சொன்னவர், “வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு” என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார். தமிழ்க் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய்ச் செழிக்க வேண்டும் என்று பேராசை கொண்டவன் நான். இன்று இளங்கன்று ஒன்று தன் வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதே என்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறேன். ‘உன் சொந்த ஊர் எது தம்பி?’ என்...
தூங்கா வனத்தின் க்ளிட்ச் மியூஸிக்

தூங்கா வனத்தின் க்ளிட்ச் மியூஸிக்

சினிமா, திரைத் துளி
“உத்தமவில்லன், பாபநாசம் என மியூஸிக் பண்ணி, அந்த ஹேங் ஓவரில் இருந்து வெளிவராமல் இருந்தேன். தூங்கா வனத்துக்கு எந்த பேட்டர்னில் மியூஸிக் பண்ணலாம்னு ஐடியா போயிட்டே இருந்தது. கமல் க்ளிட்ச் மியூஸிக் பண்ணலாம் என்றார். எனக்கு ஒரு சந்தேகம். க்ளிட்ச்னு ஒருவகை மியூஸிக் இருக்கு. அதைத்தான் சொல்றாரா எனக் கேட்டேன். ஆமாம்ன்னார். ஆனா, அந்த வகை மியூஸிக்கில் ஸ்பீக்கர் கிழிஞ்சாப்ல சத்தம் வரும். சரியா மிக்ஸ் செய்யலைன்னு நினைச்சுட்டா என்னப் பண்றதுன்னு டென்ஷனா கேட்டேன். ‘க்ளிட்ச் மியூஸிக், மெட்டல் மியூஸிக் ஒன்னு இருக்குன்னு நாம ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கலைன்னா வேற யார் சேர்ப்பா?’ என என்னிடம் கேட்டார். இதுல நானொரு பாடம் கத்துக்கிட்டேன். புதுசா ஒன்னு ஆடியன்ஸ்க்கு அறிமுகப்படுத்துவதில் நாம் தயக்கம் காட்டக் கூடாது” என்றார். “ஜிப்ரனின் வாய் பேசாது; அவரது வாத்தியங்கள் பேசும்” என ஜிப்ரானைப் புகழ்ந்த வைரமுத்து, “ஒருந...