சைலன்ஸ் விமர்சனம்
சியாட்டல் வாழ் இசை கலைஞரான அந்தோனி கொன்சால்வேஸ் மர்மமான முறையில் ஒரு பேய் வீட்டில் கொல்லப்படுகிறார். காது கேட்காத, வாய் பேச முடியாத அவரது காதலி சாக்ஷியும் அமானுஷ்யமான முறையில் தாக்கப்படுகிறார். கொலைக்குக் காரணம் அமானுஷ்யம் சூழ்ந்த அந்த வீட்டின் பேய் என்று அனைவரும் நம்பும் பட்சத்தில், கொலையாளியைப் பிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார் காவல்துறை அதிகாரியான மகாலக்ஷ்மி. கொலைக்கான காரணத்தையும், கர்த்தாவையும் மகாலக்ஷ்மி எப்படிக் கண்டுபிடித்தார் என்பதுதான் படத்தின் கதை.
தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் எடுக்கப்பட்ட படம், மலையாளத்தில் டப் செய்யப்பட்டு மும்மொழியில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே என நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள படம். எனினும், சியாட்டலில் கதை நிகழ்வதாலோ என்னவோ, படத்தில் ஒன்ற முடியாமல் ஒரு அந்நியத்தன்மை இழையோடுகிறது.
டீட்டெயிலிங் இல்லாத கத...