Shadow

Tag: ஷேன் நிகம்

மெட்ராஸ்காரன் விமர்சனம்

மெட்ராஸ்காரன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
திருமணத்திற்கு முன் தினம், ஒரு கர்ப்பினி பெண் மீது காரை மோதி விடுகிறான் நாயகன். ஊரே அவனுக்கெதிராகத் திரண்டு விடுகிறது. அவ்விபத்தினால், கர்ப்பிணிப் பெண்ணுக்குக் குழந்தை இறந்து பிறக்க, ஐம்பதாயிரம் அபராதமும், இரண்டு வருடம் சிறைத் தண்டனையும் பெறுகிறான். அக்குழந்தையின் மரணத்திற்கு, தான் காரணமில்லை எனத் தெரிய வர, உண்மையைக் கண்டறியப் புறப்படுகிறான் நாயகன். நாயகன், உண்மையைக் கண்டுபிடித்து தன் குற்றவுணர்வில் இருந்து மீள்கிறானா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு. இப்படத்திற்கு, 'மெட்ராஸ்காரன்' எனத் தலைப்பிட நிச்சயம் ஒரு முரட்டுத் தைரியம் வேண்டும். கதையின் களம் புதுக்கோட்டை, கதாமாந்தர்களோ அம்மண்ணின் மைந்தர்கள். நாயகன், சென்னையில் வேலை பார்ப்பதாலும், அவன் சென்னை ரெஜிஸ்ட்ரேஷன் கார் வைத்திருப்பதாலும், அவனை மெட்ராஸ்காரன் என அழைக்கின்றனர். சொந்த ஊர் மெச்சும்படி தன் கல்யாணத்தை நடத்தவேண்டுமென்ற லட்சியம் கொ...
மெட்ராஸ்காரன் – இருவர் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஆக்‌ஷன் த்ரில்லர்

மெட்ராஸ்காரன் – இருவர் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஆக்‌ஷன் த்ரில்லர்

இது புதிது
மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர்டிஎக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் கலையரசன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடித்துள்ளனர். ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாகத் தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையைப் புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார்.SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய தயாரிப்பாள...