Shadow

Tag: ஸ்டாலின்

மு.க.ஸ்டாலினுக்குக் கருணாஸ் வாழ்த்து

மு.க.ஸ்டாலினுக்குக் கருணாஸ் வாழ்த்து

சமூகம்
திராவிட முன்னேற்றக் கழகம் இன்று புதிதாய்ப் பிறக்கிறது! பெரும் மதிப்பிற்குரிய அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இன்று தலைவராய்ப் பிறக்கிறார்! “ஒரு நாயகன் உதயமாகிறான். ஊரார்களின் இதயமாகிறான்” என்று காவியக் கவிஞர் வாலி எழுதிய வரிகளுக்கு ஏற்ப, புதிய சூரியனாய் மு.க. ஸ்டாலின் உதயமாகிறார். முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் அகம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்! மாணவர் கழகப் பொறுப்பாளராக, இளைஞரணிச் செயலாளராக, மாநிலப் பொருளாளராக, சென்னை மேயராக, துணை முதல்வராக, செயல் தலைவராக, சட்டப்பேரவை உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக படிப்படியாக உயர்ந்து பரிமாணம் பெற்றவர் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள். 14 வயது முதல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெறும் இயக்கத்தின் பாதையில் பயணம் செய்கிறவர். போராட்டக் களம், சிறைவாழ்க்கை, தியாகத் தழும்புகள் என இவரது தன்வரலாறு நீளும். அதுதான் இவரை இன்று தலைவர் சிம்மாசனத்தில...