Shadow

Tag: அருண் விஜய்

மாஃபியா: அத்தியாயம் 1 விமர்சனம்

மாஃபியா: அத்தியாயம் 1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாஃபியா – குற்றத்தை நிறுவனமயப்படுத்தும் ஓர் இயக்கம் எனப் பொருள் கொள்ளலாம். அப்படி, போதைப் பொருள் கடத்துவதை நிறுவனமயப்படுத்தும் திவாகர் குமரனைப் பிடிக்க நினைக்கிறார் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஆரியன். இதுதான் மாஃபியா படத்தின் கதை. Ground to Earth பெர்ஸ்னாலிட்டியாக நடித்துள்ளார் பிரசன்னா. டிகே (DK) எனும் திவாகர் குமரன், பெரிய சிண்டிகேட்டின் லோக்கல் தலைவராக இருந்தும், யாரையாவது மிரட்ட, தானே நேரடியாகக் களம் இறங்குகிறார். அவரது அலட்டலில்லாத அமைதி ரசிக்க வைக்கிறது. காட்டில் தானொரு நரி எனச் சொல்லிக் கொள்ளும் அவர், அது போன்று குயுக்தியாக எதுவும் செய்வதில்லை. நாயகனைக் காதலிக்கவும், ஸ்லோ-மோஷனில் நடக்கவும், ஆரியனின் குழு உறுப்பினர் சத்யாவாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இன்னொரு குழு உறுப்பினர் வருணாக பாலா ஹாசன் நடித்துள்ளார். வில்லனின் குடோனைத் தாக்கும் மிக முக்கிய பணியை இருவரும் ...
தடம் விமர்சனம்

தடம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எழிலும் கவினும் ஓருரு இரட்டையர்கள் (Identical twins). அவர்களில் ஒருவர் கொலையாளி என்பதற்கான புகைப்படத் துப்பு காவல்துறையினர்க்குக் கிடைக்கிறது. அவ்விரட்டையரில் கொலையாளி யாரென்பதைக் காவல்துறையினர் கண்டுபிடிக்க படாதபாடுபடுகின்றனர். கொன்றது யார், ஏன் கொன்றார், அவர் அழிக்காமல் விட்ட தடம் எது என்பதன் தான் படத்தின் கதை. கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யத் தொடங்கும் முதல் ஃப்ரேமிலேயே நம்மைத் திரைக்குள் இழுத்துவிடுகிறார் மகிழ் திருமேனி. சிகரெட் பிடிக்கும் சேச்சி; பெண்களின் மார்புக்கச்சைக்கும், கொல்கத்தா ஹெளரா பாலத்துக்கும் ஒரே தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்படுகிறது எனும் நாயகனின் இன்ஜினியரிங் மேஜிக் வசனம் எனப் படத்தின் முதல் 35 நிமிடங்களுக்குக் கதைக்குள் போகாமல் காட்சிகளாலும் பாடல்களாலும் மட்டுமே ரசிக்க வைக்கிறார். படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்தின் ரசனையான எடிட்டிங்கே அதற்குக் காரணம். ஒரு கொலை நடந்து, இர...
செக்கச்சிவந்த வானம் விமர்சனம்

செக்கச்சிவந்த வானம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொழிலதிபர், கல்வித் தந்தை, ரியல் எஸ்டேட் கிங், மணல் மாஃபியா எனப் பன்முகம் கொண்ட சேனாபதியின் குற்றவியல் சாம்ராஜ்ஜியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க, அவரது மூன்று மகன்களுக்குள் வாரிசுப் போட்டி நடக்கிறது. அதனால் சிந்தப்படும் ரத்தத்தால், சேனாபதி சாம்ராஜ்ஜியத்தின் பரந்து விரிந்த வானம் சிவக்கத் தொடங்குகிறது. போட்டிப் போட்டுக் கொண்டு சிவக்க வைத்துள்ளனர் அரவிந்த் சுவாமி, அருண் விஜய் சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோர். கதாபாத்திரங்கள் தேர்வு கனகச்சிதம் என்றால், அவர்களை அறிமுகப்படுத்திய விதத்திலும், மெல்ல கதைக்குள் இழுத்த யுக்தியிலும் மணிரத்னம் அசத்தியுள்ளார். படத்தின் முதல் பாதி செம கிளாஸாக, மணிரத்னத்திற்கே உரித்த ஸ்டைலிஷான ஃப்ரேமிங்கால் கவர்கிறார். கேங்ஸ்டர் படத்திற்கான அமர்க்களமான அஸ்திவாரத்தைப் போட்டு விடுகிறார். தலைக்கட்டு சாய்வதோடு முதல் பாதி முடிய, 'மணிரத்னம் இஸ் பேக்டா (backda)' என்ற பரவச குரல்களைக்...
குற்றம் 23 விமர்சனம்

குற்றம் 23 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
23 குரோமோசோன்களை மையப்படுத்தி நடக்கும் மெடிக்கல் க்ரைம் தான் படத்தின் கதை. நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் கதையை அடிப்படையாகக் கொண்டு சுவாரசியமான திரைக்கதை அமைத்துள்ளார் ஈரம் பட இயக்குநரான அறிவழகன். படத்தின் டைட்டில் போடும் பொழுதே கதை தொடங்கி விடுகிறது. டைட்டிலின் ஊடே வரும் அனிமேஷன் மிக அற்புதமாக உள்ளது. ஆணின் விந்து பெண்ணின் கருமுட்டையை அடைந்து கருவாய் உரு கொள்வதை அனிமேஷனாக்கி உள்ளனர். இதயம், கை, கால், விரல்கள் என ஒவ்வொன்றாய்த் தோன்றி, கருவிலுள்ள சிசு புன்னகைக்கும் பொழுது பரவசமாய் உள்ளது. தேவையற்ற அறிமுகங்கள் இல்லாமல், நேரடியாகக் கதைக்குள் சென்று விடுகின்றனர். வில்லிவாக்கம் சர்ச்சின் பிரம்மாண்டத்தை தன் கேமிரா கோணத்தால் ரசிக்கும்படி அமைத்துள்ளார். படத்தில் வரும் அனைத்து ஷாட்ஸுமே ரசிக்க வைக்கின்றன. கலை இயக்குநர் ஷக்தியின் பங்கு மகத்தானது. படம் நெடுகே, கதைக்கும் கதை நடக்கும் இடத்திற்கும் இயைந்...
குற்றம் 23 – இறங்கி விளையாடியுள்ள இயக்குநர் அறிவழகன்

குற்றம் 23 – இறங்கி விளையாடியுள்ள இயக்குநர் அறிவழகன்

சினிமா, திரைத் துளி
"ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய நண்பர் இந்தெர் குமாரின் நீண்ட நாள் கனவு. நல்லதொரு கதைக்களமமும், அந்தக் கதைக்களத்தில் இறங்கி விளையாடும் திறமையான கூட்டணிக்காகவும் காத்திருக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன். அதன் படி இயக்குநர் அறிவழகன் செதுக்கி இருக்கும் குற்றம் 23 படத்தின் காட்சிகள் அனைத்தும் அற்புதமான முறையில் உருவாகி நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப் பிரமாதமாக வர, பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் இந்தெர் குமார். சமீபத்தில் குற்றம் 23 படத்தின் பிரத்யேக காட்சியைப் பார்த்த எங்கள் இருவருக்கும், எப்படி எங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. ஒரு கதாநாயகனாக நான் மேற்கொண்ட பத்து மாத கால கடின உழைப்பிற்கு, தற்போது பலன் கிடைத்திருக்கிறது என்று தயாரிப்பாளர் இந்தெர் குமார் என்னைப் பாராட்டிய போது மிக உற்சாகமாக இருந்தது. குற்றம் 23 படத்தின் ஆரம்ப கட்டத்...
க்ளைமேக்ஸ் படப்பிடிப்பில் குற்றம் 23

க்ளைமேக்ஸ் படப்பிடிப்பில் குற்றம் 23

சினிமா, திரைத் துளி
பொதுவாகவே இயக்குநர் அறிவழகனின் படங்களில் க்ளைமேக்ஸ் காட்சிகள் அனைத்தும் மிகுந்த பரபரப்பாகத்தான் இருக்கும்.  அதுவும் இது ஓர் அதிரடிப் படம் என்பதால், சண்டைக் காட்சிகளுக்கு எந்த வகையிலும் பஞ்சம் இருக்காது என்பதை உறுதியாகச் சொல்கிறது சமீபத்தில் வெளியான படத்தின் 'மோஷன் போஸ்டர்'. தற்போது 'குற்றம் 23' , அருண் விஜய்யின் அசத்தலான அதிரடியிலும், அனல் பறக்கும் கிளைமாக்ஸ் படப்பிடிப்பிலும்  கலை கட்டி வருகிறது. 'சாட்டை' படப்புகழ் மகிமா நம்பியார் அருண் விஜயுடன் ஜோடி சேர்ந்து  நடிக்கும் இந்த மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் படத்தை இந்திர குமார் அவர்களின் 'ரேடான்  திசினிமா பீபள்' நிறுவனத்தோடு இணைந்து 'இன் சினிமாஸ் என்டர்டைன்மன்ட்' நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்த்தி அருண் தயாரித்து வருகிறார். முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் அருண் விஜய்யின்  'குற்றம் 23' படத்தின் இறுதிக்கட்ட கிளைமாக்ஸ் காட்சிகள், சென்னையிலு...
என்னை அறிந்தால்… விமர்சனம்

என்னை அறிந்தால்… விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அஜித்தும், கெளதம் வாசுதேவ் மேனனும் இணைகிறார்கள் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பினைக் கேட்கவும் வேண்டுமா? காதலியின் மரணம் சத்யதேவ் ஐ.பி.எஸ்.-ஐ மிகவும் பாதிக்கிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. அஜித்தின் முகத்தையும், நடையையும் எந்தக் கோணத்தில் காட்டினால் திரையில் நன்றாக இருக்குமென்ற புரிதல், அவரை வைத்து இயக்கும் இயக்குநர்களுக்கு வந்துவிட்டதெனத் தெரிகிறது. எல்லாம் வெங்கட் பிரபு வகுத்துக் கொடுத்த பாதை. மங்காத்தாக்கு பின்னான அஜித் திரையில் அங்குமிங்கும் நடந்தாலே போதுமென்பது கதையற்ற வீரம் படத்தின் திரையரங்கக் கொண்டாட்டத்தில் நிரூபணமாகிவிட்டது. சாதாரணமாகவே தன் படத்தில் நடிக்கும் நாயகர்களை பளிச்சென மாற்றிவிடுவார் கெளதம். அஜித் கிடைத்தால்? மீசையை கச்சிதமாக வெட்டியிருக்கும் இளமையான அஜித், தாடி வைத்த அஜித், தலை நரைத்த அஜித் என விதவிதமாய் அஜித்தை அழகாக திரையில் காட்டியுள்ளார். காக்...
தடையறத் தாக்க விமர்சனம்

தடையறத் தாக்க விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படம் தொடங்கிய முதல் ஃப்ரேம்மில் இருந்து பார்வையாளர்களைக் கட்டிப் போட முடியுமா? அதை சாத்தியமாக்கி இருக்கார் மகிழ் திருமேனி. கதை சொல்லும் பாணியில் அவரது முதல் படமான முன்தினம் பார்த்தேனே படத்தில் இருந்து ரொம்பவே வித்தியாசப்படுத்தி உள்ளார். அப்பொழுது வந்திருந்த விண்ணத் தாண்டி வருவாயா போலவே அவரது முதல் படம் இருந்ததோடு, வாய்ஸ்-ஓவர் என்னும் கெளதம் வாசு தேவ் மேனனின் ஸ்டைல் படம் முழுக்க விரவி இருந்தது. அவரிடம் அசோசியேட்டாக ஒரு படத்தில் பணிப் புரிந்த பாதிப்பாக இருக்கலாம். ஆனால் இம்முறை அருண் விஜய்யை வைத்து அருமையான ஆக்ஷன் படத்தைக் கொடுத்துள்ளார்.ட்ராவல் ஏஜென்சி வைத்திருக்கும் செல்வாவிற்கு அவரது காதலி ப்ரியாவுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. எதிர்பாராவிதமாக மஹா என்னும் ரவுடியைக் கொன்று விட்டான் என செல்வா மீது பழி வந்து விழுகிறது. செல்வாவைக் கொன்று ப...