Shadow

Tag: அவினாஷ் ரகுதேவன்

29* விமர்சனம் | 29 Tamil movie review

29* விமர்சனம் | 29 Tamil movie review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மேயாத மான், ஆடை, குலு குலு ஆகிய படங்களைத் தொடர்ந்து ரத்ன குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள நான்காவது படமாகும். இருபத்தொன்பது வயதான சத்யா, தனது வாழ்வின் லட்சியத்தை ஒரு காதல் தோல்வியில் இருந்து கண்டடைவதே படத்தின் கதை. இந்தக் காதல் கதையைப் பத்து அத்தியாயங்களாகப் பிரித்துச் சொல்லியுள்ளார். நீ நான் மழை குடை (1), கடல், காதல் ரோமம், ஆச்சரியக்குறி! (2), அண்ணா சாலை பேருந்து கிறுக்கல்கள் (3), சீலே.. (4), ஒரு முத்தம் 4 உதடுகள் (5), கூதிர் காற்று, அறுந்த காற்றாடி (6), கவிழ்த்துப் போட்டா ரோஜாக்கள் (7), காதல் மனசின் அதிகபிரசங்கித்தனம் (8), நெருப்பின் நடனம் (9), சான்றோன் எனக் கேட்ட காதலி (10) என்பனவே அவ்வத்தியாயங்களுக்கு ரத்ன குமாரிட்ட தலைப்புகளாகும். அயோத்தி படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ப்ரீத்தி அஸ்ரானி, 21 வயது பெண் விஜியாக இப்படத்திலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். The Wo...
செத்தும் ஆயிரம் பொன் விமர்சனம்

செத்தும் ஆயிரம் பொன் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
ஏப்ரல் 1 அன்று, நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள படம். சிறு வயதிலேயே ஊரை விட்டுப் போய்விடும் மீரா, தன் பாட்டி கிருஷ்ணவேனியைப் பார்க்க வேண்டாவெறுப்பாக ஆப்பனூர் எனும் கிராமத்திற்கு வருகிறாள். அவர்கள் உறவுக்குள் என்ன சிக்கல், அது எப்படி நகர்கிறது என்பதுதான் படத்தின் கதை. என்றாலும், ஒருவரின் மரணத்தை ஆப்பனூர் மக்கள் எப்படி அணுகுகின்றனர் என்பது கதையோடு பின்னிப் பிணைந்த இழையாக வருகிறது. இந்த இழை தான் படத்தின் தனித்துவத்திற்கும் சிறப்பிற்கும் காரணம். ஜில் ஜங் ஜக் படத்தில், ஜக்-காக நடித்திருந்த அவினாஷ் ரகுதேவன், ஒப்பனைக் கலைஞன் குபேரனாக நடித்துள்ளார். இறந்தவர்களைக் குளிப்பாட்டி, அரிதாரம் (சாயம்) பூசி, நாற்காலியில் இறந்தவரைஅலங்காரத்துடன் ஜம்மென்று உட்கார வைக்கும் கலைஞன். இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்யும் ஓர் ஆத்மார்த்தமான கர்வம் குபேரனிடம் எப்பொழுதும் இருக்கும். தான் செய்த தவறைப் பொதுவி...