Shadow

Tag: இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்

டீசல் விமர்சனம் | Diesel review

டீசல் விமர்சனம் | Diesel review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பார்க்கிங், லப்பர் பந்து முதலிய வெற்றிப்படங்களை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'டீசல்' ஆகும். இயக்குநர் சண்முகம் முத்துசாமி கச்சா எண்ணெய் பின்னணியில் பல அதிர்ச்சிகரமான விஷயங்களை விவாத்துள்ளர். சென்னை கடலோரப் பகுதியில் வசிக்கும் மீனவ கிராமங்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் சில விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கின்றன. நாயகன் ஹரிஷ் கல்யாணும், அவரது வளர்ப்பு தந்தை சாய்குமாரும் கச்சா எண்ணெய் கடத்தல் தொழிலில் கிங்-பின்னாக இருக்கிறார்கள். அவர்களது ஆதிக்கத்தைப் பிடிக்காத இன்னொரு கோஷ்டி அந்தத் தொழிலைக் கைப்பற்ற காவலதிகாரி வினய் உதவியுடன் இயங்குகிறது. அதே நேரம் கார்ப்பரேட் முதலாளி ஒரு தனியார் துறைமுகம் ஒன்றை அமைக்க காய் நகர்த்துகிறார். இந்தச் சூழலில் மீனவர்கள் நிலை என்ன ஆனது, அவர்கள் வாழ்வாதாரம் என்ன ஆனது, கார்ப்பரேட் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதா போன்ற கேள்விகள...
சிவகார்த்திகேயனின் கனா

சிவகார்த்திகேயனின் கனா

சினிமா, திரைச் செய்தி
மரகத நாணயம் படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், அனிருத்தின் குரலில் "கனா" படத்தில் ஒரு பாடலைப் பதிவு செய்துள்ளார். "அனிருத்தின் ஸ்டுடியோவில் ஒரு நள்ளிரவில் முறையான அமைப்பு இல்லாமல் அந்தப் பாடலைப் பதிவு செய்தோம். அவருடன் வேலை செய்வது அவ்வளவு எளிதானது. அந்தப் பாடல் பதிவின் முழு அமர்விலும் நாங்கள் மிகப் பாசிடிவாக உணர்ந்தோம். அதுவே பாடல்கள் மிகச்சிறப்பாக வரவும் உதவியது" என்கிறார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கனா' படத்திற்காக ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புறப் பாடலை உருவாக்கியிருக்கிறார் திபு. "நாங்கள் நாட்டுப்புற வகையில் புதிய பாணியில் ஏதாவது ஒன்றை உருவாக்க முயற்சி செய்தோம். வழக்கமாகப் பியானோ மற்றும் ஸ்ட்ரிங்க்ஸ் போன்ற கருவிகள் மெல்லிய ரொமாண்டிக் பாடல்களில் தான் அதிகம் உபயோகப்படுத்தப்படும். ஆனால் நாங்கள் அதைப் பாரம்...