Shadow

Tag: இனிகோ பிரபாகர்

கஜானா விமர்சனம் | Ghajaana review

கஜானா விமர்சனம் | Ghajaana review

சினிமா, திரை விமர்சனம்
நாகமலையில் புதையுண்டிருக்கும் பொக்கிஷத்தை யாளி எனும் மிருகம் காவல் காக்கிறது. அப்பொக்கிஷத்தை அடைய நினைக்கும் மனிதர்கள் அனைவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். காசியப முனிவர்க்கு ஆரி, சூரி என இரண்டு மனைவிகள் என ஒரு கிளைக்கதை பிரிகிறது. ஹிந்துப் புராணத்தின்படி, காசியப முனிவர், தக்ஷனின் எட்டு மகள்களை மணம் புரிந்தவர். அதில், கத்ரு எனும் மனைவியின் மூலமாக 1000 நாகர்களும், கத்ருவின் இளைய சகோதரி வினதா மூலமாக அருணன், கருடன் என இரண்டு மகன்களும் பிறந்தனர். இந்தப் புராணக் கதையை மையமாக எடுத்து, நாகர்களும் கருடர்களும் ஆரி சூரிக்குப் பிறந்ததாகப் படத்தில் காண்பிக்கின்றனர். கருடர்கள் அசுரர்கள் ஆகின்றனர், நாகர்களில் ஒருவரான வாசுகி சிவனின் கழுத்தில் அணியாக மாறுகின்றனர். பஞ்சபூதங்களை அடக்கவல்ல நாகரத்தினக் கற்களை நாகர்களுக்கு வரமாக அளிக்கின்றார் சிவன். கருடர்கள் அதைத் திருட நினைப்பதால், பூமியில் நாகமலையில் ந...
வீரையன் விமர்சனம்

வீரையன் விமர்சனம்

மற்றவை
வீரையன் என்பவர் தஞ்சாவூர் மாவட்டத்தின் காவல் தெய்வங்களில் ஒருவர். சிறு தெய்வங்கள், குறிப்பாகத் தமிழகத்தின் காவல் தெய்வங்கள் எல்லாம் மனிதர்களாக வாழ்ந்து தனது தியாகத்தாலோ, வீரத்தாலோ அந்தப் பகுதி மக்களின் அன்பையும் மரியாதையுக் சம்பாதித்திருப்பார்கள். அப்படி, தொழில்நுட்பத் தொடர்பு சாதனங்கள் புகுந்து மக்களின் அன்றாட வாழ்வைப் பாதித்திராத1989 ஆம் ஆண்டில், தஞ்சாவூரில் வாழ்ந்த மிகச் சாதாரண மனிதன் எப்படித் தன் தியாகத்தால் வீரையன் ஆகிறான் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் மூன்று கதைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து வருகின்றன. இந்தப் படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் நல்லவர்கள். சூழ்நிலைகள் பாதகமாய் அமைகிறது. வீரையனாக ‘ஆடுகளம்’ நரேன் நடித்துள்ளார். பொறுப்பான நல்ல தந்தை கதாபாத்திரத்திற்கு ஏற்றவர் என முடிசூட்டிக்கொண்டிருக்கும் ஜெயப்ரகாஷ்க்கு மிகச் சிறந்த போட்டியாகப் பரிணமித்து வருகிறார். படத்தின் தலை...
பிச்சுவாகத்தி விமர்சனம்

பிச்சுவாகத்தி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இனிகோ பிரபாகர், யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகிய மூவரும் நண்பர்கள். ஓர் ஆட்டினைத் திருடி போலீஸில் மாட்டிக் கொண்டு, கும்பகோணம் காவல் நிலையத்தில் ஒரு மாதம் கையெழுத்து போடவேண்டும் என நீதி மன்றத்தில் தீர்ப்பாகிறது. அந்தக் காவல் நிலையத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரி, மூவரிடமும் தலா பத்தாயிரம் கேட்கிறார். கையில் பணமில்லாச் சூழலில், அவர்களின் நிலை என்னாகிறது என்பது தான் படத்தின் கதை. படத்தில் ஒரு கிளைக்கதையும் உண்டு. இரண்டாம் நாயகனான செங்குட்டுவனுக்கு அனிஷாவைப் பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வந்துவிடுகிறது. நாயகிக்காகச் செங்குட்டுவனும் எம்.எல்.எம்.-இல் சேர்கிறான். அந்த எம்.எல்.எம். எபிசோட், எப்படி இளைஞர்களை ஏமாற்றுகிறது என அழகாகப் பதிந்துள்ளார் இயக்குநர் ஐயப்பன். இளைஞர்களுக்கு ட்ரெயினிங் தரும் கேமியோ ரோலில் நடித்துள்ளார் காளி வெங்கட். பாலசரவணனிடம் மாட்டி அவர் குட்டு உடையும் காட்சி ரசிக்க வைக்கிறது. ...