Shadow

Tag: இயக்குநர் சற்குணம்

EXAM விமர்சனம் | Amazon Prime Video

EXAM விமர்சனம் | Amazon Prime Video

OTT, Web Series, இது புதிது, திரை விமர்சனம்
அமேஸான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் எக்ஸாம் இணையத் தொடரைப் புஷ்கர் - காயத்ரி இணையின் வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. தைகாராவிற்குச் சென்னையில் இருந்து மாற்றலாகி வரும் துணை காவல் கண்காணிப்பாளரான (DSP) மரமல்லியைக் கடத்தி விடுகிறார் ஜான்சி. மரமல்லிக்குப் பதிலாக ஆள் மாறாட்டம் செய்து ஜான்சி பதவியேற்கிறார். பிராந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (RPSC) நடக்கும் ஊழல்களைக் கண்டுபிடிக்க மெனக்கெடுகிறார் ஜான்சி. யாரிந்த ஜான்சி, ஏன் அவர் இந்த ஊழலை வெளிக்கொண்டு வரப் போராடுகிறார், மரமல்லியை ஏன் கடத்தினார் என கதை நீள்கிறது. டி.எஸ்.பி.யாகத் தைரியமாக ஆள் மாறாட்டம் செய்ய உதவுவதோடு, ஜான்சியை உடலளவிலும் மனதளவிலும் தயார்ப்படுத்தும் ஜெயசந்திரனாக அப்பாஸ் நடித்துள்ளார். அவருக்கும் ஜான்சிக்கும் என்ன உறவு என்ற அத்தியாயம் ரசிக்க வைக்கிறது. மரமல்லியாக அதிதி பாலன் நடித்துள்ளார். அதிகாரச் செருக்கு, கோபம்...
களவாணி 2 விமர்சனம்

களவாணி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருத நிலத்தின் அழகை, 2010 இல் வந்த களவாணி போல் வேறெந்தப் படமும் அவ்வளவு அழகாக திரையில் காட்டியதில்லை. அந்தக் கதையிலும், கதைக்களத்திலும், கதாபாத்திரங்களிலும் இழையோடிய நேட்டிவிட்டியும், நகைச்சுவையும் படத்தை மறக்க முடியாததொரு அனுபவமாக மாற்றியிருந்தது. இப்படத்திற்கு, முதல் பாகத்துடன் நேரடி தொடர்பு இல்லை. முக்கிய கதாபாத்திரங்களை அப்படியே எடுத்தாண்டுள்ளனர். அரசனூரில், களவாணி எனப் பெயர் பெற்ற அறிக்கி எனும் அறிவழகனை, மகேஸ்வரி காதலிக்கிறார். காதலிக்காக உள்ளாட்சித் தேர்தலில் வென்று ஊர் பிரஸிடென்ட் ஆகவேண்டுமென முடிவெடுக்கிறார் அறிக்கி. களவாணி எனப் பெயர் பெற்ற அவர் தேர்தலில் எப்படி வென்றார் என்பதைக் கலகலப்பாகச் சொல்லியுள்ளார் சற்குணம். மடந்தையான மகேஸ்வரிக்கும், களவாணி அறிக்குக்கும் ஆன காதல், முதற்பாகத்தில் அற்புதமானதொரு உணர்வைத் தரும். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். நாயகன், நாயகிக்குள்ளான ஈ...
ஒட்டாரம் பண்ணும் களவாணி ஓவியா

ஒட்டாரம் பண்ணும் களவாணி ஓவியா

சினிமா, திரைத் துளி
“ஆனி போய், ஆடி போய், ஆவணி வந்துச்சுன்னா அவன் டாப்பா வருவான்” என்ற சரண்யா பொன்வண்ணனின் நம்பிக்கை நனவானதா இல்லையா எனச் சொல்ல வருகிறது களவாணி 2. களவாணியின் முதல் பாகம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. அதனூடே, பிக் பாஸில் விழுந்த புகழ் வெளிச்சத்திற்குப் பிறகு, ஓவியா மீண்டும் நடிக்கிறார் என்பது இப்படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. சமீபத்தில் ஓவியாவும் விமலும் நடித்த, 'ஒட்டாரம் பண்ணாத' என்ற பாடல் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது. ‘அலுங்குறேன் குலுங்குறேன்’ பாடலை எழுதிய மணி அமுதவன் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். இயக்குநர் சற்குணம் மற்றும் படக்குழுவினர் இந்தப் பாடலை ஒரு பழமையான வீட்டின் பின்னணியில் எடுக்கத் திட்டமிட்டனர். கலை இயக்குநர் குணசேகரன், நிஜத்தைப் பிரதிபலிப்பது போன்ற ஒரு பழமையான வீட்டை வடிவமைத்துள்ளார். இந்தப் ப...