Shadow

Tag: உதயநிதி ஸ்டாலின்

கண்ணை நம்பாதே – க்ரைம் த்ரில்லர்

கண்ணை நம்பாதே – க்ரைம் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
பிப்ரவரி 22ஆம் தேதி, சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகும் 'கண்ணே கலைமானே' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் புதிய படமான 'கண்ணை நம்பாதே' பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று சம்பிரதாய எளிய சடங்குகளுடன் துவங்கியது. சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமான இந்தப் படத்தை "இரவுக்கு ஆயிரம் கண்கள்" படத்தை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். V.N. ரஞ்சித் குமார் படத்தைத் தயாரிக்கிறார். இயக்குநர் மு.மாறன் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையில் தனது முதல் படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்திலேயே தனது திறமைகளைக் காட்டியிருந்தார். தற்போது அதே வகையில், இந்தப் படத்தில் தற்போது க்ரைம் விஷயங்களையும் சேர்த்திருக்கிறார். "என் முதல் படமான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' ஆரம்பித்த போது பார்வையாளர்கள் நல்ல கதைகளை ஆதரிப்பார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் கதையை எழுதினேன். இருப்பினும், என் எதிர்பார்ப்புகளை மீறி ரசிகர்க...
கண்ணே கலைமானே  – மனித உறவுகளைப் பற்றிய படம்

கண்ணே கலைமானே – மனித உறவுகளைப் பற்றிய படம்

சினிமா, திரைத் துளி
'கண்ணே கலைமானே' படம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகிறது. நடிகரும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, "இந்தப் படத்தின் எல்லா கிரெடிட்டும் இயக்குனர் சீனு ராமசாமியைத்தான் சாரும். நாம் கிராமப்புறத்தை, மக்களை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ நேட்டிவிட்டி திரைப்படங்களைப் பார்த்திருக்கிறோம். என்றாலும், சீனு ராமசாமி சார் தனது தனித்துவமான கதைக்களத்தால் வேறுபடுத்திக் காட்டியுள்ளார். அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் மோதல்கள் உண்மையான வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. எதிர்காலத்தில் சீனு சார் படங்களில் நடிக்கிறேனோ இல்லையோ, ஆனால் அவரது ஸ்கிரிப்டை முதல் ஆளாக கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் அதுவே ஒரு அழகான செயல்முறை. அவர் மெதுவாக அவரது உலகிற்குள் நம்மைக் கடத்தி விடுகிறார். அவரது கதாபாத்திரங்கள் உடன் நாம் பயணித்த அனுபவத்தை அளிக்கிறது" என்றார். மேலும் அவர் கூறும்போது, "ஆரம்பத்தில், சீனு ராமசாம...
ஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம்

ஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம்

சினிமா, திரைச் செய்தி
‘ஆடுகளம்’ படத்திற்குத் தேசிய விருதை வென்ற டான்ஸ் மாஸ்டர் தினேஷ், “ஒரு குப்பைக் கதை” எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வழக்கு எண் மனிஷா நடித்துள்ளார். பாகன் படத்தின் இயக்குநரான அஸ்லம், தன்னிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த காளி ரங்கசாமியை இயக்குநராக அறிமுகம் செய்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனத்தின் மூலம், மே 25 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். மே 16 அன்று, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “விஜய் சார் நடித்த குருவி படம் மூலமாகத் தயாரிப்பில் இறங்கி இதோ பத்து வருட...
உதயநிதியை நிமிர வைக்கும் படம்

உதயநிதியை நிமிர வைக்கும் படம்

சினிமா, திரைச் செய்தி
மூன் ஷாட் எண்டர்டெயின்மென்ட் சந்தோஷ் T.குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ''நிமிர்''. ப்ரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். “ப்ரியதர்ஷன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குநர். அவர் படத்தில் 2 நொடிகள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்திருப்பேன். ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தும் இவ்வளவு சாதாரண மனிதராக இருக்கிறார் உதயநிதி. இந்தப் படத்தில் நான் தான் ஜூனியர், எல்லோருமே என்னை விட பெரிய சாதனையாளர்கள்” என்றார் நாயகி பார்வதி. “தமிழில் ‘நிமிர்’ எனது 3வது படம். இந்த படத்தில் எப்போதும் உன்மேல் ஞாபகம், நெஞ்சில் மாமழை என இரண்டு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன். நான் ப்ரியதர்ஷன் படத்துக்கு இசையமைக்கிறேன் எனச் சொன்னதை யாரும்...
இப்படை வெல்லும் விமர்சனம்

இப்படை வெல்லும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது ஓர் ஓராள் படை (ஒன்-மேன் ஆர்மி). இப்படைக்கு வீரமோ, பலமோ குறிப்பிடும்படி இல்லை. ஆனால், சாதுரியமாகவும் துரிதமாகவும் செயல்படக் கூடிய அறிவே படையின் ஒரே ஆயுதம். அதைக் கொண்டு, 'சோட்டா ராஜ்' எனும் பயங்கரவாதியின் சதித் திட்டத்தை நாயகன் எப்படி முறியடிக்கிறான் என்பதே படத்தின் கதை. மூன்று வருடங்களுக்கு ஒரு படமென்ற ரீதியில் வந்துள்ள இயக்குநர் கெளரவ் நாராயணனின் மூன்றாவது படம். நேர்த்தியான திரைக்கதையால் படத்தைச் சுவாரசியப்படுத்துள்ளார். அதையும் மீறி, படத்தில் இவரது வெற்றி என்பது, பரோட்டா சூரியின்  ஒரே மாதிரியான, பார்ப்பவர்களை  இம்சிக்கும் நடிப்பை முடிந்த அளவு மாற்றி, சூரியையும் ரசிக்கும்படி திரையில் காட்டியிருப்பதைத்தான் சொல்ல வேண்டும். காமெடியனாக அவரது பாத்திரத்தை மட்டுபடுத்தி இருந்தாலும், நல்லதொரு துணை நடிகராக அவரை உபயோகப்படுத்தி இருப்பது சிறப்பு. இப்படத்தில் எந்த வேடத்தை யார் ஏற்றிருந்த...
இப்படம் ஜெயிக்கும்

இப்படம் ஜெயிக்கும்

சினிமா, திரைச் செய்தி
‘இப்படை வெல்லும்’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, “முதல் முறையாக நான் உதய் கூட நடிக்கிறேன். புதுசா நடிக்க வர்றப்ப ஒரு பயம் இருந்திருக்கும். ஆனா இப்ப நல்லா நடிக்கிறார். மானிட்டர் பார்த்து, சரியா நடிச்சிருக்கேனே எனப் பார்த்து சரி பண்ணிக்கிறார். எனக்கு மானிட்டர் பார்க்கும் பழக்கமில்லை. ஏன்னா எண்பதுகளில் நாங்க நடிக்கிறப்ப மானிட்டரோ கேரவனோ இல்லை. நான் பஸ் ஓட்டணும் எனச் சொன்னாங்க. நான் ஏன் பஸ் ஓட்டணும்? டூப் போட்டு எடுத்துக்கலாம்லன்னு கேட்டேன். இல்ல, அதுஒரு ஸ்ட்ராங் கேரக்டர் நீங்க தான் பண்ணணும்னு கெளரவ் சொன்னார். ‘உங்களுக்காக இந்தக் கேரக்டரை இப்படிச் செஞ்சிருக்கோம்!’ என ஒரு டைரக்டர் சொல்றப்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ரொம்ப பெருமையாகவும் இருக்கு. அவர் கேட்டதால், நானே பஸ் ஓட்டிட்டேன். கொஞ்சம் பக்கு பக்குன்னு இருந்தது. ஏன்னா என்னை நம்பி பஸ்சில் 20 பேர் உட்கார்ந்தாங்க...
பொதுவாக எம்மனசு தங்கம் விமர்சனம்

பொதுவாக எம்மனசு தங்கம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கூத்தப்பாடி திரெளபதி அம்மன் கோயிலில், ஆலம்பாடியைச் சேர்ந்த ஊத்துக்கோட்டானின் மகளுக்கு மொட்டை அடித்துக் கொண்டிருக்கும் பொழுது பாதியிலேயே கோயிலை மூடி வெளியில் அனுப்பி விடுகின்றனர். இதை அவமானமாகக் கருதும் ஊத்துக்கோட்டான், கூத்தப்பாடியை ஆளில்லாத ஊராக மாற்றி, திரெளபதி அம்மனின் தாய் ஊரான ஆலம்பாடிக்கே நிரந்தரமாகக் கொண்டு வர சபதம் எடுக்கிறார். கூத்தப்பாடியைச் சேர்ந்த ஊர்க் காதலரும், தங்க மனசுக்காரருமான கணேஷ் ஊத்துக்கோட்டானின் ஆசையில் எப்படி மண் அள்ளிப் போடுகின்றார் என்பதுதான் படத்தின் கதை. லூசுத்தனமானவர் அன்று; ஆனால், மக்கு நாயகியாக நிவேதா பெத்துராஜ். நாயகனால் காதலிக்கப்பட மட்டுமே திரையில் தோன்றும் வழக்கமான கதாநாயகி என்பதைத் தவிர்த்துச் சொல்லப் புதிதாக ஒன்றுமில்லை. அவரை ஓர் உயர்ந்த லட்சியத்திற்காகக் காதலிப்பவராக உதயநிதி ஸ்டாலின். இயக்குநர் இராஜேஷ் படத்தில் வரும் நாயகன் போல் தான் என்றாலும், ஊரின...
லைகா புரொடக்ஷன்ஸின் 9வது படம்

லைகா புரொடக்ஷன்ஸின் 9வது படம்

சினிமா, திரைத் துளி
படத்திற்குப் படம் வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்தெடுத்து இயக்கும் இயக்குநர் கௌரவ் நாராயணன் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் மஞ்சிமா மோகன் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார். தொடர் வெற்றி படங்களைத் தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் டப்பிங் சமீபத்தில் தொடங்கியது. இறுதி கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. படத்தில் இடம்பெறும் பாடலின் படப்பிடிப்பிற்காக ஓமன் நாட்டிற்குப் படக்குழுவினர் சென்றது குறிப்பிடத்தக்கது....
மனிதன் விமர்சனம்

மனிதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாமானியர்களுக்கு சட்டத்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தும் படம். குடிப்போதையில் காரோட்டி, நடைப்பாதையில் படுத்திருப்பவர்கள் மீது காரேற்றிக் கொல்லும் பணக்கார வீட்டுப் பையனின் வழக்கை மையமாகக் கொண்டு நகர்கிறது கதையின் களம். பொள்ளாச்சியில் கிடைக்கும் ஒன்றிரண்டு வழக்குகளிலும் சொதப்பும் வக்கீல் சக்தியாய் அறிமுகமாகிறார் உதயநிதி. தான் ஓட்டப்படுகிறோம் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், அவர்களோடு இணைந்து சிரிக்கும் அப்பாவி வேடத்திற்குப் பொருந்துகிறார். பணத்துக்கு விலை போய், பின் காதலியின் உதாசீனத்தால் 'ஏழைப் பங்காளன்' ஆகிறார். வெள்ளைத் தோலினரைக் காதலிப்பதே தம் பிறவி நோக்கமென்ற கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் வெளிவந்து கெத்து காட்டுகிறார் உதயநிதி. அவரது கேரியரில் இது மறக்க முடியாததொரு படமாக அமையும். மதியின் ஒளிப்பதிவில் ஹன்சிகாவை விட உதயநிதி கூடுதல் பொலிவோடு தெரிகிறார். அதே போல், நிருபர் ஜெனிஃபராக ...
கெத்து விமர்சனம்

கெத்து விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட துளசி ராமனை அவரது மகன் சேது எப்படி மீட்கிறான் என்பது தான் படத்தின் கதை. சேதுவாக உதயநிதி ஸ்டாலின். நகைச்சுவைப் படத்திலிருந்து அடுத்த கட்ட சோதனையை அழகாகச் செய்து பார்த்துள்ளார். சந்தானம் இன்றி வரும் உதயநிதியின் முதல் படம் என்ற விசேஷப் பெருமை இப்படத்திற்கு உண்டு. கதையின் நாயகனாக இருப்பதால், உதயநிதியின் முந்தைய கதாபாத்திரங்களை விட நூலகத்தில் பணி புரியும் சேது கொஞ்சமாக ஈர்க்கவே செய்கிறார். புத்தகத் திருடியாக வருகிறார் எமி ஜாக்சன். அதிலும் அவர் திருடும் புத்தகங்கள் எல்லாம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வண்ணமுள்ளன. உதாரணத்திற்கு, ஜெயமோகன் எழுதிய வெள்ளையானை நாவலைத் திருடி ஆச்சரியம் ஏற்படுத்துகிறார். இப்படியொரு நாயகியை தமிழ்த் திரையில் உலவ விட்ட இயக்குநர் திருக்குமரனை எண்ணி வியக்காமல் இருக்கவே முடியவில்லை. 'சாவி.. சாவி..' என சின்னச் சின்ன வசனங்களிலும் தன் முத்திரையைப் பதி...