Shadow

Tag: டெல்னா டேவிஸ்

குரங்கு பொம்மை விமர்சனம்

குரங்கு பொம்மை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் என்ற குறும்படம், இயக்குநர் நித்திலனுக்கு 'குரங்கு பொம்மை' படத்திற்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்ததுள்ளது. அதைச் சரியாக உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார் நித்திலன். ஒரு பேருந்து நிறுத்தத்தில், பெரியவர் ஒருவரின் குரங்கு பொம்மை அச்சிடப்பட்ட பை ஒன்று நாயகனுக்குக் கிடைக்கிறது. அந்தப் பையில் என்ன உள்ளது என்றும், அது நாயகனின் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுத்துகிறது என்பதும் தான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதி தன்னுள் பார்வையாளர்களை இழுத்துக் கொள்கிறது. நடிகர்கள் அனைவரையும் அறிமுக இயக்குநர் நித்திலன் மிக அழகாக உபயோகப்படுத்தியுள்ளார். இயக்குநர் பாரதிராஜாவுக்குள் இருக்கும் அசலான நடிகனை வெளிக்கொணர்ந்துள்ளார் நித்திலன். நடிப்பிலும் தான் இமயம் தானென நிரூபித்துள்ளார். பிரதான கதாபாத்திரங்களைத் தாண்டிப் படத்தில் வரும் அத்தனைப் பேரையும் ரசிக்க முடிவது தான் படத்தின் சிறப்...
ஆக்கம் விமர்சனம்

ஆக்கம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே! அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே!' என்ற கண்ணதாசனின் இந்த வரிகள் தான் படம் சொல்லும் கருத்து. ஆக்கம் என்றால் முன்னேற்றம், வளர்ச்சி எனப் பொருள் கொள்ளலாம். அது, ஒரே சூழலில் வளர்ந்த இருவருக்கு எப்படி அமைகிறது என்பதோடு படம் முடிகிறது. பலமுறை பார்த்துப் பழகிப் புளித்துப் போன கதை. வடச்சென்னையில் பிறந்து வளரும் ஒருவனுக்குச் சென்னையையே கலக்கும் ரெளடி/தாதா ஆகவேண்டும் என்று ஆசை.  படத்தின் ஒளிப்பதிவும், சில நுணக்கமான டீட்டெயிலிங்கும் அசர வைக்கின்றன. ஒரு மரண ஊர்வலத்தில் நாயகன் ஆடிக் கொண்டு வருவதில் இருந்து படம் தொடங்குகிறது. அங்கேயே G.A.சிவசுந்தரின் ஒளிப்பதிவு உங்களை ஈர்க்கத் தொடங்கிவிடும். அந்த ஊர்வலம், தொழுகை நேரத்தில் மசூதியைக் கடக்கும் பொழுது அமைதி காக்கின்றது.  சொக்குவாக சத்தீஷ் ராவண். அன்றாடம் நாம் க...