Shadow

Tag: தினேஷ் ராம்

இண்ட முள்ளு – ஊர்ப்பேச்சு கேட்க!

இண்ட முள்ளு – ஊர்ப்பேச்சு கேட்க!

கட்டுரை, புத்தகம்
விவசாயத் தொழிலை சிமென்ட் ஆலைகளிடம் காவு கொடுத்துவிட்ட வறண்ட நிலப்பரப்பினைச் சேர்ந்த ஒருவரின் நினைவு மீட்டல்களே இண்ட முள்ளு எனும் சிறுகதைத் தொகுப்பு. ஆனால், கதைகளோ விவசாயம் செழிப்பாக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தது. தனது பால்யத்தில் கேட்டுப் பழகிய அரியலூர் மாவட்டப் பேச்சு வழக்கிலேயே அனைத்து வரிகளையும் எழுதியுள்ளார் அரசன். முதல் வாசிப்பின் பொழுது, அப்பேச்சு மொழி அந்நியமாக இருப்பதால், நம்மருகிலேயே அரசன் அமர்ந்து தனது ஊரைப் பற்றியும் அதன் மனிதர்கள் பற்றியும் அரூபமாய்ப் பேசிக் கொண்டிருக்கும் பிரமை எழுகிறது. ஒரு வாசகனாக கதையின் மாந்தர்களோடு உலாவ சற்றே சிரமமாக உள்ளது. வழி தவறிய சாந்தியின் பின்னால் போய், ‘என்ன? ஏது?’ என்று விசாரிக்கலாம் எனப் பார்த்தால், அரசன் நம் கையைப் பிடித்து இழுத்து, “அவங்க தான் சாந்தி. அவங்க வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு” என விடாமல் கதை சொல்கிறார். தொகுப்பில் மொத்தம் ஒன்பது சிறுக...
அங்கீகரிக்கப்பட்ட பால்ய கனவு

அங்கீகரிக்கப்பட்ட பால்ய கனவு

கட்டுரை, புத்தகம்
'ஆமை காட்டிய அற்புத உலகம்' எனும் நல்லதொரு சிறுவர் நூலை எழுதியுள்ளார் எஸ்.பாலபாரதி. கதைக்குள் நுழையும் முன்பே ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அது, 7 வயதான சமர்சேந்தனின் நூல் பற்றிய மதிப்புரை ஆகும். சிறுவர் நூலொன்றை ஒரு சிறுவன் எப்படி உள்வாங்கிக் கொண்டான் என்று அறிந்து கொள்ள முடிந்தது. அதுவும் அச்சிறுவன் பொறாமைப்பட வைக்குமளவு மிகச் சிறந்த வாசகன். கடையில் வாங்கிய புத்தகத்தை, வீட்டுக்குப் போகும் வழியிலேயே படித்து முடிக்குமளவு அதி தீவிர புத்தகக் காதலன். அவனது மதிப்புரையில் இருந்த ஓர் அட்டகாசமான கேள்வி மிகவும் யோசிக்க வைத்தது. “சுறா மட்டும் ஃப்ரெண்ட்லியா இல்லாமல் ஏன் வயலன்ஸா இருக்குது?” ‘கதையில் ஏன் வில்லன் வேண்டும்?’ என்பதாக அந்தக் கேள்வியைப் புரிந்து கொண்டேன். வில்லன்களைச் சிருஷ்டிப்பது பெரியவர்கள் தானோ? சிறுவர்கள் உலகில் அனைவருமே நண்பர்கள் தான் போலும். ஆக, எழுத்தாளரினுடைய ஜம்பம், பிரயத்தனம் எ...
நவீன இதிகாசம் – சாரு நிவேதிதா

நவீன இதிகாசம் – சாரு நிவேதிதா

கட்டுரை, புத்தகம்
பா.வெங்கடேசனின் இரண்டாவது நாவலான ‘பாகீரதியின் மதியம்’ காலச்சுவடு பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ளது. இந்நூலின் வெளியீட்டு விழாவில் பேசிய சாரு நிவேதிதா, நாவலை உச்சி முகர்ந்துவிட்டார். “முதலில் காலச்சுவடைப் பாராட்டணும். பிழைகளே இல்லை. சமீபத்தில் நான் படித்த புத்தகங்கள் அனைத்திலும் நிறைய பிழைகள். என் புத்தகத்துக்கு நான் தான் ஃப்ரூஃப் ரீடிங் செய்வேன். ஆனாலும் பிரிண்ட்டிங் போயிட்டு வர்றப்ப பிழைகள் வந்துடும். அதை மீண்டும் சரி பார்க்கணும். என் புத்தகத்தில் 10 பிழைகள் வந்துடுச்சு. என்னிடம் 5 லட்சம் இருந்தா எல்லாப் புத்தகத்தை வாங்கி அழிச்சிடுவேன். 'பாகீரதியின் மதியம்' புத்தக உருவாக்கத்தில் பங்குபெற்ற காலச்சுவடு ஆட்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.   நான் நன்றாக எழுதியிருப்பவர்களைப் பார்த்து, இவர்கள் என் வாரிசு எனச் சொல்லி விடுவேன். அது ஓர் அன்பு. அன்பால் அப்படி நாலஞ்சு பேரைச் சொல்லியிருக்கேன். ஆனா பா.வ...
சந்திரஹாசம்  – ஓர் அலசல்

சந்திரஹாசம் – ஓர் அலசல்

கட்டுரை, புத்தகம்
அதென்ன சந்திரஹாசம்? சட்டென ஈர்க்காத இந்தத் தலைப்பை ஏன் விகடன் கிராஃபிக்ஸ் தேர்ந்தெடுத்தனர்? சந்திரஹாசம் என்பது பாண்டியர்களுடைய வீர வாளின் பெயர் (இது சந்திரஹாசம் இணையத்தள முன்னுரையில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்தது). புத்தகத்தின் ஆரம்பப் பக்கங்களே ஏமாற்றத்தைத் தருகின்றன. 'இது தான் குளியலறை. இங்கே குளிப்பார்கள்' என குளியலறை காட்டி யாராவது சொன்னால் உங்களுக்கு எப்படியிருக்கும்? அப்படித்தான் சித்திரங்களுக்கு விளக்கவுரை போட்டு ஓவியர், வாசகர் என இருவரையும் அவமானப்படுத்துக்கிறார்கள். அதை விட கொடுமை, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்க்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வீங்கிய எழுத்துரு. உதாரணத்திற்கு, குதிரையின் குளம்புகளை மறைத்து "சல்.. சல்.." எனப் பெரிய எழுத்துகளில் போடப்பட்டிருப்பதைக் காணுங்கள். க்ர்ர்.. இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, அப்படியே காலம் நழுவி பால்யத்துக்குள் நம்மைத் தள்ளி வி...
பீப் பாடலும் டூப் சீற்றமும்

பீப் பாடலும் டூப் சீற்றமும்

கட்டுரை, சமூகம்
நல்ல பொம்பள எவளுமிங்கு இல்லவே இல்ல.. கெட்ட ஆம்பள எவனுமிங்கில்ல.. குட் பொம்பள எவளுமிங்கில்ல.. ஃப்ராட் ஆம்பள எவனுமிங்கில்ல.. ஆளைப் பார்த்துத்தானே பொண்ணு தூண்டில் போடுவா.. அவளோட ஆச தீர, உன்ன விலகி ஓடு வா இந்தப் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள படம் “நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க”. பாடலின் தொடக்க வரி, ‘சரக்கடிச்சும் தானே போதை ஏறல’. பாடியவர் கானா பாலா. எழுதியவர் யுகபாரதி. இசையமைத்தவர் ரிஷால் சாய். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மூன்று பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது. அதில் சரக்கு பாட்டும் ஒன்று. இதனைத் தொடர்ந்து பேச வந்த இயக்குநர் களஞ்சியம், யுகபாரதியின் பாடல் வரிகளை மிகவும் சிலாகித்தார். அவர் சிலாகித்தது எந்தப் பாடலை எனத் தெரியவில்லை. ஆனால் எனக்கு மேலே உள்ள பாடல் வரிகள்தான் ஓடிக் கொண்டிருந்தது. அதோடு நில்லாமல், சிலரால் தமிழ்த் திரையுலகமே தமிழ்ச் சமூகம் முன் தலை குனிந்துள்ளது என நரம்பு...
மிதக்கும் சொர்க்கம்

மிதக்கும் சொர்க்கம்

கட்டுரை, புத்தகம்
ஓர் உல்லாசக்கப்பல் பயணத்தைப் பற்றிய பயணநூல் என்பதே ஆர்வத்தைக் கிளறுவதாக இருந்தது. அதையும் அந்தப் புத்தகத்தை எழுதியவர் ஒரு பெண் விஞ்ஞானி என்பது புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டியது. மன்மதன் அம்பு படத்தில் கமல், த்ரிஷா பயணிக்கும் க்ரூஸ் வகை கப்பலைச் சேர்ந்ததுதான் இந்நாவலின் உல்லாசக்கப்பலும்! புத்தகத்தை அறிமுகம் செய்த யுவகிருஷ்ணா, தமிழில் வந்துள்ள பயணநூல்கள் பற்றிய ஒரு பார்வையை அளித்தார். 1940 களிலேயே, ஏ.கே.செட்டியார், தனியொருவராக இருந்து அச்சு இயந்திரத்தில் எழுத்துகளைக் கோர்த்து, தனது பயண அனுபவங்களை புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார். தமிழின் பயண நூல்களுக்கு அவரே முன்னாடியெனச் சொன்னார். எழுத்தாளர் சல்மாதான் கிருத்திகா எழுதுவதற்கே காரணமாக இருந்துள்ளார். அவர் புத்தகத்தைப் பற்றி குறிப்பிடும்போது, "பெண்களால் மட்டுமே சிலவற்றை எழுத முடியுமென்பதற்கு கிருத்திகாவின் இந்தப் புத்தகமும் சான்று...
யாவருக்குமான காமிக்ஸ்!

யாவருக்குமான காமிக்ஸ்!

கட்டுரை, புத்தகம்
பொம்மைப் படங்கள் என கொஞ்சம் கேலியாக அழைக்கப்படும் சித்திரக் கதைகள் குழந்தைகளுக்கானது மட்டுமா? “ஆம்” என்பவரே இங்கு அதிகம். ஆனால் அப்படியில்லவே இல்லை, காமிக்ஸ் என்பது அனைத்து வயதினருக்குமானது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக “கிராபிக் நாவல்கள்” பற்றியதொரு கலந்துரையாடலை யாவரும்.காம், டிஸ்கவரி புக் பேலஸ், தமிழ் காமிக்ஸ் உலகம் ஆகிய மூவரும் இணைந்து நடத்தினர்.“ஃப்ரான்ஸில் 95% பேர் காமிக்ஸை விரும்பிப் படிக்கிறாங்க. லேண்ட் மார்க் போல, அங்க ஒரு 6 மாடிக் கட்டடம் முழுவதும் காமிக்ஸ்க்கு என தனியாக வச்சிருக்காங்க. உள்ள போனீங்கன்னா, காமிக்ஸ் படிச்சு தனியாகச் சிரித்துக் கொண்டிருக்கும் பெண்களைப் பார்க்கலாம். அந்த இடத்துக்குப் போனாலே மனம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அதே போல், ஜப்பானிலும் 95% பேர் மாங்கா (ஜப்பானிய மொழியில் காமிக்ஸ்)-க்கு அடிமைகள். நம்மூர்ல எப்படி வாஷிங் மெஷின்க்கு பக்கத்தில் ந...
கலை உத்தியஸ்தர்

கலை உத்தியஸ்தர்

கட்டுரை, புத்தகம்
“எம்பெருமானே! இதென்ன மகாபாரதத்திற்கு வந்த சோதனை?” பல நூறாண்டுகளுக்குப் பிறகு, இப்பொழுதுதான் லஷ்மியின் முகத்தில் இருந்து பார்வையை மீட்டு வலது பக்கமாகப் புரண்டு படுக்கிறார். உடனே வியாசன், பரந்தாமன் முகத்தினைப் பார்த்து தனது வியாகூலத்தை வெளியிடுகிறார். “ஏன் வியாஸரே!? மகாபாரதத்துக்கு என்ன நேர்ந்தது?” “யாரோ ஜெமோ-வாம். தினம் ஒரு அத்தியாயமென பத்தாண்டுகளுக்கு மகாபாரதம் எழுதுகிறாராமே!?” “யாரோ ஜெமோவா? என்ன சொல்கிறீர் வியாஸரே! முக்காலமும் உணர்ந்த நீரா இப்படி அலட்சியமாகப் பேசுவது?” சற்று தயங்கிய வியாசர், “ஏன் பிரபோ? ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டேனா?” என பவ்யமாகக் கேட்டார். “தவறு செய்தால் பரவாயில்லையே! மாபெரும் குற்றமல்லவா இழைத்துவிட்டீர்?” “ஆ.. அப்படி என்ன செய்துவிட்டேன்?” “கதை சொல்லியான நீர்.. கலைக்காக வாழும் பேராசான் ஜெமோவைப் பற்றி அறியாதது பெருங்குற்றத்தில்தானே வரும்?” ‘பேராசானா?’ என யோசித்த ...
வேலா வளர்த்த தீ

வேலா வளர்த்த தீ

கட்டுரை, புத்தகம்
எழுத்தாளர் ஒருவர் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டு ஒரு நாவலை எழுதினால், அதைப் படிப்பவன் கதி அதோகதிதான் போல! குற்றப் பரம்பரை நாவல் படிப்பவரின் அகம், புறம் இரண்டையும் பதற்றத்துக்கு உள்ளாக்கி விடுகிறது. கதைசொல்லியான வேல ராமமூர்த்தி, நாவல் தொடங்கிய சில பக்கங்களுக்குள்ளாகவே உங்களை கெதியாய்த் தயார்படுத்தி, தான் கொண்டு செல்ல விரும்பும் இடத்திற்குக் கொண்டு போய்விடுகிறார். வழியில் நிற்பதென்ற பேச்சுக்கே இடமில்லை. அவரை மறுக்கவோ, கேள்வி கேட்கவோ முடியாதளவுக்கு மிக நேர்த்தியாய் ஒரு வாழ்க்கைக்குள் உங்களைத் தூக்கிப் போட்டு விடுகிறார். இது சரியா தவறா என நிதானித்து யோசிக்க விடாமல் கடைசி பக்கம் வரை ஒரே மூச்சில் ஓட விடுகிறார். இருட்டுக்குள் ஓடும் அத்தகைய ஓட்டம்தான் அவர் வெளிச்சமிட்டுக் காட்டும் வாழ்க்கை முறை. அவ்வாழ்க்கையில் கரணம் தப்பினால் மரணம். அப்படி நேரும் சிறு பிசகால்தான் கொம்பூதியைச் சேர்ந்த சோலை என்பவன...
பொன்னியின் செல்வன் – நாடக அனுபவம்

பொன்னியின் செல்வன் – நாடக அனுபவம்

கட்டுரை
மு.கு.: மேஜிக் லேண்டர்ன் தியேட்டரும், எஸ்.எஸ். இண்டர்நேஷ்னலும் இணைந்து நிகழ்த்தும் அற்புதமான 3½ மணி நேர ‘பொன்னியின் செல்வன்’ நாடகம், இன்று 25வது முறையாக (2014 – 2015) மேடையேற்றப்படுகிறது சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, ஐந்து பாகங்கள் கொண்ட ஒரு பெரும் சரித்திரப் புதினத்தை மூன்றரை மணி நேரத்திற்குச் சுருக்கி, அதனை மிக நேர்த்தியான நாடகமாக உருமாற்றியுள்ளனர். அரங்கை நிர்மாணித்த R.K.ஜெயவேலுவும், கலை இயக்குநர் தோட்டா தரணியும், உடைகளை வடிவமைத்து குந்தவையாகவும் நடித்த பிரீத்தி ஆர்த்ரேயாவும், மனோரதத்தில் நாம் பார்த்த சோழப் பேரரசுக்கு பங்கம் விளைவிக்காமல் கண் முன் கொண்டு வந்துள்ளனர். பூங்குழலியின் காதலர்களான கொள்ளிவாய்ப் பிசாசுகளையும்கூட மேடையேற்றி இருந்தனர். அதே போல், T.பாலசரவணனின் ஒளியமைப்பு நாடகத்துக்கு பெரும்பலமாக அமைந்தது. உதாரணம், கோடிக்கரையில் இருந்து இலங்கைக்கு வந்தியதேவனும் பூங்குழலி...
அமானுஷ்யமும் மர்மமும்

அமானுஷ்யமும் மர்மமும்

நம்பினால் நம்புங்கள், புத்தகம்
அமானுஷ்யமும் மர்மமும் போல் ஈர்ப்பான விஷயங்கள் உலகத்தில் வேறெதுவுமில்லை. அதைப் பற்றிப் பேசவும் கேட்கவும் எப்பொழுதும் தயாராகவே இருப்போம். அதுவே செவி வழி கதையாக இல்லாமல் தனக்கேற்பட்ட அனுபவங்களை ஒருவர் தொகுத்தால்? அப்படித்தான், ஜேம்ஸ் வான் பிராக் தனது புத்தகமான, Ghosts Among Us என்பதில் ஆவிகள் உலகத்தினைப் பற்றிச் சொல்கிறார். புத்தகத்தில் திகிலான சம்பவங்களோ, புனைவுக்குரிய சுவாரசியங்களோ இல்லை. மரணத்தைப் பற்றியும், மரணத்துக்குப் பின்னான வாழ்க்கையைப் பற்றியும் அலசுகிறார் அமெரிக்காவின் புகழ் பெற்ற ஆவி மீடியம்களில் ஒருவரான ஜேம்ஸ். அவர் சந்தித்த எண்ணற்ற மனிதர்கள் பற்றியும், ஆவிகள் பற்றியும் சொல்லியுள்ளார். அனைத்துமே ஆச்சரியத்தையும், நம்மை ஆழ்ந்து யோசிக்கவும் வைக்கும் அனுபவங்கள் என்பதுதான் புத்தகத்தின் விசேஷம். மனிதர்களுக்கு நல்லது செய்யவே ஆவிகள் எப்பவும் அவர்களைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஆவிகள் ...
சந்துருவுக்கு என்னாச்சு?

சந்துருவுக்கு என்னாச்சு?

புத்தகம்
சுமார் 7 வயது மதிக்கத்தக்க தருண் எனும் சிறுவனின் மனதில் எழும் கேள்வியான "சந்துருவுக்கு என்னாச்சு?" என்பதுதான் புத்தகத்தின் தலைப்பு. குழந்தைகள் உலகம் கேள்விகளால் நிரம்பியது. அவர்களின் கேள்விகளை எதிர்கொள்வது போல் பெரியவர்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கும் விஷயம் வேறில்லை. அப்படித்தான், தருணின் கேள்வி அவனது அம்மா சரஸ்வதியை அதிர்ச்சியடைய வைக்கிறது. கொஞ்சம் அதட்டலுடன், அக்கேள்வியை எரிச்சலுடன் கடந்து விடுகிறார் சரஸ்வதி. இதற்கே தருண் தன் தந்தைக்குப் பயந்து, அவர் கொஞ்சம் தள்ளிச் செல்லும்வரை காத்திருந்தே தன் தாயிடம் கேட்கிறான். தந்தை முன் கேள்விகள் கேட்க தருண் ஏன் தயங்க வேண்டும்? "எங்கம்மா போறோம்?" "தொரைக்கு எங்கன்னு சொன்னாத்தான் வருவீங்களோ?" 'உனக்கு கேள்வி கேட்கும் அதிகாரமில்லை' என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் விதைப்பதுதான் அவர்கள் மீது செலுத்தப்படும் உச்சபட்ச உளவியல் வன்முறையாக இருக்கும். இத்தகை...
மலாலா என் ஜானி மன்!

மலாலா என் ஜானி மன்!

புத்தகம்
மலாலாக்கு நோபல் பரிசு அறிவித்த நாளன்று மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் மலாலா அமெரிக்கக் கைக்கூலி என பரவலான நம்பிக்கை ஒன்று நிலவி வருகிறது. ஊடகம் உயர்த்திப் பேசுமளவுக்கு மலாலா ஒன்றும் சாதிக்கவில்லை என்பது சிலரின் எண்ணம். உண்மை என்னவென்றால், மலாலா தாலிபானால் சுடப்படுவதற்கு முன்பே.. 2011 இல் பாகிஸ்தான் அரசின் தேசிய அமைதிப் பரிசைப் பெற்றவர். கூடவே, பாகிஸ்தான் அரசின் முதல் அமைதிப் பரிசைப் பெற்றவர் என்ற புகழும் மலாலாவுக்கே! அதன் பின் ஒன்பது மாதங்கள் கழித்தே மலாலா தாலிபானால் சுடப்படுகிறார். சுட்டதுக்குப் பொறுப்பும் எடுத்துக் கொண்டது தாலிபான். “மதச்சார்பின்மையை பரப்புவதில் முன்னோடியாக இருந்ததால்தான் மலாலா குறிவைக்கப்பட்டாள்” என எஹசுனுல்லா எஹஸான் என்ற TTP-இன் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வ அறிக்கை விடுத்துள்ளார். (காலச்சுவடு பதிப்பகம் - தமிழில்: பத்மஜா நாராயணன் -  303 பக்கங்கள் -...
சக்கர வியூகம் – ஐயப்பன் கிருஷ்ணன்

சக்கர வியூகம் – ஐயப்பன் கிருஷ்ணன்

புத்தகம்
நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமுடைய தோழியொருவர், தான் மகாபாரதமோ இராமாயணமோ படித்ததே இல்லை எனச் சொன்னார். ஆனால் அவர் மகாபாரதத்தின் கிளைக் கதைகள் மட்டுமன்றி, கூடுதலாகவே மகாபாரதத்தைப் பற்றி பதிப்பில் வந்திராத சில வட்டாரக் கதைகளையும் தெரிந்து வைத்திருக்கிறார். காரணம், ஜீஜா பாய்களைக் கொண்ட தேசமிது! வேலூரைச் சேர்ந்த ஐயப்பனின் தந்தை ஒரு பாரதக் கூத்துக் கலைஞர். தெருகூத்து பாரதக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர். கதைகளுக்கு காது கொடுப்பது போன்ற மகிழ்வான விஷயம் வேறெதுவும் இருக்க இயலாது. அதுவும் மகாபாரதக் கதைகளைக் கேட்பதோ, படிப்பதோ எப்பொழுதும் பரவசமான ஒன்று. அதனால் தான் வியாசர் பறந்த வானில் பறக்க தைரியமாக முயல்கிறார் ஜெயமோகன். தெரிந்த கதைகள் தானெனினும், சொல்பவரின் கற்பனைக்கேற்ப புதிய நிறங்களைப் பெற்ற வண்ணமிருப்பதே பாரதத்தின் சிறப்பு. அத்தகைய சிறப்பு, ஐயப்பனின் சிறுகதைத் தொகுப்பான சக்கர வியூகத்திற்கும் ...
பிசிராந்தையாரும் கூஜா விஸ்கியும்

பிசிராந்தையாரும் கூஜா விஸ்கியும்

கட்டுரை
யாரும் எதிர்பாராத சமயத்தில், திடீரென குழந்தை ‘தாத்தா’ என மழலையில் அழைத்து அவரைப் பரவசத்தில் ஆழ்த்தும். “இன்னொரு முறை அப்படிக் கூப்பிடுடா கொழந்த?” என தாத்தா ஆசையாகக் கேட்டால், அவரைக் கண்டுக்காமல் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடும் குழந்தை. அது குழந்தையின் வெட்கமா அல்லது போதுமென்ற குழந்தையின் ஞானமா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். அக்குழந்தையைப் போல்தான், எவரும் எதிர்பார்க்காத சமயத்தில் அனைவரையும் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ எனும் தன் புத்தகத்தால் பரவசத்துக்கு உள்ளாக்கினார் பாட்டையா. அவருக்கு ஏற்பட்ட இன்ஃபைனட் அனுபவங்களின் ஒரு சிறு துளிதான் அப்புத்தகம். ‘ஒரு துளி போதுமா பாட்டையா? கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கிற இந்தக் காலத்தில் ஏன் இந்தக் கஞ்சத்தனம்? தளும்பும் நினைவுக் கடலில் இருந்து ஒரு டம்ளராவது இறக்கிட வேணாமா?’ என பலர் கேட்டுப் பார்த்தனர். ஆனால் பாரதி மணியோ, “I am one book wond...