32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

தினேஷ் ராம்

98 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 4 / 7
செய்திகள் வரிசை (பக்கம் 4)
சதுராச்சலம்: ஓர் அனுபவம் ஆன்‌மிகம்

சதுராச்சலம்: ஓர் அனுபவம்

காணாத அருவினுக்கும்       உருவினுக்குங் காரணமாய் நீணாக மணிந்தார்க்கு       நிகழ்குறியாஞ் சிவலிங்கம் லிங்கங்கள் மீதான ஈர்ப்பு எந்த வயதில் தொடங்கியது என சரி வர ஞாபகம் இல்லை. வரிசையாக வெவ்வேறு உருவங்களில் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் சிவலிங்கங்களைப் பார்த்தாலே அலாதியான உணர்வு ஏற்படும். அதைப் பார்க்கவே பெரிய சிவன் கோயில்களுக்குச் செல்வதுண்டு. கருங்கல்லில் செய்யப்பட்ட பெரிய லிங்கங்கள் ஒரு பிரகாரம் நெடுக்கே வரிசையாக அக்கோயில்களில் வைக்கப்பட்டிருக்கும். சற்றே ஒளி குறைந்த […]

15/12/2014 Dinesh R
வியாசன் பறந்த வானில் கட்டுரை

வியாசன் பறந்த வானில்

தினம் ஓர் அத்தியாயமென, தொடர்ந்து பத்தாண்டுகள் மகாபாரதம் எழுதும் கற்பனைக்கெட்டாத மகத்தான இலக்கை வகுத்துக் கொண்டு இந்தாண்டின் முதல் நாளிலிருந்து எழுதி வருகிறார் ஜெயமோகன். “வெண்முரசு” என பெயரிடப்பட்டிருக்கும் அத்தொகுப்பு, சுமார் 35000 பக்கங்களுடன் 40 நாவல்களாக வருமெனத் தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தொடங்கிய 10 மாதங்களுக்குள், முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் என 4000 பக்கங்கள் கொண்ட 4 நாவல்களை எழுதிவிட்டார். கமல் பாணியில் சொல்வதெனில், மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித உழைப்பே அல்ல; அதையும் […]

11/11/2014 Dinesh R
ஞான ராஜசேகரன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு கட்டுரை

ஞான ராஜசேகரன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

மு.கு.: கேணி || ஞாநி || ஞான ராஜசேகரன் || ராமானுஜன் ஒரு படம் எடுத்து வெளியிடுவது என்பது பிரசவ வேதனை மாதிரி. தயாரிப்பாளர்கள் காலில் விழுந்து கிடக்கணும். ஏன்னா இங்க பணம் இன்வால்வ் ஆகுது. தாகூர், கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பில் சொல்லியிருப்பார். ‘இறைவா.. என்னைவிட பலவீனமான ஆட்களிடம் மண்டியிட வைத்திடாதே!’ என. அப்படித்தான் நினைச்சுப்பேன். அப்படி இருக்கு இங்க இயக்குநரின் நிலைமை. நான் ‘மோக முள்’ படமெடுக்கிறப்ப, திருச்சூர் டிஸ்ட்ரிக்ட் கலெக்டராக இருந்தேன். லைட்-மேன் என்னை […]

18/07/2014 Dinesh R
‘துலக்கம்’ – தெளிவிற்கான தொடக்கம் கட்டுரை

‘துலக்கம்’ – தெளிவிற்கான தொடக்கம்

ஆட்டிசம் பற்றிய புரிதலைப் பரவலாக்கும் முயற்சியில், ‘ஆட்டிசம் – சில புரிதல்கள்’ என்ற புத்தகத்தை 2013 இல் எழுதினார் பாலபாரதி. ஆனால் இத்தகைய துறை சார்ந்த புத்தகங்கள் எவரையும் சுலபமாகக் கவர்ந்து விடுவதில்லை. ‘ஆட்டிசம் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, நாங்க என்ன பண்ணப் போறோம்?’ என்ற மெத்தனம் காரணமாக இருக்கலாம். அவர்களுக்கு பாலபாரதி சொல்லும் இரண்டு விஷயங்கள் என்னவென்றால், உங்கள் சுற்றுவட்டத்தில் இருக்கும் குழந்தைகளை அடையாளம் காணவும், அக்குழந்தைகளுக்கு முன்கூட்டிய பயிற்சிகளைத் தொடங்குவதற்கும் நீங்கள் உதவக்கூடும். அதற்கு ஆட்டிசம் […]

02/07/2014 Dinesh R
என்னை ஏன் டீ வாங்கிட்டு வரச் சொல்லலை? கட்டுரை

என்னை ஏன் டீ வாங்கிட்டு வரச் சொல்லலை?

பொதுவாகவே எனக்கு யாரிடமாவது  பேசுவதென்பதே ரொம்ப கஷ்டமான விஷயம்.  ‘ஆமா என்னத்த பேசி!’ என பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருந்து, இழந்தவைகளின் பட்டியல் ரொம்பப் பெரிது. சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பையே  கூட இழந்திருக்கிறேன். இப்படிப் பட்ட என்னை “சைபர் க்ரைமில்” போய் என் மீதான அவதூறுக்கு எதிராக கம்ப்ளெயின்ட் பண்ணச் சொல்லி ஆளாளுக்கு அட்வைஸ் என்ற பெயரில் விரட்டினார்கள். போனா நிறைய கேள்வி கேட்பாங்களே.. போகணுமா என ஒரு தயக்கம் இருந்தது. […]

26/02/2014 Dinesh R
“மரணித்தது நானல்ல!!” – பாலு மகேந்திரா கட்டுரை

“மரணித்தது நானல்ல!!” – பாலு மகேந்திரா

“எனது படைப்புகள் மூலம் மரணத்தின் பின்பும் நான் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பேன். மரணிக்கப் போவது என் உடல்தான். நானல்ல!” என நிறைவாகக்கூற ஒரு மகத்தான கலைஞனால் மட்டும்தான் முடியும். தமிழகத்தில், சினிமாவை கலையாகப் பார்த்த சொற்பமானவர்களில் முதன்மையானவர் பாலு மகேந்திரா. அவருள் சினிமா விதையை முதன்முதலில் விதைத்தது ஓர் அமெரிக்கர். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை வகுப்பாசிரியராக இருந்த ஃபாதர் லோரியோ, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ப்ரொஜெக்டரில் சினிமா காண்பிப்பாராம். கண்டியில் இங்கிலாந்து இயக்குநர் மழையை […]

13/02/2014 Dinesh R
கர்ணனின் கவசம் கட்டுரை

கர்ணனின் கவசம்

இந்திரன் கர்ணனிடம் தானமாக வாங்கிய அந்தக் கவசம், அதற்குப் பிறகு என்னவாயிற்று என்பதுதான் நாவலின் கரு. மிக அட்டகாசமாக ஜெர்மனியிலிருந்து நாவல் தொடங்குகிறது. கவசம் ஏன் ஜெர்மனியர்களுக்கு தேவைப்படுகிறது என்ற காரணத்துடன் சூடு பிடிக்கிறது நாவல். ஆனால் இந்த ஆரம்பச் சூடு அதன்பின் அடியோடு போய், பக்கத்திற்குப் பக்கம் பிரமிப்பெனப் பயணிக்கிறது நாவல். நாவலின் போக்கு பிடிபட கொஞ்சமாவது ‘பொன்னியின் செல்வன்’ கதைமாந்தர்களும், மகாபாரத கதாபாத்திரங்களும் தெரிந்திருந்தால் நல்லது. அப்படியில்லைனாலும் பாதகமில்லை. ‘நான் இன்னார். இன்னாரின்மீது இன்னக் […]

08/02/2014 Dinesh R
டேஞ்சர் டயபாலிக்கும், மகோன்னத காதலும் கட்டுரை

டேஞ்சர் டயபாலிக்கும், மகோன்னத காதலும்

“நான் டேஞ்சர் டயபாலிக்டா.. இரும்புத்தூணுடா” என ‘சரவணா (2006)’ படத்தில் விவேக் சொல்வார். டயபாலிக் என்பது சாத்தானின் குணாதிசயத்தைக் குறிக்கும் சொல். தன்னை டெரராகக் காட்டிக் கொள்ள விவேக் உபயோகிக்கும் வார்த்தை என நினைத்திருந்தேன். ஆனால் அவர் ஒரு சூப்பர் ஹீரோ. 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே, லயன் காமிக்ஸ் இத்தாலிய நாயகனான டேஞ்சர் டயபாலிக்கை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளனர். பின் 26 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் டேஞ்சர் டயபாலிக்கை 2013இல் களமிறக்கியுள்ளனர். அதுவும் ஜுன், டிசம்பர் என […]

27/01/2014 Dinesh R
18 தீக்குச்சிகளும் யட்சியும் கட்டுரை

18 தீக்குச்சிகளும் யட்சியும்

ஒரு சனிக்கிழமை (நவ. 23) அன்று இரண்டு குறும்படங்களை ஏவி.எம். ப்ரிவியூ தியேட்டரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இரண்டையும் இயக்கியது மணிமாறன் எனும் திரைப்படக் கல்லூரி மாணவர். அரங்கம் நிறைந்திருந்தது. நின்று கொண்டும் சிலர் பார்த்தார்கள். இதற்கே படத்தை இரண்டு முறை திரையிட்டனர்.  முதற்படம் 18 STICKS. முதலில் ஆங்கிலக் குறும்படமோ என நினைத்தேன். நல்லவேளையாக தமிழ்ப்படம். அதுவும் ஈழம் சம்பந்தமான படம். 2009 இல் தன் குடும்பத்தை இழந்த யோகன், முள்ளிவாய்க்காலில் குண்டுகள் வீசப்படும் இடத்தில் […]

08/12/2013 Dinesh R
பாயிம் சனங்களுக்கு அஞ்சுனனே! கட்டுரை

பாயிம் சனங்களுக்கு அஞ்சுனனே!

சாதிய உள்முரண்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தான் எழுத்தாளர் இமையத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’ மீது எழுந்த குற்றச்சாட்டு.  அதற்கு, “சமூகத்தின் மொத்த ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்கிற பறையர் சமூகம், தனக்குக் கீழுள்ள வண்ணார், சக்கிலியர் இன சமூகங்களை ஒடுக்குகிற ஓர் ஆதிக்க சமூகமாகத்தான் இருக்கிறது என்பது உண்மை’ என பதிலுரைத்தார் இமையம். நாவல் வெளிவந்த ஆண்டு 1994 ஆகும்.   நாவலின் பிரதான கதாபாத்திரம் ஆரோக்கியம். அவர் வண்ணாத்தி. பறையர் சமூகத்தை நம்பிப் பிழைப்பவர். அவருக்கான கூலிகள் […]

29/10/2013 admin
ஐவரிட்ட ஞானம் கட்டுரை

ஐவரிட்ட ஞானம்

மு.கு.: கடவுள் வந்திருந்தார் || சுஜாதா || பாரதி மணி || நடிப்பனுபவம் (!?) விதியாகப்பட்டது வலியது. சிவனேயென அனைத்துக்கும் பார்வையாளனாக இருந்த என்னை கவிஞர் பத்மஜா நாராயணன் பாரதி மணியின் நாடகத்தில் கோர்த்து விட்டு விட்டார். ‘ஒன்னுமில்ல தினேஷ். சின்னதா மாப்பிள்ளை கேரக்டர். அஞ்சாறு வசனம் தான். சிரிச்சுட்டே இருக்கணும். உங்களால் பண்ண முடியாதா? சும்மா நடிக்காதீங்க!!’ என்றார் நான் நடிக்க மறுத்த பொழுது. அவருக்கென்ன அச்சு அசல் மாமியாய் கலக்கி விட்டார். முதல் நாள் […]

29/04/2013 admin
2500$ பெறுமானமுள்ள படம் கட்டுரை

2500$ பெறுமானமுள்ள படம்

சேட்டை படத்திற்கு, “ஆபாசம்.. நாராசம்.. கவிச்சி” என ஏகப்பட்ட அர்ச்சனைகள் இணையத்தில் காணக் கிடைக்கிறது. அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட ‘ஒன்பதுல குரு‘ என சொல்கின்றனர். ஆனால் படம் அந்த அளவுக்கு மோசமில்லை என்று தான் நினைக்கிறேன். காரணம் சேட்டை ஹிந்திப் படமான ‘டெல்லி-பெல்லி’யின் ரீ-மேக். அந்தப் படத்தின் அழகான வசனங்களை எல்லாம் வடிகட்டி மொன்னையான படமாக சேட்டையை எடுத்துள்ளனர். “This girl has given me blow job.. I am 21st century man, I […]

19/04/2013 Dinesh R
என் காதலியின் தந்தை கட்டுரை

என் காதலியின் தந்தை

மு.கு.: பல நேரங்களில் பல மனிதர்கள் || பாரதி மணி பாபா படத்தில் தான் முதன்முதலில் அவரைப் பார்த்தேன். நல்லவராக இன்றி வேறு எவராகவும் இருக்க வாய்ப்பே இல்லாத மனிதராகத்தான் அவர் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது அவர் உருவம். என்னைப் போல் தான் எமி ஜாக்சனுக்கும் அவரைப் பற்றி அபிப்ராயம். பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரைப் பற்றி சுகாவின் ‘மாங்குலை இல்லாத கல்யாணம்‘ என்ற கட்டுரையில் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையில் அவர் […]

14/04/2013 admin
“விஸ்வரூபம் 200” – கமல் ஸ்பெஷல் கட்டுரை

“விஸ்வரூபம் 200” – கமல் ஸ்பெஷல்

விசாம் அகமது காஷ்மீரி விஸ்வரூபம் ரூ.200 கோடி வசூல் செய்தது!! க்றிஸ்டியன் ஃப்ளெட்சர் யூ ரிமெம்பர் ஆளவந்தான்? ஷிங்கென் நராஷி //யூ ரிமெம்பர் ஆளவந்தான்?// யூ ரிமெம்பர் வாட் Quentin Tarantino said? ராகவன் DCP விஸ்வரூபம் கண்டிப்பா ஆஸ்கார் வாங்குது… இது ராகவன்’ஸ் இன்ஸ்டின்க்ட் பல்ராம் நாயுடு இந்தப் படத்திலு வில்லன் எந்த க்ரூப்பூ? அல்கொய்தாவா? லஷ்கிரி தைபவா? இல்ல அல் உம்மாவா? தெனாலி எனக்கு படம் எண்டாலும் பயம்.. வில்லன் எண்டாலும் பயம்.. தீவிரவாதம் […]

02/03/2013 Dinesh R
தோனி படத்து பிரகாஷ்ராஜ்கள் கட்டுரை

தோனி படத்து பிரகாஷ்ராஜ்கள்

கசாப்பிற்கு மரண தண்டனை கொடுப்பதால், நாட்டில் rarest of the rare குற்றங்கள் குறையும் என எச்சில் தெறிக்க தீர்க்கதரிசணம் சொன்னவர்களின் எச்சில் மண்ணில் விழும் முன் டெல்லியிலொரு கொடுமையான சம்பவம் நடந்து விட்டது. உடனே பெரும்பான்மையோரின் எதிர்வினை, “அவனைக் கொல்லணும்.. இல்லை கொன்றால் இறந்து விடுவான்..  நந்தா படத்தில் வருவது போல் அவன் பிறப்புறுப்பை அறுத்து விடணும்.. இம்மி இம்மியாகத் துடிக்க வைத்துக் கொல்லணும்” என்பதாக உள்ளது. ராம்சிங்கைக் கொன்றால்தான், இனி நாட்டில் இது போல் […]

21/12/2012 Dinesh R