Tag: நிகில்

இரவின் கனவாக – துருவங்கள் 16!
‘துருவங்கள் பதினாறு’ எனும் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன். 21 வயது இளைஞரான இவர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். சினிமா ஆர்வத்தில் படிப்பை பாதியில் நிறுத்தியவர். குறும்படங்கள் எடுத்து சினிமா பக்கம் வந்திருப்பவர். ஏற்கெனவே 'விழியின் சுவடுகள்', 'நிறங்கள் மூன்று', 'ஊமைக்குரல்', 'பிரதி' என 4 குறும்படங்கள் இயக்கிப் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றபின் சினிமா மீது நம்பிக்கை வைத்துத் திரைக்களத்துக்கு வந்து விட்டார்.
ஆபாச காமெடி இல்லை; ஆவேச பஞ்ச் வசனங்கள் இல்லை ; பாடல்கள் இல்லை; கதாநாயகி இல்லை; காதல் இல்லை; இப்படி வழக்கமான எதுவும் இல்லை. பரபரப்பான கதை உண்டு விறுவிறுப்பான காட்சிகள் மட்டுமே உண்டு.
'துருவங்கள் பதினாறு' படத்தில் பல புதுமுகங்கள் பங்கு வகிக்கிறார்கள். பிரதான வேடமேற்றிருப்பவர் நடிகர் ரகுமான். கிளை வேர்களாக பலரும் இருக்க ஆணிவேராக ரகுமான் பாத்திரம் இருக்கிறது.
இது ஒரு க்ரைம் ...

ஒன்பதிலிருந்து பத்துவரை விமர்சனம்
கால் டேக்சி ட்ரைவரான பாண்டிக்கு, எஃப்.எம்.இல் பணி புரியும் ஏஞ்சலாவினுடைய குரல் ராஜ போதையைத் தருகிறது. தினம் இரவு ஒன்பதிலிருந்து பத்து வரை ஏஞ்சலாவின் நிகழ்ச்சி ஒலிபரப்பப்படும். அந்தப் போதை பாண்டியிடம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை.
பையா போலொரு ரூட் மூவியாகப் போகுமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது முதல் பாதி. அப்படியில்லை என இடைவேளையிலேயே அழுத்தமாகச் சொல்லி விடுகின்றனர். 96 நிமிடங்களே ஓடக் கூடிய சின்ன படம்தான். ஆனாலும், திரைக்கதையோ வசனமோ கதையின் விறுவிறுப்பை, சஸ்பென்ஸைத் தக்க வைக்க உதவாதது மிகப் பெரும் குறை. ஆனால், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத க்ளைமேக்ஸை மட்டும் யூகிக்க முடியாதபடி வைத்துள்ளார் இயக்குநர் விஜய் ஷண்முகவேல் அய்யனார்.
படம் தொடக்கத்தில் லிவிங்ஸ்டனைப் பார்த்ததுமே ஓர் உற்சாகம் எழுகிறது. அவரையும் அப்படியே ஓரங்கட்டி விடுகின்றனர். படத்தில், ஏசி Vs டி...

அப்பா விமர்சனம்
அரசுப் பள்ளிகளின் மீது வீசிய சாட்டையை, அதனினும் வலுவாகத் தனியார் பள்ளிகளின் மீது வீசியுள்ளார் தயாளன்.
ஒரு லட்சிய தந்தைக்கு எடுத்துக்காட்டாக தயாளன் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார் படத்தைத் தயாரித்து இயக்கியுள்ள சமுத்திரக்கனி. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்தும், 'நாம் இணைந்து நம் மகனை உயர்த்துவோம்' எனக் குழந்தையின் தொப்புள் கொடி மேல் எல்லாம் சபதம் எடுத்தும் கிலியைக் கிளப்புகிறார். பார்வையாளர்களுக்குப் பாடமெடுத்துப் புத்தி புகட்டுவது, நன்னெறியை எடுத்தியம்புவது என்ற அவரது அக்கறை உடல் மொழியிலும், வசன உச்சரிப்பிலும் துருத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால், சில பாடங்களை இப்படி நேரடியாகச் சொன்னால்தான், சிலரையேணும் அது போய்ச் சேரும். பெற்றோர்களின் மனதில் எங்குப் பதியாமல் போய் விடுமோ என, சசிகுமாரை வைத்தும் ஒருமுறை ரிவிஷன் செய்து விடுகிறார் சமுத்திரக்கனி.
‘சின...

‘ஒழுக்கம் முக்கியம் மகனே!’ – சமுத்திரக்கனி
தன் இஷ்டம் போல் வாழ நினைக்கும் 12 வயது சிறுவனுக்கும், பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டுமென நினைக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டமும் இதனால் ஏற்படும் விளைவுகளும்தான் "கொளஞ்சி" படத்தின் கதை.
சிம்புதேவன், நவீன் ஆகியோர்களிடம் பணியாற்றிய தனராம் சரவணன் "கொளஞ்சி" படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். ஒய்ட் ஷடோஸ் புரோடக்ஷன்ஸ் சார்பாக நவீன் "கொளஞ்சி" படத்தைத் தயாரிக்கின்றார். இவர் மூடர்கூடம் என்ற படத்தைத் தயாரித்து இயக்கிப் பலரின் பாராட்டைப் பெற்றவர்.
சமுத்திரக்கனி, சங்கவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன் ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நசாத், ரஜின்.எம், பிச்சைகாரன் மூர்த்தி, ருஜீல் கிருஷ்ணா, நாடோடிகள் கோபால், ரேகா சுரேஷ், ஆதிரா ஆகியோர் நடிக்கின்றனர்.
ராசிப்புரம், கோக்கராயன் பேட்டை போன்ற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
தற்போது "கொளஞ்சி" படத்தின் இற...

‘மாயா’ அஸ்வின் சரவணின் புதிய படம்
மோமன்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக G.A.ஹரி கிருஷ்ணன் மற்றும் "தி ஹிந்து" ரங்கராஜன் அவர்களின் பேரன் ரோஹித் ரமேஷின் WTF எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த "மோ" படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் மோமன்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக G.A.ஹரி கிருஷ்ணன் புதிய படமொன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளார்.
நயன்தாரா நடிப்பில் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்று வசுலில் சாதனை படைத்த மாயா படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவுள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்புத் தரப்புக் கூறியுள்ளது. தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் என்பதால், அவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்பவே ரசிகர்களிடம் கூடியுள்ளது.
தயாரிப்ப...

வெற்றிப் பூரிப்பில் சக்தி
சின்னத்தம்பி, ரிக்ஷா மாமா, செந்தமிழ் பாட்டு உள்ளிட்ட படங்களில் குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பின்னர் தனது தந்தை பி.வாசு இயக்கத்தில் ‘தொட்டால் பூ மலரும்’ படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் சக்தி வாசு.
தனது ஜனரஞ்சகமான நடிப்பாலும், நடனம் சண்டைபயிற்சி என அனைத்து துறைகளிலும் தனித்துவமாக விளங்கியதாலும் சக்தி வாசு தனக்கென்று மக்களின் மனதில் இடத்தை தக்கவைத்து கொண்டார்.
சமீபத்தில் பி.வாசு இயக்கத்தில் சிவராஜ்குமாருடன் இவர் இணைந்து நடித்த சிவலிங்கா திரைப்படம் பல திரையரங்குகளில் 100 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடுகின்றது. தமிழை அடுத்து கன்னடத்திலும் தனது தனித் திறமையால் ஒரு கதாநாயகனாக உருவானதை நினைத்து சந்தோஷப் பூரிப்பில் இருக்கிறார் சக்தி வாசு. சிவலிங்காவின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தை விரைவில் தமிழில் அனைத்து ரசிகர்களும்...

சர்வதேச நாய்க் கடத்தல்
ரீச் மீடியா சொல்யூஷன் என்னும் புதிய பட நிறுவனம், சஹானா ஸ்டுடியோஸுடன் இணைந்து, “ஜூலியும் நாலு பேரும்” என்ற படத்தைத் தயாரிக்கிறது. இளம் இயக்குநரான சதீஷ்.R.V-க்கு இது முதற்படம். இப்படத்தைக்குறித்து இயக்குநர் சதீஷ்.R.V கூறுகையில், “இப்படம் சர்வதேச அளவில் நடக்கும் நாய்க் கடத்தலைப் பற்றிய படம். அது மட்டுமின்றி முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட காமெடிப் படம்”என்கிறார்.
தமிழ் சினிமா ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது இப்படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்”. இப்படத்தின் மூலம், பேய் சீஸனைப் போல் நாய் சீஸனைத் துவங்கி வைத்துவிடுவார் போல் தெரிகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் சதீஷ் கூறுகையில், “விஜய் டி.வி. புகழ் அமுதவானன் மற்றும் ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜம்முவைச் சேர்ந்த ரீனா என்ற பெண் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்தின் ஹீரோ அமெரிக்காவிலிருந்து கொ...

நாளை முதல் குடிக்க மாட்டேன் விமர்சனம்
எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வார் இங்கிலீஷ் டீச்சர் மலர், ஆனா குடிக்காரர்களை மட்டும் எந்த ஜென்மத்துக்கும் மன்னிக்கவே மாட்டார். தனக்குக் குடிப்பழக்கம் உள்ளதை மறைத்து, மலரைக் காதலித்து மணம் புரிந்து கொள்கிறார் தமிழாசிரியர் அ.சிவக்குமார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
'உள்ளொற்றி உள்ளுர்..' எனத் தொடங்கும் குறளில் இருந்து படம் தொடங்குகிறது. நாயகனின் குணத்தை விளக்க இக்குறளை உபயோகப்படுத்தியுள்ளனர். சின்னஞ்சிறு பட்ஜெட் படம். இயக்குநர் அண்ணன் செந்தில்தல்ராஜாவுக்காக அவரது M.G.ராஜாவே தயாரித்துள்ளார். முடிந்தளவு இழுத்துப் பிடித்துப் படத்தை எடுத்துள்ளது ஆரம்பம் முதலே பட்டவர்த்தணமாய்த் தெரிகிறது. எளிமையில் சுவாரசியத்துக்கு முனைந்துள்ளனர்.
கட்டுக்கோப்பான திரைக்கதை இல்லையெனினும், நாயகனாக நடித்திருக்கும் ராஜ் ஒற்றை ஆளாகப் படத்தைச் சுமக்கிறார். தமிழாசிரியராக நடித்திருக்கும் அவரது முழியும்,...

காமெடி கவ்வும் – நலன் குமாரசாமி
சூது கவ்வும் படத்தின் கதைக்கு எதிர் திசையில் இப்படத்தின் கதையை அமைத்து அப்படத்தின் சாயல் இப்படத்தில் இல்லாதவாறு குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
'காதலும் கடந்து போகும்' ஒரு காதல் கலந்த காமெடி படம். முழுக்க காதல் கலந்த நகைச்சுவைப் படம் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. ஒன்று நகைச்சுவை அதிகமாக இருக்கும் இல்லையென்றால் காதல் கலந்த காட்சிகள் அதிகமாக இருக்கும். இப்படத்தில் இறுதிக் காட்சிகளுக்கு முன்பு வரை காட்சிகளோடு இழையோடும் நகைச்சுவை இருந்து கொண்டே இருக்கும்.
'சத்யா' படத்தில் நடித்த சுந்தர் இப்படத்தில் கவுன்சிலராக நடித்துள்ளார். அவரிடம் பணியாற்றும் அடியாளாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். 'ப்ரேமம்' படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் அப்படத்தினில் ஒரு நாயகியாக நடித்திருந்த மடோனா செபஸ்டியன் இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். வ...







