Shadow

Tag: நிகில்

காகித கப்பல் விமர்சனம்

காகித கப்பல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘காகித கப்பல்’ எனும் தலைப்பு வாழ்க்கையின் நிலையாமையைக் குறிக்கிறது. குப்பை பொறுக்குபவராக வாழ்க்கையைத் தொடங்கி கோடீஸ்வரராகி விடும் சிவபாலன் என்கின்ற அப்புக்குட்டியின் வாழ்க்கையில் நேரும் எதிர்பாராத சம்பவங்கள் தான் படத்தின் கதை. தலைப்பைக் கொண்டே முழுக் கதையையும் யூகித்து விடலாம். அழகர்சாமியின் குதிரை படத்திற்குப் பிறகு, ஹீரோவாக நடித்துள்ளார் அப்புக்குட்டி. அப்புக்குட்டி படிக்காதவர் என்றாலும் நல்ல உழைப்பாளி. ‘பாப்பாம்மாள் வேஸ்ட் பேப்பர் மார்ட்’ மூலம் நன்றாகச் சம்பாதிக்கிறார். அந்தக் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். சுங்க இலாகா விசாரணையின் பொழுது அவமானப்படும் காட்சியில் அவரது அனுபவம் தெரிகிறது. தான் விசாரணைக்குப் போயிட்டு வந்தது குறித்து தன்னிடம் வேலை செய்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் எனக் கேட்கும் பொழுது மிக எதார்த்தமாக கதாபாத்திரத்தின் மனநிலையைப் பிரதிபலித்துள்ளார். அவரது கணக...
பல மொழியில் சீற உள்ள புலிமுருகன்

பல மொழியில் சீற உள்ள புலிமுருகன்

சினிமா, திரைத் துளி
மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜெகபதிபாபு, நமீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வைஷாக் இயக்கத்தில் முலக்குப்படம் பிலிம்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் புலி முருகன். வெளியிட்ட அனைத்துத் திரையரங்குகளிலும் வசூல் சாதனை படைத்த புலிமுருகன் திரைப்படம் மோகன்லாலின் திரைத்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. இப்படத்தின் மற்ற மொழி உரிமையைப் பெற பலர் போட்டியிட இறுதியில் புலிமுருகன் படத்தின் இந்திய உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ்.பி.பிள்ளை பெற்றுள்ளார். புலிமுருகனின் இந்திய மொழிகள் பதிப்பை ரமேஷ்.பி.பிள்ளையின் அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்துடன் தோமிச்சனின் முலகுப்பாடம் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. பாகுபலி படத்திற்குப் பிறகு பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்க உச்ச நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்துவருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல இந்த...
சதுரங்கவேட்டை – 2 இல் அரவிந்த்சாமி

சதுரங்கவேட்டை – 2 இல் அரவிந்த்சாமி

சினிமா, திரைத் துளி
2014ஆம் ஆண்டு, H.வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் "சதுரங்கவேட்டை". அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அரவிந்த்சாமியும், த்ரிஷாவும் நடிக்க, சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய H.வினோத் சதுரங்கவேட்டை 2 படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுத, சலீம் படத்தை இயக்கிய N.V.நிர்மல்குமார் இப்படத்தை இயக்குகிறார். இந்தப் பாகத்தையும், மனோபாலாவின் ‘மனோபாலா பிக்சர் ஹவுஸ்’ தான் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றது. நம்மைச் சுற்றி நமக்கே தெரியாமல் நம் அறியாமையைப் பயன்படுத்தி எவ்வாறெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதனை தெளிவாகவும் வியக்கும்படியும் "சதுரங்கவேட்டை" படத்தில் கூறியிருந்தார்கள். முற்றிலும் தென்மாவட்டங்களில் நடைபெறும் ஏமாற்று வேலைகளைப் பற்றி விவரித்தது சதுரங்கவேட்டை திரைப்படம். தற்போது தினம் தினம் மெருகேறி வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நகரவாழ் ...
தொடரி விமர்சனம்

தொடரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொடரியில் (ட்ரெயின்) உணவு விற்பவரான பூச்சியப்பனுக்கு, தொடரியில் பயணிக்கும் நடிகை ஸ்ரீஷாவின் டச்-அப் பெண்ணான சரோஜா மீது கண்டதும் காதல் வருகிறது. அந்தத் தொடரியின் ஓட்டுநர் இறந்து விடுவதால், நிறுத்துவாரின்றி தொடரி தறி கெட்டு ஓடுகிறது. தொடரி எப்படி நின்றது என்றும் பூச்சியப்பன் சரோஜா காதல் என்னானது என்பதே படத்தின் முடிவு. சதா ஃபோனில் தொணத்தொணத்துத் தொந்தரவு செய்யும் ஒரு மனைவியின் குரல் படத்தில் ஒலிக்கிறது. அப்படித் தொணத்தொணப்பவர் அசிஸ்டென்ட் லோகோமோட்டிவ் பைலட்டின் (ALP) மனைவி. ஏ.எல்.பி. விதிகளை மீறி வேலை நேரத்தில் ஃபோனை அணைக்காததோடு குடிக்க வேற செய்கிறார். ஒருவரின் பொறுப்பற்றத்தனம் சுமார் 700 சொச்சம் பயணிகளின் உயிர்களைக் கேள்விகுறியாக்குகிறது. ஏ.எல்.பி.யின் நிலைக்குக் காரணம் அவருக்கு வரும் மனைவியின் ஃபோன் என்பதாகக் காட்டப்படுகிறது. இயக்குநர் பிரபு சாலமன், மைனா படத்தின் சிறை அதிகாரியின் மனைவியை...
வாய்மையும்  மரணதண்டனையும் – அற்புதம்மாள்

வாய்மையும் மரணதண்டனையும் – அற்புதம்மாள்

Others, காணொளிகள், சினிமா, திரைத் துளி
வாய்மை வெற்றியடைய வேண்டும். மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டும் - நிச்சயமாக சட்டத்திலிருந்தே ஒழிக்கப்பட வேண்டும்.- அற்புதம்மாள்
குற்றமே தண்டனை விமர்சனம்

குற்றமே தண்டனை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இரண்டு சொற்களாலான தலைப்பிலேயே படத்தின் முழுக் கதையும் சொல்லிவிட்டார் காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன். படத்தில் மிகக் குறைவான கதாபாத்திரங்கள், நான்கைந்து லோக்கேஷன்கள் தான் என்றாலும் மிக நிறைவான படம். இவ்வாறான நேர்த்தியான படங்களின் வரவு அதிகமாக வேண்டும் என்ற ஆவலாதியை ஏற்படுத்துகிறது. இயக்குநர் மணிகண்டன் ஒதுங்கி நின்று நம் மனதோடு அழகாய் கண்ணாமூச்சி விளையாடுகிறார். இளம்பெண் ஒருத்தி இறந்து விடுகிறாள். அவரைக் கொன்றது யாரெனச் சொல்லாமல் நம் முடிவுக்கே படத்தின் முடிவை விட்டுவிடுகிறார். குற்றவாளி யாரெனத் தெரியாத அக்கொலை வழக்கிற்கு, அருண் என்பவனை காவல்துறையினர் பலிகடாவாக்குகின்றனர். ஆனால், சந்தேகத்தின் பலனை அருணுக்குப் பார்வையாளர்களும் அளித்துவிடக் கூடாதென, மக்களின் கூட்டு மனசாட்சிக்கு ஒரு 'செக் (check)' வைக்கிறார். அருண் பணக்காரத் திமிர் கொண்டு பெண்கள் பின்னாடி சுற்றும் ஊதாரி இளைஞனெனச் சொல்லி விட...
கிடாரி விமர்சனம்

கிடாரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாத்தூரின் சண்டியராய்த் தாட்டியம் செய்து ஊரையே மிரளச் செய்யும் கொம்பையா பாண்டியனின் கழுத்தில் எவனோ ஒருவன் கத்தியைப் பாய்ச்சி விடுகிறான். கொம்பையா பாண்டியன் வளர்த்து வைத்திருக்கும் பகைகளில் எது அச்சம்பவத்திற்குக் காரணமாய் அமைகிறது என்பதே படத்தின் கதை. மதயானைக் கூட்டம் படத்தில் மிரட்டியிருந்த எழுத்தாளர் வேல ராமமூர்த்தியை, மீண்டும் அதே போலொரு பாத்திரத்தில் கச்சிதமாக உபயோகித்துள்ளார் இயக்குநர் பிரசாத் முருகேசன். வழக்கம் போல் கம்பீரமாக வலம் வருவதுதான், கொம்பையா பாண்டியன் பாத்திரத்தில் எழுத்தாளருக்கு வாய்த்தது எனச் சலிப்பில் இருக்கும் பொழுது, படத்தின் இறுதியில் விஸ்வரூபம் எடுக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தின் உண்மையான சொரூபம் தெரிய வரும் போதுதான் படம் தன் உச்சத்தை அடைகிறது. கொம்பையா பாண்டியின் மகன் உடைய நம்பியாக நடித்திருக்கும் கவிஞர் வசுமித்ரவும் தன் நடிப்பால் கவனிக்க வைக்கிறார். அவர் முகத்தில...
தர்மதுரை விமர்சனம்

தர்மதுரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெரும் பலம் பொருந்திய அமைப்புகளான குடும்பமும் சமூகமும் தனக்கெனப் பிரத்தியேகமான சில விதிமுறைகளை வைத்துள்ளன. அது, தனி நபர்களால் மீறப்படும் பொழுது, அமைப்பின் கண்ணுக்குத் தெரியா அதிகாரம் தனி நபர் விருப்பத்தை நசுக்க முயற்சி செய்யும். தனி நபரான தர்மதுரை, அவ்வமைப்புகளிடம் சிக்கி எப்படி மீள்கிறான் என்பதே படத்தின் கதை. காமராஜ் எனும் மருத்துவப் பேராசிரியராக ராஜேஷ் நடித்துள்ளார். முனியாண்டி என்ற இயற்பெயர் கொண்டவர், காமராஜரின் சத்துணவுத் திட்டத்தால் பயன்பெற்றவர் என்ற நன்றிக்காகத் தன் பெயரையே மாற்றிக் கொள்கிறார். ராஜேஷின் முதுகுக்குப் பின், 'முனியாண்டி' என சில மாணவர்கள் கத்துகின்றனர். அதனால் சுர்ரெனக் கோபம் வந்து விடுகிறது அமைதியை விரும்பும் சக மாணவரான தர்மதுரைக்கு. கத்திய ஹஸனின் மண்டையை உடைத்து விடுகிறார். முனியாண்டி என்ற பெயரோ, கபாலி என்ற பெயரோ உச்சரிக்கப்படக் கூடாத கேலிக்குரிய பெயரா என்ன!? 'ஹஸன் தா...
யானைமேல் குதிரை சவாரி விமர்சனம்

யானைமேல் குதிரை சவாரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தம்பியோடு வாழும் ஏழைப் பெண்ணின் திருமணத்தில் ஏற்படும் சிக்கல்கள்தான் படத்தின் கதை. ‘கதை தான் என் படத்தில் ஹீரோ’ என இயக்குநர் முடிவு பண்ணதால், நாயகன் இல்லாப் படமிது. அக்குறையைத் தீர்க்க ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், ‘வழக்கு எண்’ முத்துராமன், கிருஷ்ணமூர்த்தி என நான்கு கதாபாத்திரங்களைக் கொண்டு ஒப்பேத்தியுள்ளார். 'நான் கடவுள்' ராஜேந்திரனும், 'லொள்ளு சபா' சுவாமிநாதனும் காமெடி வில்லன்கள். தன் பட்டுத் தறியில் வேலை செய்யும் பெண்களைப் படுக்கைக்குக் கூப்பிடுவது 'காமெடி'யாம், விருப்பமில்லா நாயகியை அடைய நினைப்பது வில்லத்தனமாம். முத்துராமனுக்கும் படத்தில் அதே கதாபாத்திரம்தான். ஆனால், நம்பியாரை வழிபடும் இவர் சோலோ காமெடி வில்லன்; சுவாமிநாதனும் ராஜேந்திரனும் ஜோடி. படத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துபவராக கிருஷ்ணமூர்த்தி மட்டுந்தான் படம் நெடுகே பயணிக்கிறார். படத்தின் முடிவில் அதற...
எய்தவன் – போஸ்டர்

எய்தவன் – போஸ்டர்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
'பல்கலைக்கழகத்தின் தவறுகளுக்கு மாணவர்கள் பலிகடாவதா?' என்ற பதாகை காணப்படும் எய்தவன் படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கபாலி இயக்குநர் ரஞ்சித்தும், மதயானைக் கூட்டம் இயக்குநர் விக்ரம் சுகுமாறனும் இணைந்து வெளியிட்டார்கள்.
தயாரிப்பாளராகும் இசையமைப்பாளர்

தயாரிப்பாளராகும் இசையமைப்பாளர்

சினிமா, திரைத் துளி
இசையமைப்பாளர்கள் ஜிவி பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனியைத் தொடர்ந்து ரௌத்திரம், களம் போன்ற படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி தயாரிப்பாளராகிறார். ஸ்வதீப் சினிமா நிறுவனத்துடன் இணைந்து இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தைத் தயாரிக்கிறார் பிரகாஷ் நிக்கி. புதுமுகங்கள் நடிக்கவிருக்கும் இத்திரைப்படத்தைப் புதுமுக இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி இயக்குகிறார். ராஜா DFT ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிரகாஷ்நிக்கி இசையமைக்கிறார். நிர்வாக தயாரிப்பு - நமஸ்காரம் சரவணன். நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படும். அடுத்த மாதம் சென்னை உட்பட புறநகர் பகுதியில் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது....
ஒரு நல்லபாட்டு முடிந்தது – வைரமுத்து

ஒரு நல்லபாட்டு முடிந்தது – வைரமுத்து

சினிமா, திரைத் துளி
இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவு கொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். “மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு” என்று சொன்னவர், “வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு” என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார். தமிழ்க் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய்ச் செழிக்க வேண்டும் என்று பேராசை கொண்டவன் நான். இன்று இளங்கன்று ஒன்று தன் வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதே என்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறேன். ‘உன் சொந்த ஊர் எது தம்பி?’ என்று...