
தலைவன் தலைவி விமர்சனம் | Thalaivan Thalaivi review
ஆகாச வீரன் எனும் பரோட்டா மாஸ்டர், தன் மனைவி பேரரசிக்கும், அம்மாவான பொட்டுக்கும் இடையில் சிக்கிப் படாதபாடுபடுகிறான். அவனது பாடு, அல்லது எந்தவொரு கணவனின் பாடும், ஒரு முடிவே இல்லாத பயணம் என்பதைப் படம் அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றது.
படம் முழுவதும் மனிதர்களால் நிரம்பி வழிகின்றது. அவ்வளவு கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றனர். அத்தனை பேருக்கும் படத்தில் ஒரு தனித்த அடையாளமும், திரைக்கதையில் ஒரு சின்ன பங்கும் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ்க்கு, மனிதர்களைக் கூட்டி, அவர்கள் மூலமாக உறவுகளைப் பற்றிப் பேசுவது கைவந்த கலையாகிவிட்டது.
இப்படத்தின் குறை, ஆகாச வீரனாக வரும் விஜய் சேதுபதி நிறையப் பேசுகிறார், அதையும் சத்தமாகப் பேசிக் கொண்டே உள்ளார். பேரரசியாக நித்யா மேனன் கலக்கியுள்ளார். அவர்களது மகள் குட்டிச் சிறுமியாக நடித்திருக்கும் மகிழினி ஷோ-ஸ்டீலராக அசத்தியுள்ளார். பாதி மொட்டைய...










