32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

யுவன் ஷங்கர் ராஜா

27 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 2 / 2
செய்திகள் வரிசை (பக்கம் 2)
500 மில்லியன் பார்வைகள் கடந்து ரெளடி பேபி சினிமா

500 மில்லியன் பார்வைகள் கடந்து ரெளடி பேபி

2019இல் யூடியூப் தளத்தை ‘பிளாக் ஹோல்’ பரபரப்புகள் தொற்றிக் கொள்ள, மறுபுறம் உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரையும் ‘ரௌடி பேபி’ என்ற புவியீர்ப்பு விசை ஈர்த்து, அதன் படைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவின் மண்டலத்திற்குள் நம்மைத் தள்ளியிருக்கிறது. உலகளாவிய தளம் ‘Bohemian Rapsody’, ‘A Star is Born’ மற்றும் ‘Gully boy’ போன்ற இசை வகையை சார்ந்த மாயாஜால சீசனில் மூழ்கியிருந்தாலும், நமது ‘மாரி 2’வின் ‘ரௌடி பேபி’ தர அட்டவணையில் ஒரு நம்ப முடியாத […]

08/06/2019 Dinesh R
NGK விமர்சனம் சினிமா

NGK விமர்சனம்

இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் நந்தகோபால குமரனுக்கு உரக்கடை முதலாளிகளால் பிரச்சனை எழுகிறது. அச்சிக்கலில் இருந்து எம்.எல்.ஏ.வின் உதவியோடு தப்பித்த குமரன், அரசியல் எனும் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்து, அதன் மூலம் நல்லது செய்ய நினைக்கிறான். அரசியலைச் சுத்தம் செய்தானா அல்லது அரசியலால் அசுத்தம் அடைந்தானா என்பதுதான் படத்தின் கதை. கட்சியின் அடிமட்ட தொண்டன் கிரியாக நடித்துள்ள பாலா சிங், கறை வேட்டியின் மகத்துவம் பற்றி குமரனுக்கு எடுக்கும் பாடம் மிகவும் அசத்தல். ‘செல்வராகவன் இஸ் பேக்’ […]

01/06/2019 Dinesh R
கண்ணே கலைமானே விமர்சனம் சினிமா

கண்ணே கலைமானே விமர்சனம்

தர்மதுரை வெற்றியைத் தொடர்ந்து, அதே பாணியிலான கதையைக் கையிலெடுத்துள்ளார் சீனு ராமசாமி. இம்முறை இன்னும் மென்மையான கிராமத்து டோனில். சோழவந்தான் வள்ளலான கமலக்கண்ணனுக்கு, வங்கி மேலாளரான பாரதி மீது காதல் எழுகிறது. அக்காதலுக்குக் கமலக்கண்ணனின் அப்பத்தா அழகம்மாள் சிவப்புக் கொடி காட்ட, கமலக்கண்ணனுடைய செயற்பாடுகள் என்ன என்பதுதான் படத்தின் கதை. புது மேலாளரை பூமாலையுடன் வரவேற்கும் வினோத வழக்கம் கொண்ட வங்கியாக உள்ளது மதுரா கிராம வங்கி. அவ்வங்கியின் மேலாளர் பாரதியாக தமன்னா நடித்துள்ளார். இது அவரது 50வது […]

22/02/2019 Dinesh R
கண்ணே கலைமானே – தமன்னாவின் 50வது படம் சினிமா

கண்ணே கலைமானே – தமன்னாவின் 50வது படம்

ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் ‘கண்ணே கலைமானே, ஃபிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகிறது. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். “45 நாட்களில் மொத்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம். சீனு ராமசாமி சாரின் படங்கள் எப்போதுமே தனித்துவமான இடங்களின் பின்னணியைக்கொண்டிருக்கும். கண்ணே கலைமானே பசுமையான பின்னணியையும், மேலும் படம் முழுவதும் அழகான தருணங்களையும் கொண்டிருக்கும். […]

19/02/2019 Dinesh R
பேரன்பு விமர்சனம் சினிமா

பேரன்பு விமர்சனம்

பனிமூட்டம் நிறைந்த அந்தப் பரிசல் பயணத்தில் மம்மூட்டி தன் கனத்த குரலில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நீங்கள் என்று சொல்லி தனது கதையைச் சொல்லத் துவங்கி இயற்கை பேரன்பாலானது என்று முடிக்கும் போது உண்மையில் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று புலனாகிறது. மூளை முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பதின்ம வயது பெண்ணை தனி ஆளாக தகப்பனாக நின்று தாங்குகின்ற ஒரு மனிதனின் பெருங்கதை தான் பேரன்பு. ஒரு பதின்ம வயதுப் பெண்ணிற்கு அவளது மாதவிலக்கின்போது ‘பேட்’ மாற்றுவதிலிருந்து, […]

01/02/2019 Dinesh R
ராஜா ரங்குஸ்கி விமர்சனம் சினிமா

ராஜா ரங்குஸ்கி விமர்சனம்

கான்ஸ்டபிள் ராஜாக்கு எழுத்தாளர் ரங்குஸ்கி மீது பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. யாரோ ஒரு அநாமதேய தொலைப்பேசி அழைப்பாளர்க்கும் ரங்குஸ்கி மீது காதல். அந்த அநாமதேய தொலைப்பேசி அழைப்பாளர், ராஜாவை ஒரு கொலைக் குற்றத்தில் லாகவமாகக் கோர்த்து விட்டுவிடுகிறான். அதிலிருந்து ராஜாவும் ரங்குஸ்கியும் எப்படி மீண்டனர் என்பதுதான் படத்தின் கதை. எழுத்தாளர் சுஜாதாவிற்குப் படத்தை டெடிகேட் செய்துள்ளனர். ரங்குஸ்கி என்பது எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயரான ரங்கராஜனின் செல்ல வடிவம். நாயகி, சுஜாதாவின் தீவிர ரசிகை என்பதால் தனது புனைப்பெயராகச் […]

23/09/2018 Dinesh R
பியார் பிரேமா காதல் விமர்சனம் சினிமா

பியார் பிரேமா காதல் விமர்சனம்

காதல். நிறையக் காதல் எனத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். மிகச் சாதாரணனான ஸ்ரீகுமாரும், அதி நவீனமான சிந்துஜாவும் காதலிக்கின்றனர். ஸ்ரீகுமார்க்குக் கல்யாணம் பண்ணிக் குடும்பம் குட்டியோடு வாழ ஆசை; சிந்துஜாவிற்குத் தன் லட்சியக் கனவை அடைய கல்யாணமும் குழந்தையும் தடையாக இருக்கும் என எண்ணும் லிவ்விங் டுகெதர் யுக பெண். அப்போ இருவருக்குமிடையேயான காதல்? அதுதான் படத்தின் கதை. படத்தில் மூன்று நாயகர்கள். ஒன்று படத்தைத் தயாரித்து, இசையமைத்துள்ள யுவன் ஷங்கர் ராஜா. அடுத்து, கலை இயக்குநர் […]

10/08/2018 Dinesh R
சாம் C.S. இசையில் பாடும் யுவன் ஷங்கர் ராஜா சினிமா

சாம் C.S. இசையில் பாடும் யுவன் ஷங்கர் ராஜா

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் ஒரு சிலரே! அந்த வரிசையில் சாம் C.S. மிகவும் முக்கியமானவர் . புரியாத புதிர், விக்ரம் வேதா, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களைத் தொடர்ந்து இவர் இசையமைக்கும் படம் வஞ்சகர் உலகம். வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவரவிருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை […]

28/07/2018 Dinesh R
பேய்ப்பசியில் பாடும் விஜய் சேதுபதி சினிமா

பேய்ப்பசியில் பாடும் விஜய் சேதுபதி

ஸ்ரீநிவாஸ் கவிநயன் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பேய் பசி’. இந்தப் படத்தை ‘ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின் மென்ட் ப்ரைவேட் லிமிடெட் (Rise East Entertainment Private Limited)’ நிறுவனம் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்தின் சிறப்பம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் படத்தின் ஒரு கிளப் பாடலிற்கு அனைவரையும் உடனே கவரும் ஒரு வித்தியாசமான குரல் தேவைப்பட்டது. இதற்கு நடிகர் விஜய் சேதுபதி […]

01/03/2018 Dinesh R
யுவன் இசையில் ‘பலூன்’ சினிமா

யுவன் இசையில் ‘பலூன்’

காதல் கலந்த திகில் திரைப்படமாக உருவாகி வரும் ‘பலூன்’ திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக R.சரவணன், கலை இயக்குநராக சக்தி வெங்கடராஜ், படத்தொகுப்பாளராக ரூபன், ஸ்டன்ட் மாஸ்டராக திலிப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக NJ சத்யா மற்றும் நடன இயக்குநராக ஷெரிப் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். “முழுக்க முழுக்க இள வட்டாரங்களுக்கு பிடித்தமான படமாக தான் நாங்கள் பலூன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம். இளைஞர்களைக் கவரக்கூடிய கதை என்பதால், எங்கள் பலூன் படத்தில் மெலோடி பாடல்கள் […]

26/07/2016 Dinesh R
ஐ.டி. துறை பற்றிய இயக்குநர் ராமின் படம் சினிமா

ஐ.டி. துறை பற்றிய இயக்குநர் ராமின் படம்

கற்றது தமிழ், தங்க மீன்கள் என்று தரமான படங்கள் கொடுத்து தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அரங்கிலும் தமிழ்ப் படங்களுக்கு மிகப் பெரிய அந்தஸ்தை வாங்கித் தந்த இயக்குநர் ராம், பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்து விநியோகித்து தரமான படங்கள் தயாரிக்கும் நிறுவனம் என்று தன் பட நிறுவனமான ஜே.எஸ்.கே பிலிம் corporation நிறுவனத்துக்கு பெயர் ஈட்டித் தந்த ஜே .சதீஷ் குமாருடன் இணைந்து தமிழ் ரசிகர்களுக்கு அடுத்துக் கொடுக்கவிருக்கும் படைப்பு ‘தரமணி’. தரமான வித்தியாசமான கதைக் […]

07/05/2016 Dinesh R