Shadow

Tag: விமல்

“மச்சான் தயவு எவ்வளவு முக்கியம்?” – பாண்டியராஜன்

“மச்சான் தயவு எவ்வளவு முக்கியம்?” – பாண்டியராஜன்

சினிமா, திரைச் செய்தி
உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தெய்வ மச்சான்'. அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் 'ஆடுகளம்' நரேன், பால சரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேமில் ஜெ அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு காட்வின் ஜெ. கோடன் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்குப் பின்னணி இசை அஜீஸ் கவனித்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ஏப்ரல் 21ஆம் தேதி அன்று தி...
‘தெய்வ மச்சான்’ விமல்

‘தெய்வ மச்சான்’ விமல்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு 'தெய்வ மச்சான்' என பெயரிடப்பட்டுள்ளது. அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தெய்வ மச்சான்'. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், 'ஆடுகளம்' நரேன், பாலசரவணன், வேல ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு காட்வின் இசை அமைக்கிறார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மார்ட்டின் மற்றும் வத்சன் இணைந்து எழுதியிருக்க, படத்தின் பின்னணி இசையை அஜீஷ் கவனிக்கிறார். எடிட்டர் இளையராஜா படத்த...
களவாணி 2 விமர்சனம்

களவாணி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருத நிலத்தின் அழகை, 2010 இல் வந்த களவாணி போல் வேறெந்தப் படமும் அவ்வளவு அழகாக திரையில் காட்டியதில்லை. அந்தக் கதையிலும், கதைக்களத்திலும், கதாபாத்திரங்களிலும் இழையோடிய நேட்டிவிட்டியும், நகைச்சுவையும் படத்தை மறக்க முடியாததொரு அனுபவமாக மாற்றியிருந்தது. இப்படத்திற்கு, முதல் பாகத்துடன் நேரடி தொடர்பு இல்லை. முக்கிய கதாபாத்திரங்களை அப்படியே எடுத்தாண்டுள்ளனர். அரசனூரில், களவாணி எனப் பெயர் பெற்ற அறிக்கி எனும் அறிவழகனை, மகேஸ்வரி காதலிக்கிறார். காதலிக்காக உள்ளாட்சித் தேர்தலில் வென்று ஊர் பிரஸிடென்ட் ஆகவேண்டுமென முடிவெடுக்கிறார் அறிக்கி. களவாணி எனப் பெயர் பெற்ற அவர் தேர்தலில் எப்படி வென்றார் என்பதைக் கலகலப்பாகச் சொல்லியுள்ளார் சற்குணம். மடந்தையான மகேஸ்வரிக்கும், களவாணி அறிக்குக்கும் ஆன காதல், முதற்பாகத்தில் அற்புதமானதொரு உணர்வைத் தரும். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். நாயகன், நாயகிக்குள்ளான ஈ...
அஞ்சல விமர்சனம்

அஞ்சல விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நூற்றாண்டு விழா (1913 - 2013) காணும் 'அஞ்சல தேனீர் விடுதி'யைப் பற்றிய படமிது. ராமய்யா - முத்திருளாண்டி என தாத்தா - பேரனாக இரு பாத்திரத்தில் நடித்துள்ளார் பசுபதி. படம் முழுக்க அவர் மட்டுமே தெரிகிறார். இது அவரின் படம் எனலாம் அல்லது அவரை நம்பி எடுக்கப்பட்ட படம். ராமய்யாவின் மனைவி அஞ்சலையாக மெட்ராஸ் படப்புகழ் ரித்விகா நடித்துள்ளார். காலத்திற்கேற்ப மாறும் அவர் உடைகளாலும் கதை சொல்லியுள்ளார் இயக்குநர் தங்கம் சரவணன். கவாஸ் என்கிற கவாஸ்கராகப் பழகிப் போன பாத்திரத்தில் விமல் (Vemal). உத்ராவாக நடித்திருக்கும் நந்திதாவுக்கும் விமலுக்குமான காதல் காட்சிகள் திராபையாக இருந்தாலும், 'கண் ஜாடை காட்டி எனைக் கவுத்த செவத்த புள்ள' பாடல் ஈர்க்கிறது. வசனங்களே படத்தின் பெரிய பலவீனம். வங்கியில் லோன் கிடைத்து விட, நாயகன் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிபடுத்துகிறான். அடுத்த வரும் சின்னஞ்சிறு காட்சியில் நாயகி நாயகனிடம...
விமல் – நந்திதா – அஞ்சல

விமல் – நந்திதா – அஞ்சல

சினிமா, திரைத் துளி
பிரபல சண்டை இயக்குநர் திலிப் சுப்புராயன் தயாரிப்பில், விமலுக்கு ஜோடியாக நந்திதா நடிக்கும் அஞ்சல படத்தின் விநியோக உரிமையைப் பெற்று இருப்பவர் ஆரா (Auraa) சினிமா மகேஷ் கோவிந்தராஜ். நடிகர் விமல் உடைய படங்களுக்கு விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், மற்றும் ரசிகர்கள் இடையே என்றுமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். சகல தரப்பினரையும் திருப்தி செய்யும் படமாக அவரது படம் இருக்கும் என்ற கணிப்பை அவர் என்றுமே பொய்க்க விட்டதில்லை. அந்த வகையில் தங்கம் சரவணன் இயக்கத்தில் உருவாகும் அஞ்சல திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களைக் கவரும் வகையில் பல அம்சங்கள் படத்தில் இருந்தாலும், பிரபல இசை அமைப்பாளர் கோபி சுந்தர் படத்திற்கு இசை அமைத்துள்ளார் என்பது பிரதானமான அம்சம். ‘Bangalore days’, ‘என்னு நிண்டே மொய்தீன்’ ஆகிய மலையாளப் படங்களின் இசை மூலம் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட இசை இவர...