Shadow

Tag: விமல்

வடம் விமர்சனம் | Vadam review

வடம் விமர்சனம் | Vadam review

சினிமா, திரை விமர்சனம்
இரட்டையர்களாகப் பிறக்கும் இரண்டு காளைக் கன்றுகள், சிறு வயதில் பிரிந்து, திமிலுடன் வளர்ந்த பின், வடமாடு மஞ்சு விரட்டில் ஒன்று சேருவதுதான் படத்தின் கதை. வடம் என்றால் தடித்த கயிறு எனப் பொருள் கொள்ளலாம். வடமாடு மஞ்சுவிரட்டு என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் ஒரு மரபுவழி ஏறுதழுவல் விளையாட்டாகும். காளையை ஒரு நீண்ட வடத்தில் (கயிறு) கட்டி வைத்து, 9 முதல் 10 மாடுபிடி வீரர்கள் கொண்ட குழு 20-25 நிமிடங்களில் அதைப் பிடித்து அடக்க வேண்டும். இது காளையின் உரிமையாளருக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இடையேயான போட்டியாகக் கருதப்படுகிறது. அடக்கவே முடியாத காளைகளை வளர்ப்பதைக் கெளரவமாகவும் வீரமாகவும் கருதுபவர் ரத்தினவேல். அவரால் விரட்டி விடப்பட்ட, ஒற்றைக் கண் காளைக் கன்றைத் தன் அன்பாலும் பயிற்சியாலும், யாராலும் அடக்க முடியாத காளையாகப் மாற்றி விடுகிறார் வெற்றிவ...
வடம் | ஏரும் தெய்வம் எருதும் தெய்வம் | விமல் – நட்டி

வடம் | ஏரும் தெய்வம் எருதும் தெய்வம் | விமல் – நட்டி

சினிமா, திரைச் செய்தி
மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான 'வடம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகர், ''நான் இந்தத் துறைக்குப் புதிது. இயக்குநர் ஆறு மாதத்திற்கு முன் என்னைச் சந்தித்து கதை சொல்வதற்கு முன் மாட்டைப் பற்றிச் சொன்னார். அது எங்களுக்குப் பிடித்திருந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று சந்திப்புகளிலும் கதையைப் பற்றி விரிவாகச் சொன்னார். அதன் பிறகு என்னுடைய பார்ட்னர்களுடன் விவாதித்தோம். இயக்குநர் எங்களிடம் எப்படி கதையைச் சொன்னாரோ, அதை அப்படியே திரையில் கொண்டு வந்து இருந்தார். நாங்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். இதற்காக முதலில் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா நடிகர் நடிகைகளும் நன்றாக நடித்திருந்த...
வடம் – Rural sports entertainer

வடம் – Rural sports entertainer

சினிமா, திரைச் செய்தி
மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான 'வடம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கேந்திரன், ''கதை முழுமையாக எழுதி முடித்தவுடன் முதலில் இசையமைப்பாளர் இமானிடம் தான் சொன்னேன். அவர் முழுவதும் கேட்டுவிட்டு நான் இசையமைக்கிறேன் என்று சொன்ன தருணத்திலேயே எனக்குத் தெரிந்து விட்டது இந்த படம் ஹிட் என்று. இதற்காக இமானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரைத் தொடர்ந்து இப்படத்தின் கதையை விமலிடம் சொன்னேன். அதற்குப் பிறகு நட்டியிடம் சொன்னேன். அப்போது அவர், ‘நீங்கள் சொன்ன கதையை மாறாமல் அப்படியே படமாக்கி விடுவீர்களா?’ என்றார். ‘நான் நிச்சயமாக எடுக்கிறேன்’ என்று சொன்னவுடன் அவரும், அவரும் நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார். இப்படத்த...
மகாசேனா விமர்சனம் | Mahasena review

மகாசேனா விமர்சனம் | Mahasena review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மகாசேனா என்பது யாளீஸ்வர் எனும் தெய்வத்தைக் குறிக்கும் திருநாமங்களில் ஒன்றெனப் படத்தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். யாளிமலையில் உள்ள குரங்கணி எனும் ஊரில், எவர் கண்ணுக்கும் தெரியாத ‘யாளீஸ்வரர் சிலை’ ஒன்று கோயிலில் இருப்பதாகக் கருதப்படுகிறது. சித்ரா பெளர்ணமியன்றே அச்சிலையைக் கண்களால் காண முடியும். அதை அபகரிக்க அடிவாரப்பகுதி மக்கள் மூவாயிரம் ஆண்டுகளாக முயற்சி செய்கின்றனர். குரங்கணியின் தலைவன் செங்குட்டுவன் அதைக் காப்பாற்ற நினைக்க, அதை அடைந்தே தீருவது எனும் தீவிரமான பிடிவாதத்துடன் உள்ளார் அடிவாரப்பகுதி தலைவி கங்கா. யாளி சிலையை அடைந்தே தீருவதென்ற கங்காவின் சபதம் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. நரபலி கொடுக்கும் காட்டுவாசிகளாக உள்ளனர் அடிவாரப்பகுதி மக்கள். அதிகாரிகளின் தலைகளைக் கொய்து சாக்கில் சுருட்டி எடுத்துச் செல்லும், கைலி அணிந்த நாகரீகமானவர்களாக உள்ளனர் குரங்கணி மக்கள். குரங்கணி...
பரமசிவன் பாத்திமா விமர்சனம் | Paramasivan Fathima review

பரமசிவன் பாத்திமா விமர்சனம் | Paramasivan Fathima review

சினிமா, திரை விமர்சனம்
அந்நியர்கள் நுழையத் தடை விதைத்திருக்கும் சுப்ரமணியபுரத்து பரமசிவனும், சாத்தான்கள் நுழையத் தடை விதித்திருக்கும் யோக்கோபுரத்து பாத்திமாவும் காதலிக்கிறார்கள். ஆனால் மதத்தைக் காரணம் காட்டி இருவும் கொல்லப்படுகிறார்கள். பரமசிவனும் பாத்திமாவும் தங்கள் மரணத்திற்குப் பழிவாங்குவதுதான் படத்தின் கதை. ஒன்றாக இருந்த ஊரைப் பணத்தாசை காட்டி மதம் மாற்றி இரண்டாக உடைக்கிறார்கள் எனக் காத்திரமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். இதுதான் படத்தின் பிரதான நோக்கம். வசனங்கள், காட்சிகள் என அனைத்தும் அதை நோக்கியே நகர்கின்றன. பரமசிவன், பாத்திமா காதலே கூடத் தொட்டுக்கோ, துடைச்சுக்கோ எனக் கிளைக்கதையாகத்தான் வருகிறது. பாத்திமாவின் அண்ணன் ஃபெலிக்ஸாக நடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் M.சுகுமார்தான் படத்தின் வில்லன். அவருக்கு மத அபிமானம் எல்லாம் கிடையாது. அவரது குறிக்கோள் பணம் மட்டுமே! இயக்குநரின் நோக்கம...
படவா விமர்சனம் | Badavaa review

படவா விமர்சனம் | Badavaa review

சினிமா, திரை விமர்சனம்
படவா என்பது போக்கிரி என்ற பொருள் வருமாறு செல்லமாகப் பயன்படுத்தப்படும் சொல். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மரக்காத்தூர் எனும் ஊருக்குள் வெட்டியாகச் சுற்றும் வேலனின் போக்கிரித்தனம் பொறுக்க முடியாமல் அவரை ஊரே சேர்ந்து மலேஷியாவிற்கு அனுப்பி வைக்கிறது. மலேஷியாவில் வேலை போய்விட, மீண்டும் ஊருக்கு வரத் தயங்கும் வேலன்க்கு உதவுவதற்காக, வேலனுக்கு லாட்டரியில் 10 கோடி விழுந்துள்ளதாக அவனது மலேஷிய நண்பன் பொய் சொல்லிவிடுகிறான். அதை நம்பும் ஊர்மக்கள், அவனை ஊர் தலைவராக எதிர்ப்பில்லாமல் ஏக மனதாக நியமித்துவிடுகின்றனர். ஒரு படவாவிடம் கொடுக்கப்படும் தலைவர் பொறுப்பை அவன் எப்படிப் பயன்படுத்துகின்றான் என்பதுதான் படத்தின் கதை. வேலனின் நண்பர் உறைப்பாக சூரி நடித்துள்ளார். விடுதலை, கொட்டுக்காளி, கருடன் என புதுப் பரிமாணத்திற்குச் சென்றுவிட்ட பின், அவரைப் பழைய வழக்கமான நகைச்சுவைக் காட்சிகளில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள...
SIR விமர்சனம்

SIR விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வாத்தியார் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானத்தின் தாத்தாவும் அப்பாவும் ஆசிரியராக இருந்தவர்கள். கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும், கல்வியே எல்லாத் தளைகளில் இருந்தும் விடுதலை அளிக்கும் என உயர்ந்த லட்சியத்துடன் 1950 களில், ஒரு பள்ளியைத் தொடங்குகிறார் சிவஞானத்தின் தாத்தா. அவர் விட்ட வேலையைச் சிரமேற்கொண்டு ஆத்மார்த்தமாக ஆசிரியப் பணியைச் செய்கிறார் சிவஞானத்தின் அப்பா. உயர்நிலைப்பள்ளியாக உயர்த்த அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் வியர்த்தமாகிறது. தந்தை மற்றும் தாத்தாவின் கனவை அறியாத சிவஞானம், ஊரை விட்டு மாற்றலாகிச் சென்றுவிட நினைக்கிறார். தன் குடும்பம் எதற்காகப் போராடுகிறது என உணரும் சிவஞானம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் படத்தின் அடிநாதம். ஒருவரை ஒடுக்கித் தங்கள் ஆளுகைக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமென்றால், அவர்கள் மனதில் மூடநம்பிக்கைகளை விதைத்து, அவர்களுக்குக் கல்வியறிவு கிடைக்காமல் பார்த்துக் கொ...
போகுமிடம் வெகுதூரமில்லை – திரையரங்கில் ரசிகர்களுடன் கொண்டாட்டம்

போகுமிடம் வெகுதூரமில்லை – திரையரங்கில் ரசிகர்களுடன் கொண்டாட்டம்

இது புதிது, சினிமா, திரைத் துளி
ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜாவின் இயக்கத்தில் விமல், நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் போகுமிடம் வெகு தூரமில்லை ஆகும். இப்படத்தில் விமலுடன் கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், தீபா சங்கர், சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.இப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாகத் திரையரங்கில் ஓடிக்வ்கொண்டிருக்கிறது. பொதுமக்கள் பலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர். பதற வைக்கும் இடைவேளை காட்சியும், பரபர என்று செல்லும் திரைக்கதையும் ரசிகர்களைக் கவர்ந்து இருப்பதால் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.மனித உணர்வுகளை அழகாகவும் அழுத்தமாகவும் இயக்குநர் பேசி இருப்பதாக ரசிகர்கள், பொது மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கையை அப்படியே படமாக்கி இருப்பதால் இப்படம் மக்களிடம் சென்றிருக்கிறது. தற்போது 'போகுமிடம் வெகு தூரமில்லை' திரைப...
போகுமிடம் வெகுதூரமில்லை விமர்சனம்

போகுமிடம் வெகுதூரமில்லை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அன்பே சிவம், மாநகரம், அயோத்தி முதலிய படங்கள் வரிசையில், சக மனிதனுக்கு ஒன்றெனில் உதவ முன்வரவேண்டும் என்ற கருத்துடன் வெளிவந்துள்ள படம். படத்தைத் தயாரித்த ஷார்க் பிக்சர்ஸ் சிவா கிளாரிக்கு வாழ்த்துகள். அமரர் ஊர்தி ஓட்டுநரான குமார், சென்னையில் இருந்து களக்காடு வரை ஒரு பெரியவரின் உடலை எடுத்துக் கொண்டு செல்கிறார். அடிக்கடி நின்றுவிடும் தனது வண்டியைத் தள்ளுவதற்காக நளினமூர்த்தியை ஏற்றிக் கொள்கிறார். வழியில் எதிர்பாராதவிதமாக ஒரு பயங்கரமான சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் குமார். அச்சிக்கலில் இருந்து அவர் மீண்டு பத்திரமாகக் களக்காடு சென்றடைந்தாரா இல்லையா என்பதே படத்தின் முடிவு. கூத்துக் கலைஞர் நளினமூர்த்தியாக கருணாஸ் கலக்கியுள்ளார். மிகச் சிறப்பான கதாபாத்திரத்தை அவருக்கு அளித்துள்ளார் இயக்குநர் மைக்கேல் K. ராஜா. கதையின் நாயகன் என்றே சொல்லலாம். நளினமூர்த்தியின் இம்சையைப் பொறுத்துக் கொள்வதும் சிரமம், மி...
நடிகர்கள் விமல், சூரி மீண்டும் இணைந்துள்ள ‘படவா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

நடிகர்கள் விமல், சூரி மீண்டும் இணைந்துள்ள ‘படவா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் 'படவா' திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு  நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர்.இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், 'கேஜிஎஃப்' புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி மற்றும் சாம் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.கே.வி. நந்தா இப்படத்தை இயக்கியுள்ளார். கலை இயக்குந‌ராக சரவண அபிராமன், படத்தொகுப்பாளராக வினோத் கண்ணா பொறுப்பேற்றுள்ளனர்.சண்டைக்காட்சிகளை சிறுத்தை கணேஷ், நடனத்தை தினேஷ், ஸ்ரீதர் மற்றும் தினா ஆகியோரும் வடிவமைத்துள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்து வருகிறார். பாடல்களை ஜான் பீட்டர், விவேகா, கபிலன் வைரமுத்து, இளையகம்பன், ஸ்வர்ணலதா ஆகியோர் எழுதியுள்ளனர்.'படவா' ரிலீசுக்கு தயாராகி வரும் நில...
துடிக்கும் கரங்கள் – விமர்சனம்

துடிக்கும் கரங்கள் – விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
போதைப் பொருள் தடுப்புப்  பிரிவு ஐஜியின் மகள் மர்மமான முறையில் பூட்டிய காருக்குள் சடலமாக மீட்கப்படுகிறார்.  அதே நேரம் தன் மகனைத் தேடி சென்னைக்கு வரும் வயதான முஸ்லீம் பெரியவர்(சங்கிலி முருகன்), மகனின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருக்க, அவன் இருக்கும் இடம் தெரியாமல் தெருத் தெருவாக அலைகிறார். ‘கொத்து பரோட்டோ” என்கின்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தும் விமலும், சதீஷும் அந்த முஸ்லீம் பெரியவருக்கு உதவ எண்ணி அப்பெரியவரின் மகன் காணாமல் போனது தொடர்பான தகவலை வீடியோவாக வெளியிட்டு உதவி கேட்கின்றனர்.  இதைத் தொடர்ந்து இறந்து போன ஐ.ஜியின் மகளுக்கும் காணாமல் போன முஸ்லீம் பெரியவரின் மகனுக்கும் என்ன தொடர்பு..? அவர்கள் என்ன ஆனார்கள் என்கின்ற கேள்விக்கான விடை தேடும் முயற்சியே “துடிக்கும் கரங்கள்”.முதன்முறையாக ஆக்‌ஷன் ஹீரோவாக விமல் முயற்சித்திருக்கும் படம், முதல் சண்டைக் காட்சியில் ரவுண்டு கட்டி நிற்கும் ர...
குலசாமி விமர்சனம்

குலசாமி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சில ஆண்டுகளுக்கு முன் நாட்டில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்குகளில் ஒன்று கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பிரபலங்களுக்கு ஆசை நாயகியாக மாற்ற முனைந்த பேராசியரியைப் பற்றிய வழக்கு. அந்த வழக்கை கதையின் முக்கிய மையச்சரடாகக் கொண்டு விமலுக்கு ஒரு தங்கச்சி எமோஷ்னலைப் புகுத்தி, ஓர் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தைக் கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் ஷரவண சக்தி. மதுரையில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவிகள் சிலருக்குப் பாலியல் ரீதியிலான அழுத்தம் வருகிறது. மேலும் பெண்களைக் கொடூரமாகக் கற்பழிக்கும் நபர்கள், மிகக் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். விமல் மேற்படியுள்ள சம்பவங்களில் எப்படி லிங்க் ஆகிறார் என்பதாக விரிகிறது குலசாமியின் திரைக்கதை. விமல் அழுகை, சோகம், கோபம் என அவருக்கே உரித்தான அரிதாரங்களை களைத்துப் போட்டு இப்படியான சோக அவதாரத்தில் ஆடியிருக்கிறார். விளைவு? தேக்கமான அவரது ஸ்கிரீன் ப்ரசெனஸ் படத்திற்குள் ந...
தெய்வ மச்சான் விமர்சனம்

தெய்வ மச்சான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தபால் கார்த்திக்கின் கனவில், வெள்ளைக் குதிரையுடன் ஒருவர் வந்து யாராவது இறந்து விடுவார்கள் எனச் சொன்னால் அது பலித்துவிடும். அவனது தங்கை குங்குமத்தேனுக்கு, பல சம்பந்தங்கள் தள்ளிப் போய், ஒரு நல்ல வரன் அமைகிறது. ஆனால், கல்யாணம் ஆன இரண்டு நாளில் கார்த்தியின் மச்சான் அழகர் என கனவு வர, தன் மச்சானின் உயிரை எப்படியாவது காப்பாற்ற நினைக்கிறான் கார்த்திக். கனவில் கண்டது நடந்ததா, இல்லை கார்த்திக்கால் தன் மச்சான் அழகரைக் காப்பாற்ற முடிந்ததா என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தின் தொடக்கப்புள்ளி, விலங்கு இணைய தொடரின் படப்பிடிப்பில் போடப்பட்டதால், பாலசரவணனையும், கிச்சா ரவியையும் படத்துக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். பாலசரவணன் ஓரளவு படத்தின் கலகலப்பிற்கு உதவினாலும், திரைக்கதை ஒத்துழைக்காததால் விழலுக்கு இறைத்த நீராகிவிடுகிறார். கிச்சா ரவியும் கைவிட, அவரது மனைவியாக நடித்துள்ள தீபா சங்கர் மட்டும் தன் அதீத நடிப்...
“ஓவர் ஆக்டிங்கைக் குறைத்துக் கொள்கிறேன்” – ‘தெய்வ மச்சான்’ தீபா ஷங்கர்

“ஓவர் ஆக்டிங்கைக் குறைத்துக் கொள்கிறேன்” – ‘தெய்வ மச்சான்’ தீபா ஷங்கர்

சினிமா, திரைச் செய்தி
உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தெய்வ மச்சான்'. அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் 'ஆடுகளம்' நரேன், பால சரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேமில் ஜெ அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு காட்வின் ஜெ. கோடன் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்குப் பின்னணி இசை அஜீஸ் கவனித்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ஏப்ரல் 21ஆம் தேதி அன்று தி...
தெய்வ மச்சான்: பூகம்பம் + வேட்டைக்காரர் + கனவு

தெய்வ மச்சான்: பூகம்பம் + வேட்டைக்காரர் + கனவு

சினிமா, திரைச் செய்தி
உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தெய்வ மச்சான்'. அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் 'ஆடுகளம்' நரேன், பால சரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேமில் ஜெ அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு காட்வின் ஜெ. கோடன் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்குப் பின்னணி இசை அஜீஸ் கவனித்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ஏப்ரல் 21ஆம் தேதி அன்று தி...