Shadow

Tag: ஷாலினி பாண்டே

இட்லி கடை விமர்சனம் | Idly Kadai review

இட்லி கடை விமர்சனம் | Idly Kadai review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ப பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களுக்குப் பின் தனுஷ் இயக்கியிருக்கும் 4 ஆவது படம் “இட்லி கடை” ஆகும். எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கிறார் தனுஷ். தனுஷூடன் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். தேனி மாவட்டத்து சங்கராபுரம் கிராமத்தில் ராஜ்கிரண் நடத்தும் இட்லி கடை அந்த ஊரின் அடையாளமாகத் திகழ்கிறது. இயற்கையான முறையில் நல்ல கைப்பக்குவத்துடன் சுவையான இட்லி சமைப்பவர் ராஜ்கிரண். அவரது மகன் தனுஷ் படிப்பை முடித்து வசதியாக வாழ வெளியூருக்கு வேலைக்குச் செல்கிறார். பாங்காங்கில் தொழிலதிபர் சத்யராஜ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் வேலை செய்யும் தனுஷைச் சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டே காதலிக்க, தனுஷூடன் திருமணம் நிச்சயம் ஆகிறது. இதற்கிடையில் திருமணத்திற்குச்...
சைலன்ஸ் விமர்சனம்

சைலன்ஸ் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
சியாட்டல் வாழ் இசை கலைஞரான அந்தோனி கொன்சால்வேஸ் மர்மமான முறையில் ஒரு பேய் வீட்டில் கொல்லப்படுகிறார். காது கேட்காத, வாய் பேச முடியாத அவரது காதலி சாக்‌ஷியும் அமானுஷ்யமான முறையில் தாக்கப்படுகிறார். கொலைக்குக் காரணம் அமானுஷ்யம் சூழ்ந்த அந்த வீட்டின் பேய் என்று அனைவரும் நம்பும் பட்சத்தில், கொலையாளியைப் பிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார் காவல்துறை அதிகாரியான மகாலக்‌ஷ்மி. கொலைக்கான காரணத்தையும், கர்த்தாவையும் மகாலக்‌ஷ்மி எப்படிக் கண்டுபிடித்தார் என்பதுதான் படத்தின் கதை. தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் எடுக்கப்பட்ட படம், மலையாளத்தில் டப் செய்யப்பட்டு மும்மொழியில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே என நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள படம். எனினும், சியாட்டலில் கதை நிகழ்வதாலோ என்னவோ, படத்தில் ஒன்ற முடியாமல் ஒரு அந்நியத்தன்மை இழையோடுகிறது. டீட்டெயிலிங் இல்லாத கத...
கொரில்லா விமர்சனம்

கொரில்லா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விவசாயியான சாதீக், போலி மருத்துவரான ஜீவா, ஐ.டி. வேலையை இழந்த சதீஷ், நடிகராகும் கனவில் இருக்கும் வெங்கட் ஆகியோர் இணைந்து ஒரு வங்கியைக் கொரில்லா முகமூடி போட்டுக் கொள்ளையடிக்கின்றனர். அமெச்சூர் திருடர்களான அவர்களின் கொள்ளையடிக்கும் முயற்சி எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவின் பெயர் போடும் பொழுது, காங் எனும் சிம்பென்சியைச் சுற்றுலாக்குச் செல்லும் ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகிய மூவரும் எப்படி மீட்கின்றனர் எனத் திரையில் காட்டப்படும் கதை நன்றாக உள்ளது. ஜீவா பேருந்துகளில் செய்யும் திருடு, போலி டாக்டராக அவர் வரும் காட்சிகள், இது அப்படியே நாயகியுடனான காதலாக மலரும் ஆரம்ப காட்சிகள் எல்லாம் பொறுமையைச் சோதிக்கின்றன. குரங்கு பொம்மை போட்டு அவர்கள் திருடச் செல்லும் காட்சிகள் கூடப் பெரிதும் பரபரப்பில்லாமல் நகர்கிறது. கொரில்லா பொம்மை மாஸ்க்கை ஜீவா கழட்டும் இடத்தி...