Shadow

Tag: ஸ்ரீதர் நாராயணன்

ராக்கெட்ரி: நம்பி விளைவு விமர்சனம்

ராக்கெட்ரி: நம்பி விளைவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நம்பி நாராயணனுடைய வரலாற்றுப் படம் (Biopic) எடுக்கிறார்கள் எனும்போதே எனக்கு இயல்பாக ஆர்வம் எழுந்தது. 90களின் சமயத்தில்தான், இந்திய பத்திரிகைத் துறையில் இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் மையம் கொண்டிருந்தது. இப்படியெல்லாம் நடப்புலகின் புதிரான சம்பவங்களை அம்பலப்படுத்துவது அல்லவா பத்திரிகை தர்மம் என்று மிகவும் உணர்ச்சி மேலீட்டோடு கவனித்து வந்த பல வழக்குகளில் ஒன்று நம்பி நாராயணன் வழக்கு. பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தது, அவர் மேலான குற்றசாட்டுகள் நிரூபணம் ஆகாமல் சிபிஐ கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி ஆனதெல்லாம் நடந்ததும், பத்திரிகைகள் அவர் மேல் கவிந்த வெளிச்சத்தை விலக்கிக் கொண்டுவிட்டன. பத்திரிகைகளால் அதிகம் கண்டுகொள்ளப்படாத அந்தக் காலகட்டத்திலும், நம்பி நாராயணன் தன் மீது அபாண்டமாகப் போடப்பட்ட தேசத்துரோக களங்கத்தைப் போக்கிக் கொள்ள தொடர்ந்து சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு வந்திருக்கிறார். உச்சநீதிமன்றம்...
காமோற்சவம்

காமோற்சவம்

சமூகம், சினிமா
‘காமாண்டி கூத்து’ என்பது வசந்தத்தை வரவேற்றுக் கொண்டாடும் பல தொல் பண்டிகைகளில் ஒன்று. மதுரைப் பகுதிகளில் காமன் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படும். திண்டுக்கல்லில் காமக் கடவுளுக்கு கோவில் கூட உண்டு. முன்பொருமுறை இலாவணிப் பாடல் வகையில் காமன் பண்டிகை பற்றி ‘எரிந்த கட்சி’ என்றொரு பாடல் எழுதியிருந்தேன். இன்றும் காமாண்டி கூத்து நடைபெறுகிறது என்றாலும், வள்ளி திருமணம் போன்ற கூத்துகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைதான். மக்கள் கூட்டத்தை ஈர்க்க வெகு ஆபாசமாக நடத்தப்படும். இந்தக் காமாண்டி வழிபாடு என்பது பெரும் வரலாறு கொண்டது. கிளியை வாகனமாகக் கொண்டு, கரும்பு வில்லேந்தி, சந்தனம் பூசி வரும் மன்மதனும், அவனுக்கு இணையாக வரும் ரதிதேவியும், காமாண்டி வழிபாட்டின் கடவுள்கள். தமிழில் அப்படித்தான். மாயாண்டி, விருமாண்டி, சிவனாண்டி என்றுதான் கடவுள்கள் எல்லாம் குறிக்கப்படுவர். இப்பொழுது இதையெல்லாம் புதியதாகக் கேட்பவர்களுக்க...
ஹாட்ரிக்கால் கனிந்த வெற்றிக்கனி

ஹாட்ரிக்கால் கனிந்த வெற்றிக்கனி

சமூகம்
87 ரிலையன்ஸ் உலகக் கோப்பை கிரிக்கெட் பந்தயத்தில் சேத்தன் ஷர்மா எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டுக்களில் ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு. முதலில் அவுட் ஆன ரதர்ஃபோர்டு, மிடில் ஸ்டம்ப் பெயர போல்டு ஆகிவிடுவார். அடுத்து வந்த நியூசியின் விக்கெட் கீப்பர் ஸ்மித், ஆஃப் ஸ்டம்ப் பெயர் போல்டு ஆகிவிடுவார். அப்பொழுது டிவியில் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குத் தோன்றியது, அடுத்த பந்தில் லெக் ஸ்டம்ப் போல்டு ஆகி ஹாட் ட்ரிக் எடுத்தால் எப்படி இருக்கும் என. நினைத்தபடியே அடுத்து வந்த சாட்ஃபீல்டின் மட்டையைத் தாண்டிக் கொண்டு போன பந்து லெக் ஸ்டம்பைப் பெயர்த்து எடுத்து விடும். இன்று சற்று நேரம் இந்தியா - ஆப்கானிஸ்தான் மேட்ச்சைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றைய 20-20 பரபரப்பில், கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுப்பது எல்லாம் ஜுஜுபி விஷயமாச்சே என ஆஃப்கானிஸ்தானின் சேஸிங்கைப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் அந்த மாயாஜாலம் மீண்டு...
முள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்

முள்ளும் மலரும் – உச்சத்தைத் தொட்ட மகேந்திரன்

சினிமா
மகேந்திரனுக்குப் புனைவுகளைப் பற்றிய நுண்மையானதொரு புரிதல் இருந்தது. அதைப் பார்வையாளனை உள்ளிழுக்கும் விதமாகத் திரைமொழியாக மாற்றும் வித்தை இயல்பாக அமைந்திருந்தது. புதுமைப்பித்தனிடமிருந்து அவர் உந்துதல் பெற்று உதிரிபூக்கள் எழுதினார் என்பது ஒன்றே அவருடைய படைப்பூக்கத்தின் மேன்மைக்கு சான்று. உதிரி பூக்கள் தமிழ் சினிமாவிற்கான அடையாளத்தில் ஒன்று. அவருக்கு மிகச் சிறப்பான திரைமொழி ஞானம் இருந்தது. அது அவருக்கு இயல்பாக அமைந்திருந்தது. ‪‘முள்ளும் மலரும்’ குறுநாவலாக பரிசு பெற்ற படைப்பு. ஆனால் மகேந்திரனின் திரைக்கதை அமைப்பில் அது இன்னமும் சில உச்சங்களைக் கண்டது. ‬ காளிக்குத் தன்னுடைய மேலதிகாரி மீது தீராத எரிச்சல். அவர் பேசும் இறுக்கமான சட்டதிட்டங்கள் அவனுடைய சாதாரண வாழ்க்கையைக் குறையுள்ளதாகக் காட்டுகிறது. ஆனால் அந்த அதிகாரியும் காளியின் தங்கையும் ஒருவர்பால் ஒருவர் ஈர்ப்புக் கொள்கிறார்கள். இதை சாதாரண...
நோய் முதல் நாடி #MeToo

நோய் முதல் நாடி #MeToo

சமூகம்
முறைகேடான பாலியல் விழைவால் ஒரு தனிமனித அத்துமீறல் நடக்கிறது என்றால், அதற்கு முக்கிய தூண்டுதலாக இருப்பது மூன்று விஷயங்கள். தன்னை / தன் உடலை, தன் விருப்பத்திற்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்கிற புரிதல் இல்லாத விக்டிம்கள் (பாதிக்கப்பட்டவர்கள்). அடுத்து, இது ஓர் அத்துமீறல் என்கிற உணர்வே இல்லாது இருக்கும் சுற்றுப்புறத்திலிருப்பவர்கள். மூன்றாவதாக, தங்கள் வக்கிரத்தை மறைத்து, அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் கயவர்கள். தற்போது பெருகிவரும் பாலியல் குற்றசாட்டுகளை முன்னிறுத்தி, பாடகர் டி.எம்.கிருஷ்ணா ஒரு அறிவுறுத்தல் நிகழ்வை (counseling session) ஒருங்கச் செய்திருந்தார். அப்போது நான், 'பலருக்கும் எது அத்துமீறல் என்பதே புரியாது இருக்கும் நேரத்தில் இது போன்ற செஷன்கள் முக்கிய தேவை' எனக் குறிப்பிட்டிருந்தேன். இது இருபுறத்தார்க்கும் பொருந்தும். நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நா...
காலா நிகழ்த்தும் வண்ணக்கோலங்கள்

காலா நிகழ்த்தும் வண்ணக்கோலங்கள்

சினிமா
என்னுடைய அண்மைக்கால கொள்கையில் ஒன்றாக, இயன்றளவு கேளிக்கைக்குக் குறைவாகப் பணம் செலவழிப்பது என்று எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். விலையில்லாமலே எவ்வளவோ சிறந்த புத்தகங்களும், நல்ல எழுத்துகளும், தரமான ஆவணப்படங்களும் காணக் கிடைக்கின்ற இக்காலத்தில், ஏனோ நாம் peer pressure-இல் அதிக பணம் செலவழித்து, புதிய படங்களைப் பார்க்க ஓடுகிறோம். அதுவும் ரஜினிகாந்த் போன்ற செல்வாக்கான, பெரும் ஆளுமைகள் நடித்த திரைப்படம் என்றால் நம் ஆவல் கட்டுக்கடங்காமல் பெருகி விடுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் 'காலா' திரைப்படத்தைப் பற்றி நிறைய எதிர்பார்ப்புகள் பெருகி வர, திரைப்படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித்தின் பேட்டிகளும், முந்தைய படங்களும் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. 'நான் திரைப்படம் எடுக்க வந்திருப்பதே, நான் நம்பும் கருத்தியலை, பொதுமக்களுக்கான வெளியில் பேசுவதற்காகத்தான்' என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். இதுத...