Shadow

Tag: A Star is born movie review

எ ஸ்டார் இஸ் பார்ன் விமர்சனம்

எ ஸ்டார் இஸ் பார்ன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் வில்லியம் A.வெல்மேன், 1937இல் எழுதி இயக்கிய படம் 'எ ஸ்டார் இஸ் பார்ன்'. 1954 இல் ஒருமுறையும், 1976 இல் மறுமுறையும் ஹாலிவுட்டிலேயே இப்படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தைத் தழுவி பாலிவுட்டில் கூட ஆஷிக்கி 2 எனும் படம் வெளிவந்தது. அஃபிஷியலாக இப்படம் நான்காம் முறையாக இம்முறை ரீமேக் செய்யப்படுள்ளது. பார்வையாளர்கள் நிரம்பி வழியும் மேடையில், ஜாக்ஸன் மெய்ன் எனும் புகழ்பெற்ற இசைக் கலைஞனின் அறிமுகம் நிகழ்கிறது. அடுத்த கணமே அவன் போதை வஸ்துக்களுக்கு அடிமையானவன் என்பதையும் அதற்கான அவனது பிரயத்தனங்களுமாய் கதை நகரத் துவங்குகிறது. என்றேனும் பெரிய ஸ்டார் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையோடு மதுபான விடுதி ஒன்றில் பாடிக்கொண்டிருக்கும் ஆலியை ஜாக்ஸன் சந்திக்க, அவளது அசாத்திய குரல் வளத்தைக் கேட்டு அசந்து போகிறான். அன்றைய இரவு முழுவதும் இருவரும் தங்கள் விருப்பு வெறுப்புக்களைப் பரஸ்பர...