Shadow

Tag: Agent Kannayiram movie thirai vimarsanam

ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்

ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வஞ்சகர் உலகம் எனும் படத்தை இயக்கிய மனோஜ் பீதா, ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா’ எனும் தெலுங்குப் படத்தை மறு உருவாக்கம் செய்துள்ளார். இரயில்வே பாதையின் ஓரமாகக் கிடைக்கும் அநாமதேய பிணங்களின் பின்னணியில் நிகழும் பகீர் குற்றங்களை டிடெக்டிவான ஏஜென்ட் கண்ணாயிரம் அவிழ்ப்பதுதான் படத்தின் கதை. சந்தானத்தை டிடெக்டிவாக அறிமுகப்படுத்தும் காட்சியே படுபயங்கர சொதப்பல். அங்கு தொடங்கும் சொதப்பலைப் படமெங்கும் பல காட்சிகளில் தொடர்கின்றன. தந்தையின் முதல் மனைவி வாரிசுகளுடன் சொத்துப் பிரச்சனை என ஊரில் தங்குபவர், ஒரு காரைப் பார்த்து அதை எந்தக் கேள்வியுமின்றி ஓட்டிக் கொண்டு வருகிறார். அது அவர் உபயோகித்த காரா அல்லது பாகப்பிரிவனையில் அவருக்காக ஒதுக்கப்பட்ட காரா என்பதிலெல்லாம் தெளிவில்லை. காட்சிகளின் நகர்விலுள்ள இத்தகைய தெளிவின்மைதான் படத்தின் மிகப் பெரும் மைனஸ். டைட்டில் கார்ட் போடும் பொழுது வரும் அனிமேஷன் ரசிக...