
புஷ்பா: தி ரைஸ் விமர்சனம்
ஓரு தெலுங்கு சினிமாவை விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்வதா என்ற தயக்கம் என்னிடம் எப்போதுமே உண்டு. பார்வையாளர்களின் சிந்தனையை முடக்கிப் போடும் தெலுங்குத் திரையுலகின் ஹைப்பர் சினிமாத்தனமும், லாஜிக்கல் அத்து மீறல்களும் உலகமே அறிந்த ஒன்று. இதற்கு புஷ்பா மட்டும் விதி விலக்கா என்ன?
இல்லை. இது அச்சு அசல் ஒரு தெலுங்கு சினிமாதான். அதே லட்சணங்களோடுதான் இந்தப் படமும் இருக்கிறது. ஆனாலும் என்னைக் கவர்ந்த சில அம்சங்கள் இதில் இடம் பெற்று இருப்பதை நான் குறிப்பிட்டு ஆக வேண்டும்.
அவை, பாத்திர வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, வட்டார மொழிப் பயன்பாடு, உடல்மொழி, இலக்கு மாறாமை ஆகியனவாகும்.
சமீபத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ என்ற படத்தின் வெற்றி குறித்து விதந்தோதிக் கொண்டிருந்தோம். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ‘சீரியசான’ முக பாவத்தோடு நடித்து இருந்ததற்கு வெகுவான பாராட்டினைப் பெற்றிருந்தார். சீரியசான ஒர...