Shadow

அல்லு அர்ஜுனின் – என் பெயர் சூர்யா

En Peyar Surya En Naadu India

ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் நாகபாபு தயாரித்துள்ள படம் ‘என் பெயர் சூர்யா – என் வீடு இந்தியா’. அல்லு அர்ஜுன், அனு இம்மானுவேல், அர்ஜுன், சரத்குமார், நதியா, பொமன் இரானி நடித்திருக்கின்றனர்.

“அல்லு அர்ஜுன் கேரியரில் இது ஒரு சிறந்த படம். இந்தப் படத்தைப் பார்த்தவுடன் என் பெயர் ஸ்ரீதர், என் வீடு இந்தியா என்று தான் சொல்லத் தோன்றியது. பாகுபலி, பாகமதி உட்பட தெலுங்குப் படங்களைத் தமிழ்நாட்டில் முழுமனதோடு வரவேற்ற அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. இந்தப் படத்துக்கும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார் தயாரிப்பாளர் ஸ்ரீதர் லகடபாடி.

“பாகுபலிக்குப் பிறகு இந்திய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும் இந்தப் படத்தில் நான் வேலை செய்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தியாவுக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கதாபாத்திரம் தான் நாயகன் அல்லு அர்ஜுன் கதாபாத்திரம்.

தளபதி ரஜினி சார், நடிகர் சூர்யா என சூர்யாவுக்கும் தமிழ் சினிமாக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. ஏ.ஆர்.ரகுமானுக்கு ‘ஒரு வந்தே மாதரம்’ மாதிரி விஷால் சேகருக்கு இந்த ஆல்பம் இருக்கும். படத்துக்குத் தேவையான அனைத்தையும் தயாரிப்பாளர்கள் வழங்கி இருக்கிறார்கள். படத்தைப் பார்க்கும் போது அந்தப் பிரம்மாண்டத்தை ரசிகர்கள் உணர்வார்கள்” என்றார் வசனகர்த்தா விஜய் பாலாஜி.

தமிழ்நாடு முழுக்க சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார். “பல பி டப்பிங் படங்கள் நேரடி தமிழ்ப் படங்களாக வெளி வரும். ஆனால் இந்தப் படமோ நேரடி படமாக வந்து இருக்க வேண்டியது. ஸ்ட்ரைக் மூலம் ஏற்பட்ட சிறிய வேலை தொய்வினால் டப்பிங் படமாகவே வெளி வருகிறது. கேப்டன் பிரபாகரன் படத்துக்குப் பிறகு சரத்குமார் வில்லனாக நடிக்கிறார். இது ஒரு ஆக்‌ஷன் படம் என்பதையும் தாண்டிக் குடும்ப உறவுகளையும் பிரதிபலிக்கும் படம். முதல் முறையாக, இந்தப் படத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன். படத்தின் மீது அந்த அளவு நம்பிக்கை இருக்கிறது” என்றார் படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தர் சக்திவேலன். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நாளில் – மே 4 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.