Shadow

Tag: Amit Ravindernath Sharma

மைதான் விமர்சனம்

மைதான் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தலைப்பையொட்டிப் படத்தின் 90 சதவிகிதத்திற்கு மேலான காட்சிகள் கால்பந்து மைதானத்திலேயே நடக்கின்றன. ஃபின்லாந்தில் நடக்கும் 1952 ஹெல்ஸின்கி ஒலிம்பிக்ஸில் தொடங்கும் படம், 1962 இல் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடக்கும் ஆசியப் போட்டிகளில் படம் முடிகிறது. இந்தப் பத்து ஆண்டுகளில், கால்பந்து பயிற்றுநர் (Football Coach) சையத் அப்துல் ரஹீமின் தலைமையில் இந்தியக் கால்பந்து அணி மேற்கொண்ட பயணத்தை உணர்ச்சிப்பூர்வமாகத் திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் அமித் ரவிந்தர்நாத் ஷர்மா. யுகோஸ்லோவியாவுடனான படுதோல்விக்குப் பின், இந்தியக் கால்பந்து அணியின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் சமயத்தில், அதை மீட்டெடுக்கும் பொறுப்பை ஏற்கிறார் S.A.ரஹீம். செகந்திராபாத்தின் குடிசைப் பகுதியில் இருந்து துளசிதாஸ் பலராமனையும், கல்கட்டாவிலிருந்து பிரதீப் குமார் பேனர்ஜியையும் தேர்ந்தெடுக்கிறார். பலமான இந்திய அணியை உருவாக்க...