Shadow

Tag: Anushka

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணமே வேண்டாம் என்று இருக்கும் நாயகி,  தன் அம்மாவின் மறைவுக்குப் பின்னர், தனக்குத் துணையாக ஒரு குழந்தை வேண்டும் என்று நினைக்கிறார்.  அந்தக் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்பாமல்,  தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.  இதற்காக  மருத்துவரை சந்தித்து விளக்கம் கேட்கும் நாயகி அங்கிருக்கும்  ஸ்பேர்ம் டோனார்கள் மீது ஏற்பட்ட திருப்தியின்மையினால் தன் வயிற்றில் உருவாகப் போகும் குழந்தைக்கு உயிர் கொடுக்கும் (ஸ்பேம் கொடுக்கும்) டோனாரை நானே தேர்வு செய்து அழைத்து வரலாமா என்று கேட்க, டாக்டரும் அதற்கு சம்மதிக்க. தனக்கான ஸ்பேம் டோனாரைத் தேடி தன் தோழியுடன் அலைகிறார்.  அப்படி நாயகியும் அவள் தோழியும் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் நாயகன் ஒருகட்டத்தில் நாயகியை விரும்பத் துவங்க, சிக்கல் முளைக்கிறது.  இதற்குப் பின்னர் என்ன ஆனதே என்பதே மிஸ் ஷெட்டி ...
பாகமதி விமர்சனம்

பாகமதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அருந்ததீ அனுஷ்காவை மனதில் கொண்டு பாகமதி உருவாக்கப்பட்டிருக்கிறாள். ஓர் அமைச்சரின் மீது பழி போட, அவரது பெர்ஸனல் செகரெட்டரியும், கொலைக் குற்றவாளியுமான ஐ.ஏ.எஸ். அனுஷ்காவை விசாரணைக்காகப் பாகமதிக் கோட்டையில் அடைக்கின்றனர். அக்கோட்டையில், இரவில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடைபெறுகின்றன. அக்கோட்டையின் அமானுஷ்ய அச்சுறுத்தல்களில் இருந்தும், விசாரணையில் இருந்தும் பாகமதி எப்படித் தப்பினார் என்பது தான் படத்தின் கதை. படம் ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லர். மிகவும் நல்லவரான அமைச்சர் ஜெயராமை எந்த வழக்கிலாவது சிக்க வைக்க வேண்டுமென சி.பி.ஐ. முடுக்கி விடப்படுகிறது. 'பவர் பாலிடிக்ஸ்' என்றால் என்னவென்றும், அது எப்படி அதிகார வர்க்கத்திற்குச் சாத்தியமாகிறது என்பதையும் படம் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். அனுஷ்கா வழக்கம் போல் அசத்தியுள்ளார். அவருக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் அல்லவா? ஆனால், ஃப்ளாஷ்...
பாகுபலி 2 விமர்சனம்

பாகுபலி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாகுபலி - தொடக்கம் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் எவ்வளவு உழைப்பினைச் செலுத்தியுள்ளனர் என்ற பிரமிப்பு, டைட்டில் கார்டிலிருந்தே தொடங்கி விடுகிறது. நல்ல திரையரங்கில் இப்படத்தினைப் பார்த்தால், அதன் பிரம்மாண்டத்தில் இருந்தும், விஷூவல் மேஜிக்கில் இருந்தும் மீளக் குறைந்தது ஓரிரு நாட்களாவது ஆகும். நேரடியாக ஃப்ளாஷ்-பேக்கிற்குள் நுழைந்து விடுகின்றனர். இயக்குநர் ராஜமெளலி சொன்னது போல், கதாபாத்திரங்களை முதல் பாகத்தில் ரசிகர்களுக்கு அறிமுகம் மட்டுமே செய்து வைத்துள்ளார். உண்மையில், கதை இந்த முடிவில் தான் தொடங்குகிறது. படத்தின் முதல் பாதி மிக அற்புதமானதொரு கலைப் படைப்பு. அமரேந்திர பாகுபலியின் அசத்தலான அறிமுகம், பிங்கலதேவனின் வில்லத்தனம், தேவசேனையின் அறிமுகம், கள்வர்களுடனான சண்டை, இயற்கைச் செறிவாய்ப் பூத்துக் குலுங்கும் குந்தல தேசம், தேவசேனை மீதான பாகுபலியின் காதல், கட்டப்பாவின் நகைச்சுவை, பல்வாழ்தேவனி...