65 விமர்சனம்
ஆறரை கோடி வருடங்களுக்கு முன், சோமாரிஸ் எனும் கிரகத்தில் இருந்து, ஒரு விண்கப்பல் கிளம்புகிறது. பயணத்தின் போது சிறுகோளின் (Asteroid) துகள் மோதி, மனித இனம் தோன்றியிராத பூமியில் வந்து விழுகிறது அக்கப்பல். கப்பலைச் செலுத்தி வந்த மில்ஸும், கடுங்குளிரியல் உறக்கத்தில் (Cryogenics sleep) இருக்கும் கோவா எனும் சிறுமி மட்டும் உயிர் பிழைக்கின்றனர். கடுங்குளிரியல் உறக்கத்தில் இருக்கும் மற்ற பயணிகள் அனைவரும் இறந்து விடுகின்றனர்.
மில்ஸும் கோவாவும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள். அவர்கள் இருவரும் அந்தக் கோர விபத்தில் இருந்து மீண்டு எப்படி டைனோசர் போன்ற கொடிய மிருகங்களிடம் இருந்து உயிர்பிழைத்துத் தப்பிக்கின்றனர் என்பதே படத்தின் கதை.
ஹாலிவுட் படங்களில் ஒரு டெம்ப்ளேட்டைப் பயன்படுத்துவார்கள். இயற்கைப் பேரழிவு என்றாலும், உயிர்பிழைக்கும் சர்வைவல் த்ரில்லர் என்றாலும் சரி, பிரதான பாத்திரங்களுக்கிடையேயான பாசத்தைம் ப...