அசாசின்ஸ் கிரீட் விமர்சனம்
அசாசின்ஸ் க்ரீட் – ஓர் அறிமுகம்
க்ரீட் என்றால் நம்பிக்கை. அசாசின்ஸ்க்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. விருப்பம் போல் வாழுபவர்கள். சுதந்திர உணர்வோடு திரிபவர்கள். ஆனால், டெம்ப்ளர்ஸ்களோ அதீத ஒழுக்கக் கோட்பாடுகள் உடையவர்கள். மக்களின் சிந்தனையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, உலகையே ஒழுக்கமாக மாற்றத் துடிப்பவர்கள். அப்பேராசை சாத்தியமாக அவர்களுக்கு அசாசின்களிடமுள்ள ‘ஆப்பிள் ஆஃப் ஈடன்’ எனும் விதை தேவைப்படுகிறது. அதிலிருந்து தான் மனிதனின் முதல் ஒழுங்கீனச் செயல் பிறந்ததாகக் கருதுகிறார்கள். அவ்விதையை மட்டும் டெம்ப்ளர்ஸ்கள் அடைந்து விட்டால், அதைக் கட்டுக்குள் கொண்டு வந்து, ஒழுக்கமான உலகைக் கொண்டு வந்துவிடலாம் என நினைக்கின்றனர்.
ஆறு நூற்றாண்டுகளாக ‘ஆப்பிள் ஆஃப் ஈடன்’-ஐத் தேடி வருகிறார்கள் டெம்ப்ளர்ஸ். 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, அக்கொய்லர் (Aquilar de Nerha) என்பவர் அதை மறைத்து விடுகிறார். இந்த ...