Shadow

Tag: Asterix & Obelix

ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ்: தி மிடில் கிங்டம் விமர்சனம்

ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ்: தி மிடில் கிங்டம் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட காமிக்ஸ் புத்தகத் தொடரின் அடிப்படையில், இதுவரை 10 அனிமேஷன் படங்களும், 4 திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அவை, ‘ஆஸ்டெரிக்ஸ் & ஓபிளிக்ஸ் டேக் ஆன் சீஸர் (1999)’, ‘ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ்: மிஷன் க்ளியோபட்ரா (2002)’, ‘ஆஸ்டெரிக்ஸ் அட் தி ஓலிம்பிக் கேம்ஸ் (2008)’ & ‘ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ்: காட் சேவ் பிரட்டானியா (2012)’ ஆகும். இந்தத் திரைப்படத் தொடரின் வரிசையில், ‘ஆஸ்டெரிக்ஸ் & ஓபிலிக்ஸ்: தி மிடில் கிங்டம்’ எனும் ஐந்தாவது படம் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் திரைக்கதை, காமிக்ஸ் புத்தங்களின் அடிப்படையில் எடுக்கப்படாமல், தனிக்கதையைக் கொண்ட நேரடிப் படமாக முதல்முறையாக இயற்றப்பட்டுள்ளது. தனது அம்மாவையும், தாய் நாட்டையும் காப்பாற்றித் தரும்படி, நீண்ட நெடிய பயணம் செய்து, ரோமப் பேரரசுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கும் ...