Shadow

Tag: Beatrix Potter

ஜெமீமா வாத்து – இது பிராணிகளின் தோட்டம்

ஜெமீமா வாத்து – இது பிராணிகளின் தோட்டம்

புத்தகம்
மிகவும் பிரபலமான குழந்தைகள் எழுத்தாளரும் ஓவியருமான ப்யாட்ரிகஸ் பாட்டரின் கதைகளை முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர் வானம் பதிப்பகம். குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதியின் மிக எளிமையான மொழிபெயர்ப்பு இந்நூலின் பெரும் வரபிரசாதம். ஒரு மொழிபெயர்ப்பினைப் படிக்கிறோம் என்ற அயற்சியைத் தராமல் நேரடி தமிழ்க் கதையைப் படிப்பது போல் உள்ளது சிறப்பு.  1866 ஆம் ஆண்டு பிறந்த ஹெலன் ப்யாட்ரிக்ஸ் பாட்டரின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவரது வயதினையொத்த சிறுவர்களுடன் பழகும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டது. பிராணிகளை வளர்ப்பது தான் அவரது முன் இருந்த ஒரே பொழுதுபோக்கு. இங்கிலாந்தில் பிறந்த அவரது விடுமுறைக் காலம் இயற்கை எழில் கொஞ்சும் ஸ்காட்லாந்தில் கழிந்தது. இத்தகைய சூழலில் வளர்ந்தவர், பின்னாளில் ‘ஹெர்ட்விக் ஆட...
பீட்டர் ரேபிட் விமர்சனம்

பீட்டர் ரேபிட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பீட்டர் ரேபிட் எனும் முயல் பாத்திரத்தினை, 1902 ஆம் ஆண்டு, ‘தி டேல் ஆஃப் பீட்டர் ரேபிட்’ எனும் புனைவில் அறிமுகப்படுத்தினார் எழுத்தாளர் ப்யாட்ரிக்ஸ் பாட்டர். ஆனால், 1893 ஆம் ஆண்டே, நோய்வாய்ப்பட்ட ஒரு சிறுவனைக் கலகலப்பூட்ட கடிதங்களில் எழுதப்பட்ட கதையின் நாயகனே பீட்டர் ரேபிட். துறுதுறுவெனப் பக்கத்துத் தோட்டத்தில் காய்கறிகளைத் திருடி உண்ணும் சாகசக்கார பீட்டர் ரேபிட்டைக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும். மிக நேர்த்தியான லைவ் ஆக்ஷன் படமாக உருவாக்கியுள்ளனர் சோனி பிக்சர்ஸ் அனிமேஷன். அனிமேஷன் என்ற வார்த்தைப் பார்த்ததும் 2டி, 3டி போல் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டாம். உடை அணிவிக்கப்பட்ட உயிருள்ள முயல்களை அப்படியே பாத்திரங்களாகத் திரையில் உலாவ விட்டுள்ளார்கள். தன் பெற்றோரை இழந்து வாடும் பீட்டர் ரேபிட், ப்யா எனும் பெண்ணின் பாசத்தில் திளைக்கிறது. ப்யாவிற்கும், பக்கத்து வீட்டில் குடியேறும...