Shadow

Tag: Bheeshma

‘பீஷ்மரை இகழ்தல் இலமே!’ – கர்ண சுபாவம்

‘பீஷ்மரை இகழ்தல் இலமே!’ – கர்ண சுபாவம்

ஆன்‌மிகம்
கர்ணன் சிறந்த நண்பனா? கர்ணன் படத்தில் ஒரு காட்சி வரும். களத்தில் பீஷ்மர் வீழ்ந்திருக்கிறார். கர்ணன் ஓடி வந்து  கேட்கிறான். "ஐயகோ, வீர மாமலை சாய்ந்ததா? வீரத்தின் விளை நிலம் தரிசாகிப் போனதா? பகை குணத்தால் உம்மோடு துணை நில்லாமல் நம்முள் புரையோடச் செய்துவிட்டேனே! என்னை மன்னித்துவிடுங்கள்" என பீஷ்மரிடம் கேட்கிறான் கர்ணன். எப்பொழுது? பத்தாவது நாள் போரின் முடிவில். பீஷ்மரும் பெருந்தன்மையாக, "கர்ணா விதி வலியது. சென்றதை மற. வீரனே உன்னை நான் ஒதுக்கியதன் உள் நோக்கம் நீ அறியாய்.  மஹாரதி கர்ணன் என்ற மதிப்புக்கு உரியவன் நீ. உன்னை வெல்ல வல்லவன் யாரும் இல்லை. எத்தனைப்பேர் இறப்பினும் எனக்குக் கவலை இல்லை. ஒரு சூதும் அறியாத இந்தத் துரியோதனனை கடைசி வரை உடனிருந்து காத்துத் தரவேண்டும் என்ற காரணத்திற்காக உன்னைத் தனியாக  ஒதுக்கி வைத்தேன். வீரனல்லவா நான்? வீரத்தை வீரம் அவமதிக்குமா கர்ணா?" ...
கர்ணன் சிறந்த நண்பனா?

கர்ணன் சிறந்த நண்பனா?

ஆன்‌மிகம், கதை
கர்ணன் கொடையாளியா? மைத்தடங்கண் மாதேவி வார்துகிலை யான்பிடிக்க அற்று விழுந்த அருமணிகள் - மற்றவற்றைக் கோக்கேனோ என்றுரைத்த கொற்றவர்க் கென்னாருயிரைப் போக்கேனோ வெஞ்சமத்துப் புக்கு என்று பாரத வெண்பாவில் வருகிறது. இது பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவர் எழுதிய நூல். வில்லி புத்தூராரும், 'மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு அறத் திகழும் ஏகாந்த இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ? கோக்கவோ?'" என்றான்; திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச் சென்று, செஞ்சோற்றுக் கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும், தருமமும்!' என்றான். என எழுதியுள்ளார். இதில் யார் முதல் என்று தெரியவில்லை. அதாவது துரியோதனன் மனைவி கர்ணனுடன் சொக்கட்டான் விளையாடுகிறாள். அப்போது துரியோதனன் உள்ளே வருகிறான். அவன் வருவது கர்ணனின் பின் பக்கம், அவள் பார்த்து எழுந்துவிட, கர்ணன் தோல்வி...