பிக் பாஸ் 3: நாள் 90 | ‘நேர்மை வென்றது’ – முகினைப் பாராட்டிய கமல்
கமல் வருகை. கீழடி ஆய்வு, தமிழ், கலாச்சாரம் எனக் கொஞ்ச நேரம் அடித்து ஆடினார்.
வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்
சைக்கிள் டாஸ்க் தொடந்து கொண்டிருந்தது. 5 மணி நேரத்திற்குப் பின், லாஸின் சைக்கிளின் சக்கரத்தில் துணி ஒன்று மாட்டிக் கொள்ள, சைக்கிள் ஓட்ட முடியாமல் போனது. கீழே இறங்கியவர், அப்படியே மடங்கி அமர்ந்தார்.
பொது இடத்தில், ஒரு பெண்ணிற்கு உதவி தேவைப்படும் போது, நெருங்கிய உறவாக இருந்தாலும், சற்று விலகி நின்று, இன்னொரு பெண்ணை உதவச் செய்வது தான் சரியான முறை. மனைவியாகவே இருந்தாலும், அதைச் செய்வது தான் சரி. ஆனால் பிக் பாஸ் வீட்டில் எந்த பெண்ணுமே இல்லாத மாதிரி, எல்லா வேலையும் கவினே இழுத்துப் போட்டுச் செய்கிறார். இத்தனை கேமரா இருக்கின்றன, இதைப் பார்க்கிற குடும்பங்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. தன் அன்பை இப்படி வெளிக்காட்டியே ஆகவேண்டுமென அவசியமே இல்லை. இங்கே ஷெரின...